தலைவர்கள் போட்டோவை காட்டி பேசிக் கொண்டிருப்பது அரசியல் அல்ல, அவர்கள் வழியில் ,அவர்களுடைய கொள்கையில் செயல்படுகிறீர்களா? அல்லது 50% ஆவது அதில் தேர்வீர்களா? மேலும்,
அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சியின் பொறுப்பாளர்களா ? தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதற்கான தகுதி ,செயல்பாடு, நேர்மை, சமூக நன்மை, இதிலே ஒவ்வொரு கட்சியிலும் இதற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் தேர்வார்கள் ?
மேலும், அடியாளுக்கு தகுதியான கூட்டம் எல்லாம் கட்சி என்கிறது. கத்தி தூக்குறவன், கொம்பு தூக்குறவன் எல்லாம் கட்சி கொடி பிடித்துக் கொண்டு, கட்சிக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பவனிடம் எல்லாம், கட்சிகளின் பொறுப்புகளை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொது மக்களுக்கும் அர்த்தம் தெரியாது. அவனுக்கு அர்த்தம் தெரியாது.
பொது மக்களுக்கு இதற்கான அர்த்தம் தெரிந்திருந்தால், தேர்தல் நேரங்களில் அந்த கட்சி எப்படிப்பட்ட மோசடி பேர்வழி, பிராடு, கிரிமினல் , கொலை குற்றவாளி, ஊரை மாற்றுபவர்கள், குடிகாரர்கள், யாராக இருந்தாலும் காசு கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு வாக்களித்து விடுகிறோம்.
எங்கள் ஓட்டு உங்களுக்கு தான். அது மட்டும் அல்ல, நீங்கள் எல்லாம் எங்கள் வீட்டு விசேஷத்திற்கு நல்லது, கெட்டது எது வந்தாலும், ஒரு மாலையை மட்டும் கொண்டு வந்து போடுங்கள். கல்யாணம் என்றால் கவர் கொடுங்கள். நீங்கள் தான் எங்களுடைய சமூக சீர்திருத்தவாதி.
ஏனென்றால் இவர்களெல்லாம் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடத்தினார்கள் என்று பத்திரிகைகளில் போடுவார்கள். அதற்காக பாட்டில்களை கொடுத்து, பிரியாணிகளை கொடுத்து அழைத்துக் கொண்டு போகும் புரோக்கர்கள். இவர்கள் தான் ,சமூகத்திற்கு இன்று அதிகத் தீமை ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு அதிக அளவில் இருக்கிறார்கள். மேலும், இவர்களுடன் மறைமுகமாக காவல்துறை அதிகாரிகள், சுய லாபங்களுக்காக சப்போர்ட் செய்வதன் விளைவு,இன்றைய அரசியல் கட்சிகளால், சமூகத்தில் உள்ள நேர்மையானவர்களும், ,ஒழுக்கமானவர்களும், சமூக நன்மைக்காக போராடும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்படுகிறார்கள் .
அவர்கள் நியாயத்தை பற்றி பேசும்போது, இவர்கள் அநியாயத்தின் உச்சமாக நிற்கிறார்கள். கட்சி என்பது சமூக நன்மைக்காகவா ? அல்லது தீமைக்காகவா ? இந்த பேனர்களை வைத்துக் கொண்டு, பொது சொத்துக்களை கொள்ளை அடிக்கலாம் . அல்லது பொதுமக்களை மோசடி செய்யலாம். அல்லது யாருடைய சொத்தாவது அபகரிக்கலாம். இதற்கு தான் தற்போது இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் என்றால், நேர்மையான அதிகாரிகள் மீது பொய் புகார்களை கொடுக்கிறார்கள். நேற்று கூட, திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஒரு அதிகாரி ஒருவர் மிகவும் வேதனைப்பட்டார் .வேலை செய்வதற்கே பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு டார்ச்சர் இருக்கிறது. இதற்கு அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள், இவர்களே அரசியல் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு, மறைமுகமாக சில உள்ளடி வேலைகளை செய்கிறார்கள். இது ஏனென்றால் அவர்கள் செய்யும் ஊழல்களை அதிகரிகள் கேட்கக் கூடாது. அதற்காக,
ஒரு பக்கம் ஜாதி என்ற ஒரு கோடாலியை வைத்து மிரட்டுவார்கள். அடுத்த பக்கம் அரசியல் கட்சி என்று கத்தியை காட்டி மிரட்டுவார்கள். இதற்கு பல சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், விடையூர் கிராமத்தில் உள்ள கருவேலமரங்கள் ஏலம் விடப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கு கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். எமது பத்திரிகையின் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது இங்கு காவல் துறை வந்து, மரம் வெட்டுவது நிறுத்த சொல்லியும் தொடர்ந்து வெட்டுகிறார்கள்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பின் ஜான் வர்கீஸ்,இதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதை ஏன் சொல்ல வேண்டும்? என்றால், இந்த ஊழலுக்கு பின்னால் கட்சி என்ற ஒரு பெரிய அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. அதில் அதிமுக கட்சி பெயர் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவர் சொன்னாராம், எங்கள் ஆட்சியாக இருந்தால், நாங்கள் இந்நேரம் இந்த மரத்தை வெட்டி காலி பண்ணிருப்போம். அப்படி என்றால், இவர்களுடைய எண்ணங்கள் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொள்ளையடிப்பதில் தான் முக்கிய நோக்கம்.
இப்படிப்பட்டவர்கள் எப்படி சமூக நன்மைக்காக, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு போராடுவார்கள்? அரசியல் என்பது பொது வாழ்க்கையின் போராட்டம். அர்ப்பணிப்பு ,தியாகம், எதுவுமே இல்லாமல் ,இவர்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு( போகணும்) போபவன் எல்லாம், அரசியல் கட்சி என்கிறார்கள். அப்படி என்றால் இவனுக்கும் திருடனுக்கும் என்ன வித்தியாசம்? இவனுக்கும் கொள்ளையடிப்பவனுக்கும் என்ன வித்தியாசம்? இவனுக்கும் ஊரை ஏற்றுபவனுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்றே தான். இவன் கட்சி பெயர் சொல்கிறான். அவன் கட்சி பெயர் சொல்வதில்லை. அவ்வளவுதான் .
கிராமங்களில் படிப்பறிவு இல்லாத கூட்டம் அதிகம். அவர்களுக்கும் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. இவனுக்கும் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அதனால் கட்சி என்றால் ,அதற்கு என்ன அர்த்தம் தெரிந்து அதற்கு தகுதியானவர்கள் இவர்கள்தானா? என்பதை பொதுமக்கள் மற்றும் பல கட்சியில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும், பிஜேபி யில் சமீபத்தில் சேர்ந்த சிலர் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கிறார்கள். அது பற்றி சமூக வலைத்தளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் பேசியிருக்கிறார். அதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். நேர்மையானவர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களே என்று தெரிவிக்கிறார். இதில் அண்ணாமலைக்கு சம்பந்தம் இருந்தால் நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளலாம். சம்பந்தமில்லாத ஒன்று ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், எந்த ஒரு கட்சித் தலைமையும் அதற்கான தீர்வு அவர்களை தான் சார்ந்தது. தவிர,
இவர்கள் கட்சிக்காக செலவு செய்கிறார்கள் .இப்படிப்பட்டவர்கள் தான் பாட்டில்கள் கொடுத்து கூட்டங்களை வரவழைப்பது, பந்தா காட்டுவது ,ஒன்றுமே இல்லாமல் பொய் பேசிக் கொண்டு திரிவது கைவந்த கலை. அதனால், பொதுமக்கள் இப்படிப்பட்ட கட்சிக்கு தகுதி இல்லாத, அர்த்தமில்லாத கூட்டத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள். அவர்களுக்கு அதற்கான தகுதியும் கொடுக்காதீர்கள். இவர்களெல்லாம் பணம் கொடுத்தால், எத்தனை கட்சிக்கு வேண்டுமானாலும் மாறிக்கொண்டிருப்பார்கள்.
அது மட்டுமல்ல, எடுப்பு வேலை ,அடியாள் வேலை இதற்கு தகுதியானவர்கள் எல்லாம் கட்சி என்றால், அந்தக் கட்சிக்கும் அர்த்தம் இல்லை. கட்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் அர்த்தம் இல்லை. கட்சி என்றால் சமூக நன்மைக்காக யார் ஒருவர் போராடிக் கொண்டிருக்கிறாரோ, அவர்தான் கட்சிக்கு தகுதியானவர். மீதி எல்லாம் கட்சி என்று சொல்லி சில பத்திரிகைகள் தங்களை பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு, முட்டாள்தனமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், வருங்கால இளைய தலைமுறைகள் ஏமாறாமல், இப்படிப்பட்டவர்களிடமிருந்து விழித்துக் கொள்ளுங்கள் .நீங்கள் படித்தவர்கள் .உங்களுடைய தகுதியை இவர்களிடம் அடகு வைத்து விடாதீர்கள் .
மேலும், கட்சி என்பது சமூக நன்மைக்காக தானே தவிர, இவர்களுடைய சுயநலத்திற்கு கட்சி அல்ல .அதனால் எந்த கட்சியானாலும், அந்த கட்சியினுடைய தலைமை ,இப்படிப்பட்டவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் ?அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஒரு அராஜக கூட்டமாக தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இதையெல்லாம், இனி அரசியல் கட்சிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருப்பது ,பொதுமக்களை ஏமாற்றும் வேலை. அதை ஊடகங்கள் விளம்பரப்படுத்துவது, அதைவிட கேவலமான வேலை வேறு எதுவும் இல்லை . இப்போதாவது பொது மக்களுக்கு உண்மை புரிந்ததா ? தவிர ,இதுபோன்ற தவறானவர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், அதற்கு தலைமையேற்று நடத்தக்கூடிய தலைவர்கள் தான் பொறுப்பு. அவர்களும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அது கட்சி அல்ல.
தன்னை கட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்றால், நேர்மை, ஒழுக்கம், சமூக நன்மை இதுதான் ஒரு அரசியல் கட்சிக்கு அர்த்தம். அது தெரியாமல் கட் அவுட் வைத்துக் கொள்வதிலும், பேனர் வைத்துக் கொள்வதிலும், போஸ்டர் அடித்துக் கொள்வதிலும், பத்திரிகைகளில் போட்டோவுடன் செய்திகளை போட்டு காட்டிக் கொண்டிருப்பது, தன்னை ஒரு மிகப்பெரிய கட்சியாக காட்டிக் கொள்வது, இவை அனைத்தும், பொதுமக்களை ஏமாற்றுகிற ஒரு அரசியல்.