அமலாக்கத்துறை வங்கி கடன் மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது கோயலை கைது செய்துள்ளது .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 1992 இல் ஆரம்பிக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம். 2017 இல் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் இதனுடைய விமான சேவை 2019 நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2021 இல் விற்பனை செய்யப்பட்டது.

 விற்பனை செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கனரா வங்கியில் வாங்கிய 538 கோடி ரூபாய் திருப்பி தராமல் மோசடி செய்ததாக கனரா வங்கி புகார் அளித்ததன் பேரில் நரேஷ் கோயில் அவருடைய மனைவி அனிதா மற்றும் உயர் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அவருடைய வீடு அலுவலகம் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது.

 சோதனையில் குடும்பத்தார் உடைய தனிப்பட்ட செலவுகள் வாகன செலவுகள் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர ,பண மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது .பண மோசடி செய்த நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *