சினிமாவில் நடிக்கிறார்கள் . அது நடிப்புத் தொழில்! ஆனால், அரசியலிலும் நடிப்பதை தொழிலாக்கி விட்டார்கள். தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை ,இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் மீது, அரசியல் தெரிந்தவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
எந்த கட்சி அரசியலுக்கு தகுதியான தலைவர்களை நியமித்துள்ளது? எந்த கட்சியில் தகுதியான தலைவர்கள் இருக்கிறார்கள்? எந்த கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இன்று வரை இருந்து வருகிறது. இதில் என்னவென்றால் ,ஒரு விசேஷம் திருடனும், கொள்ளையடிப்பவனும் நல்லவர்கள் வேஷம் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இன்றைய அரசியல்! மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது.
இதில் மக்கள் ஏமாளிகள். அவர்கள் அதிபுத்திசாலிகள். இந்த அதி புத்திசாலிகளின் நடிப்பு, பேச்சுக்களுக்கு தாலமும் ராகமும் போட்டு, பின் பாட்டு பாடி ,இவர்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள்! இந்த உண்மை எந்த ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் மக்களிடம் சேர்க்க மாட்டார்கள். மக்கள் கடைசிவரை ,விழிப்புணர்வு இல்லாமல், இவர்களிடம் அடிமையாகவும், ஏமாளிகளாகவும், சுயநலவாதிகளாகவும், இலவசத்தை நம்பி வாழ்பவர்களாகவும், இவர்கள் எவ்வளவு கொடுமை செய்தாலும், அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் எப்படி அரசியலில் உண்மை எது? பொய் எது? என்று சிந்திக்கப் போகிறார்கள்? சிந்திக்காமல் இருக்கும் வரை, இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் மாறாது. அரசியல் தெரியாதவர்களும், சுயநல வாதிகளும், பொதுநலத்திற்கு அர்த்தம் தெரியாதவர்களும், கட்சி என்ற ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு, கையில் அந்த கட்சியின் சின்னத்தையும், கொடியையும் பிடித்துக் கொண்டு ,தன்னை தியாகியாக காட்டிக் கொண்டிருப்பார்கள்.
இல்லையென்றால், அந்தந்த பகுதிகளில் பேனர்களை வைத்துக்கொண்டு, இவர்கள் யார் ?என்று இவர்கள் முகத்தை அந்த பேனரில் காட்டிக் கொண்டிருப்பார்கள் .அப்போதுதான் இவர்கள் பெயரும், முகமும் மக்களுக்கு தெரியும். ஆனால், இவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது அந்தப் பகுதி மக்களுக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் ,அவர்களுக்கும் அரசியல் என்றால் அடிச்சுவடு தெரியாது.
இந்த அரசியலை வைத்துக் கொண்டு, கட்சிகளில் தன்னுடைய முகவரியை தேடிக் கொண்டிருக்கும் இவர்கள், அரசியலுக்கு தகுதியற்றவர்கள். அதனால் இரண்டு பக்கமும் அரசியல் தெரியாத முட்டாள்களாக வாழ்ந்து கொண்டிருப்பது, தமிழ்நாட்டில் கேவலமான ஒரு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அரசியலில்! ஒரு பக்கம் ஊழல் மற்றொரு பக்கம் ரவுடிசம். இந்த தாதா வேலைக்கு தகுதியானவர்களை எல்லாம் அரசியல் கட்சிக்கு நிர்வாகிகளாக ஆக்கிவிட்டார்கள். இதனால் இன்று மக்களின் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது .அது இருப்பவன், இல்லாதவன் என்ற பாகுபாடு இன்றி, எல்லோரும் போராட்டத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Social workers
இதற்கு காவல்துறை அவர்களுக்கு தான் பக்க பலமாக இருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள், சமூக நலன்களுக்காக போராடும் போது 90% காவல்துறை அவர்கள் பக்கம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் .ஏனென்றால் பணம் அவர்கள் தான் கொடுப்பார்கள். எங்களால் பணம் கொடுக்க முடியாது. நியாயத்தை தான் கொடுக்க முடியும் .உண்மை தான் கொடுக்க முடியும். இது காலத்தின் கொடுமையா? அல்லது மக்கள் செய்த பாவத்தின் பலனா? யாருக்கு தெரியும்? எல்லாம் தெரிந்த கடவுளுக்கே இது வெளிச்சம் .
மேலும், சொன்ன கருத்துக்கு மக்களுக்கு ஒரு விளக்கம் தேவை இல்லையா? அது நாம் தமிழர் கட்சி சைமன் என்கிற சீமான் பிடியிலிருந்து வீட்டு உரிமையாளர் பட்ட கஷ்டம் எவ்வளவு ?என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்த உண்மை சீமானை அசிங்கப்படுத்துவது அல்லது கேவலப்படுத்துவது நோக்கம் அல்ல. இணையதளத்தில் வெளிவந்துள்ள ஒரு உண்மை.
அதில் ஒருவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில், பத்தொன்பது ஆண்டு காலமாக நுழைய முடியாமல் பரிதவித்த அந்த வீட்டின் உரிமையாளர் ,பல நீதிமன்றங்களில் வழக்கை இழுத்தடிப்பு செய்து, அரசியல் கட்சி அடியாட்களால் மிரட்டப்பட்டு, இத்தனை ஆண்டு காலமாக அந்த வீட்டின் வாடகை சுமார் 45000000 க்கு மேல் வாடகை பாக்கிக்கு ஒரு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது நான் ஒரு வழக்கறிஞராக பெருமிதம் கொள்கிறேன்.
மேலும், இந்த வீட்டின் உண்மையான ஒரிஜினல் வாடகைதாரர் இவர் அல்ல. உண்மையான வாடகைதாரரே காலி செய்து விட்டு சென்ற பிறகு ,அவரோடு இவர் உதவி இயக்குனராக தங்கி ,வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்துள்ளார். இதில் வழக்கறிஞரான எனக்கு வாடகை நிர்ணயம் செய்ததில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும், இன்று இறுதி வெற்றி.
மேலும், இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து மனம் திரும்பி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்த சைமன் என்கிற சீமான் சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்து இவரிடமிருந்து பிடுங்கி உரிமையாளர் இடம் ஒப்படைக்கும் போது, அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை காணும் போது, நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மன நிம்மதி அடைகிறேன். மேலும், அவர் இதன் மூலம் அதிகாரமிக்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு நான் கொடுக்கும் அன்பான வேண்டுகோள்! அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல, என்பதை ஜெயலலிதாவின் வாழ்க்கையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்பதே நன்றி. அன்புடன் வி எஸ் கோபு.