நாட்டில் ஊழல்வாதிகளின் பேச்சுகள் ,அரசியல் கட்சி ரவுடிகளின் பேச்சுகள், எல்லாவற்றையும் போட்டு ,அவர்களையும் நல்லவர்கள் ஆக்கி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள்.
கட்சி என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாது .அவன் எல்லாம் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறான். அதாவது லட்சியவாதிகளாக பேசுகிறார்கள். இலட்சியத்துடன் வாழ்ந்தவர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் அதில் ஒரு சிறு துளி கூட அதற்கு தகுதி இல்லாதவர்கள். இவர்களெல்லாம் தற்போது கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு, கரை வேஷ்டி கட்டிக்கொண்டு, ஊரில் பந்தா காட்டிக் கொண்டு, உதார் விட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம்.
அது மட்டுமல்ல, இவர்கள் எதுவுமே செய்யாமல், வாயிலே பேசிக்கொண்டு, சிலர் சோசியல் மீடியாவில் வீடியோ போட்டுக் கொண்டு, தங்களை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, கத்தி தூக்குறவன், கொம்பு தூக்குறவன், உடம்பு காட்டி சண்டைக்கு வருபவன், இவன் எல்லாம் கட்சி என்றால்! அந்தக் கட்சிக்கு அர்த்தம் என்ன ? இல்லை கட்சிக்குதான் அர்த்தம் என்ன ?
இதைப் பற்றி எதுவும் தெரியாத இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள், கட்சி ஊடகங்கள், வியாபார ஊடகங்கள் பல, அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் தெரியாத மக்கள், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய அரசியலின் உண்மை நிலைமை. மேலும் மக்கள் இன்றைய அரசியலின் மோசமான சூழ்நிலையை புரிந்து வாழ வேண்டிய நிலைமை உள்ளது. அந்த கட்சியில் இவன் சேவை செய்தது என்ன? அந்த கட்சிப் பணியில் சமூகத்திற்கு செய்த நல்லது என்ன? இது எல்லாவற்றையும் படியுங்கள். அரசியல் என்பது இன்று மோசமான சூழ்நிலைக்கு வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும், மக்களுக்காக எதுவும் செய்யாமல், சமூக ஊடகங்களிலும், கார்ப்பரேட் ஊடகங்களிலும் பேசியே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பேச்சு எல்லாம், அரசியல் தெரிந்தவர்களிடம் வேலைக்காகாது. ஆனால், தெரியாதவர்களிடம் வேலைக்கு ஆகும் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ கொடுத்து ஏலம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது ஊடகங்களில் நடித்துக் கொண்டு பேசிக் ஏமாற்றி கவுத்து விடலாம்.
மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் இவ்வளவு பெரிய அயோக்கியன், நான் உத்தமன் என்று பேசிக் கொண்டே, உத்தமர்களாக ஆகிவிடுகிறார்கள். மேலும் இந்த உத்தமர்களின் பேச்சுகளை எல்லாம், இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள், வியாபார ஊடகங்கள், அரசியல் கட்சி ஊடகங்கள் அதை ஒன்று விடாமல் மக்களிடம் காட்டிக்கொண்டு, அவர்களை பெருமைப்படுத்தி கொண்டிருக்கிறது. இங்குதான் அரசியல் தெரியாதவர்கள் ஏமாறுகிறார்கள் . இது மக்களை ஏமாற்றும் அரசியலாகிவிட்டது.
அதனால், பொதுமக்கள், வாக்காளர்கள் கார்ப்பரேட் ஊடகங்கள், கட்சி ஊடகங்கள் ,வியாபார ஊடகங்கள் இவை எல்லாம் சொல்வதை உண்மை என்று நம்பினால், மக்கள் ஏமாந்து போவீர்கள். உண்மையை சிந்தியுங்கள். மனசாட்சியுடன் வாழ்வது பெருமையுடன் நினையுங்கள். போலி வாழ்க்கை ஒருபோதும் உங்களை உயர்த்தாது. மேலும், ஒரு காலத்தில் கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தார்கள். இப்போது கௌரவம் என்றால் என்ன? என்று கேட்பவர்கள் வந்திருக்கிறார்கள். எனவே,
போலித்தனமான அரசியல்வாதிகள், கார்ப்பரேட் ஊடகங்களில் பேசிக் கொண்டிருப்பவர்கள், எல்லாம் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொண்டு நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் எல்லாம் கட்சி என்ற ஒரு லேபிளை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய, மக்கள் நலனை பற்றி சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு. அதனால், வருங்கால அரசியல், உங்கள் வாழ்க்கையை முன்னேற்றத்திற்கான பாதையில் அடித்தளம் இடுபவர்கள் யார்? என்பதை சிந்தித்து தீர்மானிங்கள். கட்சி என்பதை விட ,மனிதநேயம் மிக்கவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. மனிதநேயம் மிக்கவர்களாக நடிப்பவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நான் சொல்வது உண்மையான மனிதநேயமிக்கவர்கள், சமூகப் பணியாற்றுபவர்கள், பொதுநலம் மிக்கவர்கள் ,அவர்கள் யார்? என்பதை தீர்மானிங்கள்.
இது பற்றி மக்கள் சிந்தித்து எடுக்கின்ற முடிவாக இருக்க வேண்டும். அது இந்த நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, அமைதி, நேர்மையான நிர்வாகம், இத்தனையும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில், இந்திய மக்கள் இருக்கிறார்கள் .