அதிமுக, பாஜக கூட்டணி முடிவு  நாடாளுமன்ற தேர்தலில் ! அது திமுகவின் வெற்றிக்கு சாதகமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக ,பாஜக கூட்டணிப் முடிவு, திமுக வெற்றிக்கு அது சாதகமாக இருக்கும் என்று பத்திரிகை விமர்சகர்கள், மற்றும் அவர்களுக்கு சாதகமான பத்திரிகைகள், தெரிவிக்கும் கருத்து .ஆனால், பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணி முடிவு எந்த நேரத்திலும், என்ன நடக்கும் ?என்று சொல்ல முடியாது ஒரு குழப்பத்தில் அதிமுக கட்சி இருந்து வருகிறது .மக்கள் அதிகாரத்தில் முன்னமே சொன்னது போல, இதில் அதிமுக கட்சி உடைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சி பக்கம் காலை நீட்டும் போது அக்காட்சியை பிளவு படுத்த இரண்டாம் கட்ட முக்கிய தலைவர்கள் ஒன்று கூடி விடுவார்கள்.

 இது தவிர, சசிகலா அதிமுகவின் மிகப்பெரிய பிம்பம். அதனுடைய வலிமை அக்கட்சியினருக்கு தான் தெரியும். அதனால், எடப்பாடி பழனிசாமியும் சரி, ஓபிஎஸ் ம் சரி ,சசிகலா என்றால் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தான் .அப்படி இருக்கும் போது, சசிகலா இப்போது பிஜேபியுடன் ரகசிய கூட்டில் இருந்து வருகிறார் .இவர்களுடைய அத்தனை ஓட்டைகளும், தெரிந்த ஒரே நபர் சசிகலா தான் .அதனால், அதிமுக அவ்வளவு எளிதில் காங்கிரஸ் பக்கம் சென்று விட முடியாது. காங்கிரஸ் பக்கம் அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுகவின் கதையை முடித்து விடுவார்கள். அதில் பிஜேபி உறுதியாக இருக்கும் .மேலும், அதிமுகவின் செல்வாக்கு மக்கள் இடத்தில் சரிந்து விட்ட ஒன்று.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தூக்கி நிறுத்தி விடுவாரா? என்பது சந்தேகம் தான். தவிர,,கூட்டணி பிளவுக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தன்னை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்ற ஒரே முடிவுக்கு பிஜேபி உடன்படவில்லை. இந்த நிலையில் பிஜேபி தனி கூட்டணி அமைத்தும், அதிமுக தனி கூட்டணி அமைத்தும், திமுக தனி கூட்டணி அமைத்தும், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்போது, தமிழ்நாட்டில் பெருவாரியான வாக்கு சதவீதம் எந்த கட்சிக்கும் இருக்குமா ?  என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மேலும்,அதிமுகவில் ஆளாளுக்கு தலைவர்கள் உருவாக்கி விட்டார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினம். அக் கட்சியினரை, கட்சி நிர்வாகிகளை, சமாளிப்பது கடினம்.

 இதுவும் தவி,ர சீட்டு கேட்டு வரும்போது ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி சமாளிக்க முடியுமா?  என்பது பெரிய சவாலாக தான் இருக்கும். இதனிடையில் இவருடைய வழக்குகள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போகும். அதிலிருந்து இவர் எப்படி மீள்வார்?  என்பது அது ஒரு புறம், மற்றொருபுரத்தில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபி எஸ் இவர்களை எல்லாம் சமாளிப்பது அதைவிட மிகப்பெரிய ஒரு விஷயம். அதனால் நெருக்கடியில் அதிமுக .இது திமுகவிற்கு சாதகமாக அமையுமா?

 திமுக கூட்டணிகள் அப்படியே இருந்தாலும் ,இந்த முறை அதிக அளவில் சீட்டுகளை கேட்பார்கள். அதற்கு ஒத்து வரவில்லை என்றால், அவர்கள் எந்த பக்கம் போவார்கள்?  என்று தெரியாது. இது தவிர, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்திகள் தான் இருக்கிறார்கள். இது தவிர, அரசு ஊழியர்கள் ,செவிலியர்கள், ஆசிரியர்கள் ,போக்குவரத்து துறை தொழிலாளர்கள், மின்சார வாரிய தொழிலாளர்கள் அத்தனையும் திமுகவிற்கு எதிராக இருக்கிறது.

மேலும், விலைவாசி  உயர்வு ,வரி உயர்வு, இவையெல்லாம் மக்களுக்கு மிகப்பெரிய சுமையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தற்போது மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் இதையெல்லாம் சரி செய்யுமா? என்றால் நிச்சயம் முடியாது. காரணம், இந்த ஆயிரம் ரூபாயை நடுத்தரவர்க்கும் ஒரு பெரிய அளவில் பார்க்கவில்லை. இதில் வாங்காதவர்கள் ஒரு பக்கம் அதிருப்தி . ஆக கூடி திமுக ஆட்சி நிர்வாகம் மக்களிடம் அதிருப்தி நிர்வாகமாக தான் உள்ளது.

இது தவிர்த்து, இந்துக்களுக்கு எதிரான சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சு, திமுகவிற்கு எதிரான ஒன்று. இனி என்னதான் தேர்தல் நேரத்தில் இவர்களுடைய பேச்சு ,மக்களை கவர்ந்து ஏமாற்ற முடியுமா?  என்ற கேள்வியில், திமுகவின் நிலைமை .அப்படி என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு கடும் போராட்டத்தின் வெற்றி என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *