பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவதூறான விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள் .அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, இதையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை குறி வைப்பதாக தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டு.
அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக அமலாக்கத்துறை சோதனைகள், கைது நடவடிக்கைகள், நடந்து வருகின்றன. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு பாஜக அரசு அமலாக்க துறையை ஏவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டு .
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ ,அமலக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். எதிர்க்கட்சிகளை நசுக்க இவற்றை பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறது, என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி ,அமலாக்கத்துறை பற்றி பேசுவோம்.
அது என்ன எங்களால் உருவாக்கப் பட்டதா ?சட்ட விரோத பண பரிமாற்றம் தடை சட்டம் பி எம் எல் ஏ( PMLA) நாங்கள் உருவாக்கியதா? இவையெல்லாம் முதலில் இருந்தே இருக்கிறது .மேலும், E D ஒரு சுதந்திரமான அமைப்பு, அது சுதந்திரமாக வேலை செய்கிறது. அதை நாங்கள் தடுப்பதும் இல்லை. யார் மீதும் ஏவுவதும் இல்லை. நீதிமன்றங்களின் தராசுகள் தான் அதன் செயல்பாட்டை மதிப்பிட்டு முடிவு செய்கிறது. எங்களுக்கு நேரடியாக அமலாக்கத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது அமலாக்க துறையிடம் சுமார் 7000 வழக்குகள் உள்ளன.அவற்றில் அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அமலாக்கத்துறை செயல்பட்டது .அப்போது அவர்கள் பிடித்த பணம் 35 லட்சம். ஆனால்,இந்த ஆட்சியில் அமலாக்கத்துறை பிடித்துள்ள பணம் 2200 கோடி, இதன் அர்த்தம் என்ன? இந்த அமைப்பின் ரெய்டுகள் வெளியில் யாருக்கும் தெரியாது. அதனால், தான் இந்த பணம் பிடிப்படுகிறது. இந்த ரைடுகளில் பணம் மூட்டை மூட்டையாக பிடிப்படுகிறது.
பணத்தை வாஷிங் மிஷினில், வீட்டுக்கு தண்ணீர் செல்லும் பைப்புகளில் கத்தக்கதையாக பதுக்கி வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ஒருவர் வீட்டில் இருந்து 300 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பணம் மூட்டைகள் எடுக்கப்பட்டன. இதை எல்லாம் நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறார்களா? இது யாருடைய பணம் ?மக்கள் தான் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், டிரைவர் வாயில் வாங்கித் தருகிறேன் .டீச்சர் வேலை வாங்கித் தருகிறேன் என சொல்லி மக்களிடம் பணம் வாங்கி சேர்த்த பணம். இது பற்றி நான் சில சட்ட வழிமுறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் .யாரெல்லாம் அவர்களுக்கு பணம் கொடுத்தார்களோ, அந்த பணத்தை எல்லாம் அவர்களுக்கு திருப்பித் தர முடியுமா? என முயற்சி செய்து வருகிறேன். நாங்கள் கைப்பற்றிய பணத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே திருப்பி கொடுத்து விட்டோம்.
இந்த தேடலில் முடிவு கிடைத்ததும், யாருக்கு தொடர்பு இருக்கிறதோ, இந்த பணம் எங்கிருந்து வந்ததோ, அவரவர் பணத்தை அவரவருக்கே திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மக்கள் அதை பாராட்டுகிறார்கள். அமலாக்கத்துறை எல்லோருக்கும் ஒன்றுதான்.யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரே நடைமுறைதான். நாங்கள் இந்த வழக்கை முடித்துள்ளோம் என ஒரு உதாரணம் காட்ட முடியுமா? அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்கு தொடர முடியாது.
நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பில் வழக்கு பதிவு செய்து இருந்தால் அதைத் தொடர்ந்து தான் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். பி எம் எல் ஏ (PMLA) சட்டத்தை முடக்க 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. எல்லாமே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறை வேலை செய்யக்கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை நிற்காது என தெரிந்திருக்கிறார்கள் ,அதனால், தான் அமலாக்கத்துறையின் செயல்பாட்டை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தலாம் என பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.