அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ரகசியம் என்ன? பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியுமா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக கூட்டணிக்குள் பாஜக வர வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு .ஆனால், பாஜகவின் கூட்டணிக்குள் அதிமுக வரவேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு .இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி என்னவென்றால் ,கூட்டணிக்குள் பேரம் அதாவது தொகுதி உடன்பாடு அதிக அளவில் இரண்டு கட்சிகளுக்குள் உள்ள எதிர்பார்ப்புகள் தான். இந்த எதிர்பார்ப்புகளுக்குள் இருக்கும் அரசியல் ரகசியமே ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள்.

 அதாவது அதிமுக நாங்கள்தான் பெரிய கட்சி என்ற நினைப்பில் இருக்கின்ற ஒரு கட்சி .பாஜக தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து விட்ட கட்சி. இப்படி இருக்கும்போது, ஒருவருக்குள், ஒருவர் இந்த கருத்துக்கள் மோதலாக வெடித்துள்ளது. அதில் அண்ணாமலை ஒரு பிரஸ்மீட்டில் அண்ணாவை தள்ளி முத்துராமலிங்க தேவர் அக்காலத்தில் பேசியுள்ளார் .அது உண்மை சம்பவம் என்கிறார்கள் .அக்காலத்தில் அண்ணா எல்லாம் ஒரு பெரிய தலைவர் இல்லை. அவர்களெல்லாம் திண்ணையில் சீட்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள். எப்படியோ அதிர்ஷ்ட காத்து அடித்தது மேலே வந்தார் முதலமைச்சரானார்.

 ஆனால், அண்ணாவின் நிலை வேறு, முத்துராமலிங்க தேவரின் நிலை வேறு, முத்துராமலிங்க தேவர் கடவுளாக இன்றும் மதிக்கப்படுகிறார். அந்த அளவிற்கு அவர் தெய்வ பக்தி மிகுந்தவர் .முருகக் கடவுளின் அதி தீவிர பக்தர். அண்ணா கடவுள் மறுப்பாளர். இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் அப்போதும் இருந்துள்ளது .அந்தக் காலம் வேறு, இந்த காலம் வேறு, இப்போது இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தலைமை, ஜெயலலிதாவையோ ,எம்ஜிஆர்ரையோ நினைத்து பேசிக் கொண்டிருப்பது தவறான கருத்து .

அந்த நினைப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம்  பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலைமையில், அதிமுக நாலு இடத்தில் கூட ஜெயிக்குமா? என்ற நிலைமை தான் உள்ளது .மேலும் , அதிமுக திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அமைச்சர் சிவி சண்முகமும், ஜெயக்குமாரும் பேசிக்கொண்டே இருந்தால் யாருக்கு லாபம்? அதிமுக கூட்டணி சரியாக வரவில்லை என்றால், பிஜேபி, அதிமுகவின் எதிர் கூட்டணியான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உடனும், பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகளுடனும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. இது பாஜகவிற்கு மிகவும் சாதகமான ஒன்று.

இப்போதைய எதிர்ப்பு அதிமுக கட்சியான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி பாஜகவுடன் கூட்டணி சேரும் போது ,அவர்களே  பலமான கூட்டணியாக அமைய வாய்ப்புள்ளது .அதனால், அதிமுக, பாஜக கூட்டணி முடிவு பாஜகவிற்கு தான் அது சாதகம். அதிமுகவிற்கு அது பாதகம் தான். அதிமுக பணத்தை இரைத்து வாக்குகளை பெற்று விட முடியாது.

 ஏனென்றால், இந்த தேர்தல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், வரும் நாடாளுமன்ற 2024 தேர்தல் கடும் போட்டி என்பதை மறுக்க முடியாத உண்மை. இதில் ஒவ்வொரு கட்சியும் நெருப்பாற்றில் நீந்தி வருகின்ற நிலைமைதான். அந்த அளவிற்கு கடுமையாக தான் இருக்கும் . இங்கே கூட்டணியின் பலத்தை பொருத்து தான் வெற்றி ,தோல்வி அமையப்போகிறது. பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *