அரசியலில் ஊழல் என்பது சாதாரணமானதா ? அதன் பாதிப்புகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியுமா ? பொது மக்களுக்கு தெரியுமா ? அரசு அதிகாரிகளுக்கும் தெரியுமா? அரசியல் கட்சியினருக்கு தெரியுமா ? நாட்டில் நீதிபதிகளுக்கு இந்த உண்மை தெரியுமா ? பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press council of india) நிரூபிக்க முடியுமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் ஊழல் என்பது ஏதோ சிறிய விஷயம் போன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருக்கிறது .ஆனால், அதன் பாதிப்பு, அதன் பின் விளைவு, எத்தகைய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்துகிறது?  அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ? இது பற்றி அரசு அதிகாரிகளுக்கும் தெரியுமா? தெரிந்தவர்கள் 15 சதவீதம் இருப்பார்கள். தெரியாதவர்கள் 85 சதவீதம் இருப்பார்கள்.

 ஊழல் என்றால் என்ன?  என்று அர்த்தம் தெரியாத பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிகைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலைப் பற்றி தெரியாதவர்கள் எப்படி ,ஊழலுக்கு எதிராக போராடுவார்கள்? இவர்களும் பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் இவர் ஒரு செய்தியாளர்,என்று அந்தந்த பத்திரிகைகள், இவர் தான் எங்கள் நிருபர் என்று கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள் .

அதை வைத்து இவர்களும் பஸ் பாஸ் வாங்கி ,பத்திரிகையின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் ,இந்த சமூக நலன் ,தேச நலன் கருதி ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு இதுவரை எந்த சலுகைகளும், விளம்பரங்களும் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கவில்லை என்பதுதான் நாட்டின் மிகப்பெரிய வேதனை.

 உழைப்பவனுக்கு ஊதியம் இல்லை. உழைக்காமல் அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது போல, இந்த பத்திரிகைகள் சர்குலேஷன் அடிப்படையில், இந்த சலுகைகள் தினசரி பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது .மேலும், இந்த ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய அரசியல் மோசடி வேலை. அதாவது வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கை துரோகமாகும்.

இந்த நம்பிக்கை துரோகம் எப்படி நடைபெறுகிறது?  வாக்காளர்களுக்கு ஊழலைப் பற்றி தெரியாது. வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அதன் அதிகாரம் தெரியாது .ஏதோ கொடுக்கிற பணத்துக்கு நன்றியுடன் அவர்கள் சொல்லும் சின்னத்தில் வாக்களிக்கிறார்கள். அதனால், நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது?  என்பதை விரிவாக பார்க்கலாம்.

முதலில் ஊழல் என்றால் என்ன ? ஊழல் என்பது கோடிகளில் அந்தப் பணத்தை அதிகாரம் மிக்கவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அப்படி பல ஆயிரம் கோடி, பல லட்சம் கோடி என்ற ஊழல் செய்த பணம், எங்கே பதுக்குகிறார்கள்?  சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் .அப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது ,இந்திய பணத்தின் மதிப்பு ,அதன் தேவை, வெளிநாட்டுக்கு சாதகமானதாக உள்ளது.

 ஆனால், நம் நாட்டில் அதே பணம் இங்கே புழங்கினால் ,வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், மக்களிடம் பண நடமாட்டம், இவை எல்லாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இங்கே இந்த பணம் எப்படி வந்தது?  என்ற கேள்வி எழும் போது, அதை வெளிநாடுகளில் முதலீடு செய்வது போல் காட்டி, அங்கிருந்து இங்கு கொண்டு வருகிறார்கள். அதாவது பிளாக் மணி என்று சொல்வார்கள். இப்படி ஊழல் செய்து சம்பாதித்த கருப்பு பணத்தை அதை வெள்ளையாக்கி, இங்கே கொண்டு வருகிறார்கள்.

 அப்போதுதான் வருமானவரித்துறை, சிபிஐ ,அமலாக்கத்துறை பிடியில் சிக்குகிறார்கள். அப்படி சிக்கிய அமைச்சர்கள் அதிமுக, திமுக சொத்து குவிப்பு வழக்குகளில்  ஊழல் வழக்குகளில் இன்று வரிசை கட்டி நிற்கிறது .இது ஒரு புறம் மற்றொரு புறத்தில் இந்த ஊழல் பணத்திற்கு பின்னால் தற்போது ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பி ,மந்திரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னாள், இன்னாள் வரை இந்த ஊழல் சட்டப்படி நடந்து வருகிறது. இதை மக்களால் தடுக்க முடியவில்லை. அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை .

இதன் பின் விளைவு இன்று குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ 500 கோடி என்றால், மந்திரி குறைந்தபட்சம் ஆயிரம் கோடி, அதற்கும் மேலே லட்சம் கோடி ,இப்படி கோடிகளில் இவர்களுடைய கொள்ளை அரசியலில் இருந்து வருகிறது. இதை பாதுகாப்பவர்கள், இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள், இவர்களின் சொத்துக்களுக்கு பினாமியாக இருப்பவர்கள் ,அந்தந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், இந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ, மந்திரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் இவர்களுடைய ஊழல் பணத்தால் நாட்டில் ரவுடியிசம் வளர்ந்துள்ளது . ரவுடிசம் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நீதிமன்ற வழக்கு கொலை கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு இந்த ஊழல் பணம் முக்கிய காரணமாக செயல்படுகிறது இதனால் அப்பாவி மக்களின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் ஆகிறது .மேலும்,

ஊழலில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள் ,இந்த ஊழல் பணத்தால் சட்டத்தை விலைக்கு வாங்குகிறார்கள். அதிகாரிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள், நேர்மையான அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அப்பாவி மக்கள் ஏமாந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தது வாக்களித்த மக்களுக்கு மதிப்பில்லை, மரியாதை இல்லை .அவர்களால் உண்மையை தட்டிக் கேட்க முடியவில்லை. நியாயம் கிடைக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகள் அரசியல் அதிகாரத்தால், ஒரு பக்கம் ஊழலுக்கு எதிரானவர்களாக பேசிக்கொண்டு, ஊழல் செய்து பல ஆயிரம், பல லட்சம் கோடிகளை பார்ப்பது தற்போதைய நவீன அரசியல். இந்த நவீன அரசியலில் பொய் என்பது சகஜமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் பணம் தான் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அந்த நினைப்பு மிகப்பெரிய தவறு .

ஒரு பக்கம் ஊழல் செய்த பணத்தால் விலைவாசிகள் ஏறிவிட்டது. எவ்வளவு ஏறினாலும் ஊழல்வாதிகளுக்கு கவலை இல்லை. அவர்கள் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டம் மூலம் நீதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிறது. 1965 க்கு முன் இருந்த அரசியல் ,மக்களுக்கு எந்த இலவசமும் இல்லை. பசி பட்டினியால் கூட வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறைவில்லை .

இப்போது பசி, பட்டினி இல்லை.  சந்தோஷம், நிம்மதி மக்களின் வாழ்க்கையில் கேள்வி குறையாகிவிட்டது.மேலும்,ஊழல் செய்த பணத்தால் ,அந்தந்த பகுதியில் அரசியல் கட்சிகள் பெயரில் மக்களிடையே பிளவு ஏற்படுத்துகிறது . ஒரு ஊருக்கு பத்து கட்சிகள் என்றால், பத்து பிரிவாக மக்களை பிளவுபடுத்துகிறது. ஜாதியால் சமூக உறவுகளை பிளவுபடுத்துகிறது .இதனால் யாருக்கு லாபம்? ஊழல்வாதிகளுக்கு லாபம்.

தவிர, இந்த ஊழலைப் பற்றி பொதுமக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் . இந்த ஊழல் என்றால் என்ன என்று தெரியாத மக்கள் இருக்கிறார்கள் . ஆனால், பதவி ,அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியல் கட்சியினரும் தன்னுடைய வேலை என்ன தான் எதற்காக வந்தோம் அதைப் பற்றி துளி கூட தெரியாத ஊழல் கூட்டங்கள்

இப்போது அவையெல்லாம் மறந்துவிட்டு எப்படி ஏமாற்றலாம் யாரை கவிழ்க்கலாம்? சட்டத்தை எப்படி ஏமாற்றலாம் ? பொது சொத்துக்களை எப்படி கொள்ளை அடிக்கலாம்?  அதிலிருந்து சட்டப்படி சம்பாதித்ததாக கணக்கு காட்டலாம் ? இப்படி ஒரு கிரிமினலாக அரசியல் வாழ்க்கை நடத்துகிறார்கள். இதற்கு காரணம் அரசியல் தெரியாத மக்கள் இருக்கிறார்கள் .அவர்கள் இருக்கும் வரை நமக்கு லாபம் தான். இந்த அடிமைகள் நாம் என்ன சொன்னாலும் கேட்பார்கள். அதை உண்மை என்று நம்புவார்கள்.

மேலும் ஊழல்வாதிகளால், இயற்கை வளங்கள் அழிக்கப்படும் போது, நாட்டில் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு, அதாவது அதிக வெப்பம், அதிக குளிர், அதிக மழை வெள்ளம், இயற்கையின் பாதிப்பு மக்களுக்கு ஏற்படுகிறது .சுனாமி, பூகம்பம் ஏற்படுகிறது. மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இக்கட்டுரையை எழுதி வருகிறேன். இயற்கையை மனிதன் அழித்தால் ,மனிதனை இயற்கை அழித்து விடும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு ,அதிகாரிகளுக்கு இதன் அர்த்தம் புரியாமல் இன்னும் இருக்கிறார்கள்.

எந்தெந்த வழிகளில் ஊழல் நடைபெறுகிறது ?தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை ,கருவேல மரம் ஏலம் விடுவதில் கொள்ளை, மரங்கள் ஏலம் விடுவதில் கொள்ளை, சவுடு மண்  கொள்ளை ,அரசு கட்டிடங்கள் கட்டுவதில் கொள்ளை, சாலை போடுவதில் ஊழல், மேம்பாலம் கட்டுவதில் ஊழல் ,100 நாள் வேலை திட்டத்தில் ஊழல், மாணவர்களுக்கு கணினி வழங்குவதில் ஊழல், இப்படி பல ஊழல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஊழல்கள் நடைபெற்றதைப் பட்டியல் போட பத்திரிகைகள் சில இருக்கிறது. ஆனால், அதை மக்களிடையே கொண்டு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த ஒரு பத்திரிகையும் இல்லை. மக்கள் அதிகாரம் தொடர்ந்து அப் பணியினை செய்து வருகிறது. தவிர,

மேலும், இவர்களால் மக்களுக்கு என்ன நன்மை? எந்தக் கொடுமை செய்தாலும், அப்பாவிகள் சகித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக நியாயம் கேட்க நீதிமன்றமோ, காவல்துறையோ எதுவும் வராது. எல்லாம் பணத்தை விட்டு எறிந்து அடக்கி விடுவார்கள் .இந்த ஊழல் பணம்  உழைக்காமல் கிடைத்தது. இது பல வழிகளில் இப்படித்தான் ஊழல் பணம் சமூகத்திற்கு எதிரானதாக உள்ளது. மேலும் ,நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருவதற்கு இந்தப் பணம் பயன்படாமல், அரசியல் அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரிடம் போய் சொந்தமாகி விடுகிறது.

இது நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல, ஏழை, நடுத்தர மக்களின் வளர்ச்சியும் பாதிக்கிறது .அதாவது கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இந்த ஊழலுக்கு ஆதரவாக இருப்பதால் ,அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு ,தங்களை வளப்படுத்திக் கொள்கிறது. ஆனால், சாமானிய நடுத்தர மக்கள் நடத்துகின்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், ஊழலுக்கு எதிராக போராடினாலும், அவர்களுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் அரசு கொடுப்பதில்லை.

இந்த பத்திரிகைகள் உண்மையை வெளிப்படுத்தினாலும் ,அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும் அலட்சியமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் இதனுடைய உண்மை தன்மையை புரிந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட அதற்கு மதிப்பளிப்பார்கள். மேலும், இது ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த பத்திரிகைகளில் வருகின்ற உண்மை செய்திகளுக்கு உடனடியாக உளவுத்துறை மூலம் அறிக்கை கேட்பார்கள். அதற்கு உடனடியான நடவடிக்கையும் எடுப்பார்கள் .

எடப்பாடி ஆட்சி வந்ததிலிருந்து எந்த பத்திரிகை செய்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், இந்த ஊழலால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஜாதி ,மோதல்கள், மத , மோதால்கள் உருவாக்க இந்த ஊழல் பணம் பின் புலத்தில் செயல்படுகிறது. கட்சி போராட்டங்களில் ஊழல் செய்த பணம் கொடுத்து கூட்டத்தைக் காட்டுகிறார்கள்.

ஆனால், நல்ல விஷயங்களுக்கு ஏதாவது இந்த பணம் பயன்படுகிறதா ? இல்லை. இப்படி கோடிகளில் ஊழல் செய்ய ஆட்சி அதிகாரம் மிக்கவர்களாக முடியும் என்பதை அதிமுக திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது. இதனால்,ஏழை, எளிய நடுத்தர மக்கள் வளர்ச்சி எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வார்களா? – மேலும், உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,பத்திரிகையாளர்கள் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும், மறைமுக ஆதரவாக அவர்களை நல்லவர்களாக ,அவர்கள் இதை செய்தார்கள், அதை செய்தார்கள் என்ற அரசியல் மாய பிம்பத்தை மறைமுகமாக மக்களிடையே ஏற்படுத்துகிறது .

இப்படி ஊழலுக்கும் ,ஊழல்வாதிகளுக்கும் துணை போகின்ற இதுதான் நாட்டில் பெரிய பத்திரிகை என்று, பெரிய தொலைக்காட்சி என்று ,மக்களிடையே ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது. எப்படி அரசியல் தெரியாத மக்களிடம், ஊழலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இதுதான் பத்திரிக்கை என்று காட்டிக் கொண்டிருக்கிறது. அதே போல் தான், நாங்கள் தான் பெரிய பத்திரிகையாளர்கள் என்று அரசாங்கத்தின் அடையாள அட்டை, பஸ் பாஸ் போன்ற சலுகைகள், அவர்களுடைய கார், பைக்குகளில் அரசின் பத்திரிகை ஸ்டிக்கர், இது எல்லாம் ஒட்டிக்கொண்டு,பந்தா காட்டும் நிருபர்கள் ,பத்திரிகைகள் எத்தனை?

 இதைவிட கொடுமை ,தினமும் பத்திரிக்கை அடிக்காமலே, செய்தித்துறை அலுவலகங்களுக்கு ஜெராக்ஸ் போட்டு காட்டும் பத்திரிகைகள்? 50, 100 அடிக்கும் பத்திரிகைகள்? அதுவும் கணக்கு காட்டி ஆடிட்டர் ரிப்போர்ட் கொடுத்து இப்படிப்பட்ட சலுகை, விளம்பரங்களை  மக்களுடைய  வரி பணத்தில் ஏமாற்றிக் கொண்டு வருவது, எத்தனை பத்திரிகையாளர்களுக்கு உண்மை தெரியும்?  எத்தனை அரசு அதிகாரிகளுக்கு உண்மை தெரியும்?  சமூக ஆர்வலர்களுக்கு இந்த உண்மை தெரியுமா?  பொது மக்களுக்கு இந்த உண்மை தெரியுமா?  அது மட்டுமல்ல ,

உழைக்கும் மக்களின் உழைப்பு, நேர்மை இவையெல்லாம் கேலிக் கூத்தாகி  விட்டு ஊரை ஏமாற்றும் அரசியல் கட்சியினர், சோம்பேறிகள், வெத்து வெட்டுகள், புறம் பேசி திரியும் கூட்டங்கள், கதை கட்டி விடும் பொறுக்கிகள், ஏமாற்று பேர்வழிகள், அரசியலிலும் ,அரசியல் கட்சிகளிலும் மறைமுகமாக ஊழலில் பங்கு கொள்கிறார்கள். மேலும், இந்த ஊழலை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் ,சமூக நலன் பத்திரிகைகள் ,பத்திரிகையாளர்கள் இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருப்பதால், இதனால், போடப்படும் பொய் வழக்குகள், மிரட்டல்கள், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், எவ்வளவு தெரியுமா?  இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் நாட்டில் ஊழல் என்பது மிகப்பெரிய தீய சக்திகளாக வளர்ந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,

அதை எதிர்த்து போராட எவ்வளவு பேர் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள், அதுவாவது பொது மக்களுக்கு தெரியுமா ?  அரசியல் கட்சிகளுக்கு தெரியுமா?   அல்லது, நானும் பத்திரிக்கை நடத்துகிறேன் என்று கணக்கு காட்டும் பத்திரிகைகளுக்கு தெரியுமா?

 இப்படி எத்தனை பத்திரிகைகள், தினசரி, வாரம் ,மாதம் என்ற பிரிவுகளால் அதனுடைய விதிமுறைகள், சர்குலேஷன் விதிமுறைகள் மூலம் கொடுக்கப்பட்ட சலுகை, விளம்பரங்கள் அனுபவித்து வரும் இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் அடைந்த பயன் என்ன ?அல்லது இவர்களால் கொடுக்கப்படும் செய்திகள் மூலம் மக்களுக்கு என்ன நன்மை? இதையாவது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press council of india) நிரூபிக்க முடியுமா ?இந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தான் தெரியுமா? அதனால்தான், பத்திரிகை சட்ட விதிமுறைகளிலும், ஊழல் சட்ட விதிமுறைகளிலும், மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப தேவை, என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகை வலியுறுத்துகிறது.  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும், இந்த செய்தியை சமூக ஆர்வலர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள், இந்த தேசத்திற்கான தொண்டு செய்யக்கூடிய சமூகநல அமைப்புகள், ஆர் எஸ் எஸ் அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சியினர், இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, ஒவ்வொருவரின் கடமை என்பதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *