தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கலைஞருடைய நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை தான் கடைபிடித்து வந்துள்ளார். இவருக்கு அரசியல் ஆலோசகர் யார்? என்று தெரியவில்லை. தவறான வழிகாட்டுதலால், . இன்று திமுக அரசு மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.
ஒரு பக்கம் நிதிச் சுமை, நிதி நெருக்கடி ,மற்றொரு பக்கம் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஐடி ( I T )ரைட். திமுகவிற்கு அமலாக்கத் துறையின் நடவடிக்கை ஒரு பக்கம் அரசியல் என்று பார்த்தாலும், மற்றொரு பக்கம் அதில் தவறுகளும், ஊழல்களும் நடைபெற்று உள்ளது என்பதை மறுக்க முடியாது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது எதிர்க்கட்சிகளின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்று ஜெகத்ரட்சகன் சொத்துக்கணக்கு பட்டியல் அதிக அளவில் நீள்கிறது என்கிறார்கள். ஒரு காலத்தில் இவர் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் என்கிறார்கள். இன்று 26 ஆயிரம் கோடி இலங்கையில் முதலீடு செய்துள்ளார் .இப்படிப்பட்டவர் என்ன தொழில் செய்தார்? என்பது பொதுமக்கள் அனைவருக்கும் எழுகின்ற முக்கிய கேள்வி?மேலும்,
அரசியலில் சம்பாதித்தது, அத்தனையும் அதை தொழிலில் முதலீடு செய்திருக்கிறார். அரசியலுக்கு என்ன செலவு செய்தார்? அல்லது மக்களுக்கு என்ன சேவை செய்தார்? எந்த கணக்கு எடுத்தாலும், இவர் சம்பாதித்தது நேர்மையான வழி இல்லை என்பது மக்களின் பேச்சு. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு மூட்டை கட்டுவது திறமை என்றால், ஓட்டு போட்டவன் முட்டாளா? அல்லது ஏமாளியா? நீங்கள் நினைப்பது காசுக்கு ஓட்டு போட்டார்கள். அவன் நினைப்பது மக்களிடம் கொள்ளையடித்த பணம், அதை நான் வாங்கிக் கொள்கிறேன். இதில் என்ன தவறு ? இப்படி இரண்டுமே தவறுதான்.
அதனால், மக்கள் அந்த தவறை செய்வதால் தான், இன்று வாடகை வீட்டில் இருந்த ஜெகத்ரட்சகன் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார். இவரால் சமுதாயத்திற்கு என்ன பிரயோஜனம்? இந்த பணத்தை வைத்துக்கொண்டு, அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணம் போட்டு, பணத்தை 100 மடங்காக அதிலிருந்து எடுத்துக் கொள்வது. இது இவர்களுடைய திறமை என்று சொன்னாலும், அந்த திறமையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .மேலும் பிஜேபி அரசு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ,எம்பிக்கள் இவர்களின் பினாமி சொத்துக்கள் மற்றும் எந்தெந்த நாடுகளில் இவர்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்? எந்தெந்த நாடுகளில் இருந்து இவர்கள் பணம் பெற்று இருக்கிறார்கள்?
மேலும், ஜெகத்ரட்சகன் அதிமுக ஆட்சியில் அடித்த கொள்ளை, திமுக ஆட்சியில் அடித்த கொள்ளை, எத்தனை மனைவி என்று தெரியாமல், அவர்களுடைய சொத்து கணக்கு இதையெல்லாம் நாட்டுடைமையாக்க வேண்டும். இந்த Transaction தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும், அமலாக்கத்துறை ( ஐடி ( I T )ரைட்) இதை கொண்டு வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கருத்து., மேலும், ஜெகத்ரட்சகன் அமலாக்கதுறையால் விரைவில் கைது செய்யப்படுவார் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம் .
தவிர, திமுகவின் எம்பி, எம்எல்ஏ ,மந்திரிகள் அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு ஆளாக்கப்படும்போது, விரைவில் மு க ஸ்டாலின் குடும்பத்தை நெருங்குகிறதா? மேலும், இவை ஒன்றுக்குள் ஒன்று பிணைப்பு இருப்பதால் அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகனை வளைத்துள்ளது. மேலும்,,ஆடிட்டர் சண்முகராஜ்,செந்தில் பாலாஜி இவர்களுடைய விசாரணையின் பின்னணியில் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்திருக்க கூடும் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .