உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் வந்து விட்டார். விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி எதை சொல்லப் போகிறாரோ? என்ற பயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். இதில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்? அடுத்தது செந்தில் பாலாஜி தன்னை தற்காத்துக் கொள்வாரா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தை மாட்டி விடுவாரா? இதுதான் அமலாக்கத் துறை விசாரணையில் நடைபெறப் போகும் சீக்ரெட்.
இதில் செந்தில் பாலாஜி எப்படி தப்பிக்கப் போகிறார் ?என்ற ஒரு அரசியல் எதிர்பார்ப்பு இருந்தாலும், இவருடைய தம்பி அசோக் ED யின் கஸ்டடியில் இருப்பதாக ரகசிய தகவல். இரண்டு பேரும் ED விசாரணையில், ஒரே தகவலை சொல்ல முடியாது. அதில் ஒருவர் மாற்றி சொன்னாலும், அந்த தகவலில் மற்றொருவரிடம் இருந்து பதிலை வாங்கி விடுவார்கள். மேலும், அமலாக்கத்துறை வெளிநாட்டில் சட்டத்திற்கு எதிரான பண பரிமாற்றம் குறித்த விசாரணையில் ஸ்டாலின் குடும்பத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதை அவரால் மறுக்க முடியாது. அப்படி வரும்போது ஸ்டாலின் குடும்பத்தினர் இதில் சிக்கினால் ஆட்சிக்கு ஆபத்தா? என்ற நிலை வந்து விடும். இதற்காக ஸ்டாலின் போடுகின்ற அரசியல் வியூகங்கள், சட்ட வல்லுநர்கள் கருத்து எப்படி அவரை காப்பாற்றப் போகிறது?இதில்,
செந்தில் பாலாஜி ஸ்டாலினையும், ஸ்டாலின் குடும்பத்தையும் காப்பாற்றுவாரா? அல்லது தன்னை காப்பாற்றிக் கொண்டு வெளியில் வர முயற்சிப்பாரா? அல்லது நடந்த ஊழல்களை சட்டத்தின் ஓட்டை மூலம் இவர் வெளியே வர வாய்ப்பு உள்ளதா? இப்படி பல அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற ஒரு பயத்தில் தான் ஸ்டாலின் குடும்பம் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழல் விவகாரங்களில் உள்ள பங்கு ஸ்டாலின் குடும்பத்திற்கு கொடுத்ததை சொல்லிவிட்டால் ஆட்சிக்கு அவ பெயர் மற்றும் ஆபத்து. அடுத்தது வெளிநாட்டில் சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்ற விவகாரத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் யார்? யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்ற விவரத்தை அமலாக்கத்துறை ஆதாரத்தை கையில் எடுத்து விட்டது. இதில் செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்?
இது தவிர, செந்தில் பாலாஜி 2014 இல் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலைகளுக்கு பணம் வாங்கிய ஊழல் வழக்கில் எப்படி தப்பிக்க போகிறார்? செந்தில் பாலாஜியின் வழக்கில் ஆதாரம் இல்லாமல் எதுவுமே இல்லை. ஒரு பக்கம் ஸ்டேட் விஜிலென்சி வழக்கு மற்றொரு பக்கம் மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு, இதிலிருந்து இவர் வெளிவர முடியுமா?
மேலும், செந்தில் பாலாஜி அமலக்கத்துறை கஸ்டடிக்கு கொண்டு வந்ததனால், இனி முதல்வர் ஸ்டாலின் குடும்பமும், செந்தில் பாலாஜியும் தப்பிக்க முடியுமா …..? மேலும் ,பாஜக இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனிக்கிறது. அதேபோல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்க விசாரணையின் ஒவ்வொன்றும் அதற்கு தெரியப்படுத்த வேண்டும். அதனால், ஒரு பக்கம் அரசியல் மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜிக்கு சட்டத்தின் நெருக்கடிகள் நாளாக பக்கமும் சூழ்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.