
நாட்டில் போலித்தனமான அரசியல் செய்வதை விட,போலித்தனமான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு,பெரிய பத்திரிக்கை,தொலைக்காட்சி என்று காட்டிக் கொள்வதை விட,மக்களை ஏமாற்றும் அரசியல்! வேறு ஒன்றும் இல்லை. இது இரண்டுமே ஒன்றுதான். மேலும்,

மக்களுக்கு அரசியல் என்றால் தெரியாது. பத்திரிக்கை என்றால் தெரியாது. அதனால்,,நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.அது படிக்காத மக்கள் இடம் தான் அந்த அரசியல்.ஆனால்,
படித்தவர்கள் சிந்திக்கிறார்கள்.எதற்காக அண்ணாமலை கைதாகி,சிறைக்கு செல்ல வேண்டும்? மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்ய, நீங்கள் ஏன் கைதாக வேண்டும்? என்பதுதான் படித்த மக்களின் அரசியல் கேள்வி?

அதேபோல்,தமிழிசை சௌந்தரராஜனும் மக்களை முட்டாள் ஆக்கும் அரசியல்தான், 50 ஆண்டு கால அரசியலாக, அதிமுக, திமுக செய்த அதே அரசியல் தான் செய்கிறார்கள். மேலும், நாட்டில் இப்படிப்பட்ட ஊழல் அரசியலுக்கு துணை போய்க் கொண்டு பஸ் பாஸ், விளம்பரங்கள் போன்றவற்றை அனுபவித்துக் கொண்டு,அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த பத்திரிக்கை,தொலைக்காட்சிகள்.மேலும்

மாநில அரசியல் மந்திரியாக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை மாநில அரசே கைது செய்ய சொல்லி இவர் போராட்டம் நடத்துகிறாரா? தப்பே செய்தாலும் அவர்களுடைய மந்திரியை அவர்கள் எப்படி கை செய்வார்கள்? மேலும், மத்திய அரசு தான் இந்த ஊழலை ரெய்டு நடத்தி ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான். மாநில அரசு அல்ல.

தவிர, மத்தியில் அதிகாரத்தில் இருப்பது பிஜேபி அரசு தான். அப்படி இருக்கும்போது அண்ணாமலை, அமலாக்கத் துறையை கையில் வைத்திருக்கும் அமித் ஷாவுக்கு தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் கோஷம் போட்டு கொடி பிடித்து கூட்டமாக கைதாகி மக்களிடம் அரசியல் பரபரப்பு காட்டுவது படித்த மக்களின் அரசியல் அதை ஏற்கவில்லை. மேலும்,
இப்படி எதுவுமே இல்லாத ஒரு அரசியலுக்கு போலீஸ் வேனில் ஏற்றி, அதில் கோஷம் போடுவதும், அதில் தொலைக்காட்சிகள் மைக்கை நீட்டி கொண்டிருப்பதும், தமிழக மக்களுக்கு புளித்துப்போன அரசியல்.

இந்த அரசியலும்,போலி ஊடக பிம்ப அரசியலும், நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் தராது. அப்படி பார்த்தால் அண்ணாமலையின் கைது விவகாரம் செந்தில் பாலாஜி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடுமா? இது தான் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி? மேலும்,மக்களுக்காக, மக்கள் நலனில்,என்றும் மக்கள் அதிகாரம்.