அரசியல் தகுதி இல்லாதவர்களை ,அரசியல் கட்சிகளும், சினிமாவும், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்கள் சினிமாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து, சினிமாவில் சாதித்ததை விட, அரசியலில் சாதித்தது மிகவும் குறைவு. அப்போது இருந்த காலத்தில், சாமானிய மக்கள்  அரசியலுக்கு வர முடியாது. அதற்கான தகுதி, கவுரவம் எல்லாம் இருப்பவர்கள் மட்டும்தான், அரசியலுக்கு வந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறுகிறது. எம்ஜிஆர் அதிமுக ஏற்படுத்திய பிறகு அந்த நிலை மாறுகிறது.

எம்ஜிஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும், மக்களின்  ஆதரவு இருந்தது. ஆனால் இவை அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு போய் சேரவில்லை .அவர்களுடைய ரசிகர்களை, கட்சிக்காரர்களை வளர்த்துக் கொண்டார்கள். அதேபோல் தான், திமுக தனது கட்சிக்காரர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்டது . அதிமுக கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்டது. ஜெயலலிதா பல கோடிஸ்வரர்களை உருவாக்கியது. இப்படி அதிமுக, திமுக என்று மாறி ,மாறி 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் இப்பொழுது மக்கள் ஊழல்களை தான் அரசியலாக தெரிந்து கொண்டது.இதைக் கூட, எந்த தமிழ்நாட்டு ஊடகங்களும், கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மக்கள் நலன் சார்ந்து இந்த செய்திகள் வெளியிடவில்லை .ஆனால், ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாக இந்த ஊடகங்கள் இருந்து வருகிறது.

 மேலும், தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவில் எத்தனையோ பல அதானி, அம்பானிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த ஊடகங்கள் சொல்வதில்லை .காரணம் அவைகள் அனைத்தும், கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டங்கள். நீங்கள் எந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளை பெரிய அளவில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் காசுக்கு மாரடைக்கும் கூட்டங்கள். ஒரு பக்கம் அரசுக்கு ஆதரவாக, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக, செய்திகளை வெளி இடுவதற்கு கோடிகளில் சலுகை, விளம்பரங்கள்  இவையெல்லாம் மக்களின் வரி பணம் தான் என்பது இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நடத்திக் கொண்டு, மக்கள் நலன் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்களே தவிர, உண்மையான மக்கள் நலன் இல்லை. மேலும்,

 இன்று இந்த ஊழல் பிரச்சனையை,பிரதமர் மோடி அரசியல் பழிவாங்கும் வேலையை வருமான வரித்துறை ,சிபிஐ, அமலாக்கத்துறை,இவர்களை வைத்து மிரட்டுகிறது என்று சொல்கிறார்கள். உங்களை மிரட்ட முடியுமா?  எவ்வளவு பெரிய பேச்சாளர்கள்? வல்லவர்கள், நல்லவர்கள் உங்களை எல்லாம் எப்படி மிரட்டலாம்?  நீங்கள் நீதிமன்றங்களை மிரட்டுவீர்கள்.

பத்திரிகைகளை மிரட்டுவீர்கள். அப்படி இருக்கும்போது உங்களை மிரட்ட முடியுமா?  இது மிரட்டுவது அல்ல, சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .அது வழக்கு விசாரணை, நீதிமன்ற விசாரணை, சென்று கொண்டிருந்தாலும், சில அமைச்சர்கள் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அங்கேயும் சட்டத்தின் ஓட்டையை தேடிக்கொண்டு, அதில் தப்பிப்பது எப்படி?  என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் .

கடவுள் நீதிக்கு தான் பயப்படுவாரே ஒழிய, அதிகாரத்திற்கு ஒரு காலம் பயப்பட மாட்டார். மேலும், இவை எல்லாம் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு,  வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் ஊழல் என்பது புரையோடிவிட்டது.

ஆனால், உத்தமர்களாக பேசி மக்களை கவிழ்த்து கொண்டிருப்பார்கள். ஒரு பக்கம் மோடியை, மற்றொரு பக்கம் அதானி, அம்பானி  இப்படி சொல்லி,  ஜாதி, மதத்தை கொண்டு வந்து, அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பதவி, கொடுத்து அவர்களை ஊழல் செய்ய வைத்து,  தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வீண் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ,வருங்கால இளைய தலைமுறைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை.

மேலும்,   தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக,திமுக அமைச்சர்கள்,முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,குறைந்தபட்சம் தற்போதைய சொத்து மதிப்பு ஒவ்வொருவருக்கும் 500 கோடிகளுக்கு மேல் தான் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது .இதுபோல் அந்த காலத்தில் அதாவது சுமார் 1960 க்கு முன்னர் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள், யாராவது ஒருவரை கை காட்டுங்கள் பார்க்கலாம்.

 அப்போது ஊழல் என்றால் என்ன? என்று கேட்பார்கள். இப்போது ஊழல் என்றால் எங்களுடைய உரிமை என்கிறார்கள். அதற்கு சட்ட விளக்கமும் தருகிறார்கள். மக்கள் இதை எல்லாம் சிந்திக்காத வரை, ஒரு பக்கம் இயற்கை உங்களை தண்டிக்கிறது. மற்றொரு பக்கம் இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் போராடிக் கொண்டிருக்றீர்கள். நீங்கள் எல்லாம் ஒரு பக்கம் ஜாதி பார்க்கிறீர்கள். ஆனால், ஜாதியில் வந்துள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் ,ஜாதிக்காக என்ன செய்தார்கள்? என்பதை பட்டியலிட்டு பாருங்கள்.அப்போது உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியவரும்.

வன்னியர் சமுதாயத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் ,அந்த சமுதாயத்திற்கு செய்தது என்ன? துரைமுருகன் செய்தது என்ன ?அதிமுகவில் சிவி சண்முகம் செய்தது என்ன? ராமதாஸ் செய்தது என்ன? இது எல்லாவற்றையும் பட்டியல் போடுங்கள், உண்மை வன்னியர் சமுதாயத்திற்கு தெரியும். அதே போல் தான், பட்டியல் இன மக்களுக்கு உங்கள் ஜாதி தலைவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் ? என்பதை பட்டியலிட்டு ,உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். எல்லோரும் பணத்திற்காக ஜாதியை விற்றது தான் அதிகம். தேர்தலில் நிற்கும் போது நம்மால் என்று சொல்வார்கள். வெற்றி பெற்ற பிறகு வேற ஆளாக இருக்கிறார்கள். இதை எல்லாம் நாம் கண்கூடாக பார்த்த ஒன்று. அது மட்டுமல்ல, அதிமுக, திமுக இன்று வரை வன்னியர் சமுதாயத்திற்கு எந்த நலனும், நல்லதும் செய்யவில்லை. அவர்கள் செய்து கொண்டார்கள் .அவ்வளவுதான். சமுதாயத்திற்கென்று இதை செய்தது என்று யாராவது நிரூபிக்க முடியுமா?

 இதனால் பயனடைந்தவர்கள் கட்சிக்காரர்கள் மட்டும்தான் .சமுதாயம் பயன் அடையவில்லை .இனியாவது இந்த சமுதாயங்கள் விழித்துக் கொண்டால் சரி. மேலும், இளைய தலைமுறைகள் சினிமாவை, வாழ்க்கையாக்கி கொள்ளாதீர்கள். அது வாழ்க்கைக்கு உதவாது .வெளி உலகத்திற்கு வேண்டுமானால், சினிமாவை ரசிக்கலாம். பார்க்கலாம். ஆனால், அதை வீட்டுக்குள் வைத்து குடும்பம் நடத்துபவர்கள், அவர்களுடைய குடும்பம் குடும்பமாக இருக்காது. அதனால் வாழ்க்கை வேறு, சினிமா வேறு ,அரசியல் வேறு என்பதை எப்போது படித்து உணர்ந்து தெரிந்து கொள்கிறார்களோ, அப்போதுதான் உண்மை உங்களுக்குள் தெரியும்.

 கோயிலுக்கு போய் இறைவனை வேண்டுகிறோம். இந்த கோயிலை சுற்றி அரசியல் கொள்ளைகாரன் சாமியிடம் தேங்காய் உடைக்கிறான். சாதாரண மக்களும் இறைவனை வேண்டுகிறார்கள் .இதில் யாருக்கு இறைவன் கருணை காட்டுவார்?

அதாவது திருடன் சாமி நான் இந்த வீட்டில் திருடினால், மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தேங்காய் உடைக்கிறான் .ஆனால், ஒரு விவசாயி நாளைக்கு நாத்து நடனும் ,வேலைக்கு ஆளும் வரணும், மழை வரணும் சாமி என்று தேங்காய் உடைக்கிறான் .இதில் கடவுளுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு விடுகிறது. என்னடா இது இவனும் என்னை வேண்டுகிறான். அவனும், என்னை வேண்டுகிறான். நான் யாருக்கு வரம்  அளிப்பது  ? குழப்பத்தில் கடவுள். புத்திசாலிகள் பிழைத்துக் கொள்ளட்டும் என்று தன் அறிவை யார் சிந்திக்கிறானோ ,அவனே உண்மையை உணரக்கூடியவன் என்று சாமி சொல்லிவிட்டார் ,

இதில், விவசாயி நான் உண்மையாக உழைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் .அதனால், கடவுள் நம் பக்கம் தான் இருப்பார் என்று இவன் நினைத்துக் கொண்டான். ஆனால், கொள்ளையடிப்பவனோ ,இது கலிகாலம் கூடுமான வரைக்கும்,  இங்கே தவறான வழியில் போனால் தான், நான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும் .அது அரசியலாக இருந்தால் என்ன? அல்லது நாம் தனிப்பட்ட முறையில் மக்களை ஏதோ ஒரு வழியில் ஏமாற்றி கொள்ளையடித்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான் .அவனுக்கு அரசியல் கட்சி என்பது பின்புலம், நமக்கு நம்முடைய திறமை என்பது பின்புலம், இது ஒரு பக்கம் என்றால், சினிமாவின் புகழில் அரசியல் அதிகாரத்தை பெற்று, உழைக்காமல் முன்னேறுவது எப்படி? எல்லாமே உழைக்காமல், குறுக்கு வழியில் வெத்து வெட்டுக்களுக்கு எல்லாம் கோடிகளை பார்க்க ஆசை வந்து விட்டதால், மக்கள்தான் இனி உஷாராக இருக்க வேண்டும்.

 இதில் புத்திசாலிகள் பிழைத்துக் கொள்வார்கள் .முட்டாள்கள் அரசியலில் ஏமாந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் புத்திசாலிகளாக இருக்கப் போகிறீர்களா?அல்லது முட்டாள்களாக இருக்கப் போகிறீர்களா? சிந்தித்து முடிவெடுத்துக் கொள்வது உங்களுடைய தனிப்பட்ட உரிமை. எங்களுடைய கடமை சொல்வது, ஒரு ஆசிரியர் பள்ளியில் தன்னுடைய கடமையை மாணவர்களுக்கு எப்படி எல்லாம், அந்த பாடத்தை புரிய வைக்க வேண்டுமோ அதற்காக அவர் பல புத்தகங்களில் இருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவர். அவருடைய கடமை, அதோடு முடிந்து விட்டது.

 ஆனால், அந்த மாணவன் பாடத்தை ஒரு முறைக்கு, நான்கு முறை படித்து, சிந்தித்து, பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் தான்,  அந்த வகுப்பில் தேர்ச்சி பெற்று  அடுத்த வகுப்பிற்கு போவதும், பிறகு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும், திறமையை வளர்த்துக் கொள்வதும், அந்த மாணவனிடம் தான் உள்ளது. அது போல் தான், இன்றைய அரசியல் மக்களுக்கு ஒரு சிக்கலான, நெருக்கடியான சூழ்நிலை, தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே அரசியல் படிக்காமல், மக்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து வெளிவர முடியாது. அரசியல் கட்சிக்கு பஞ்சமில்லை .

ஆனால், செயல்படுவதற்கு தான் ஆள் இல்லை. அதற்கு, இயற்கை தற்போது வந்த மழை வெள்ளம் உங்கள் அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது. இங்கே எத்தனை கட்சிகள் வந்தது? என்னென்ன உதவிகள் கிடைத்தது? இது எல்லாம் சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தமிழ்நாட்டு அரசியல் .

அதனால், சமூகத்திற்குள் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று சமூக வேற்றுமை இருந்தாலும், அரசியலை படிக்காமல், சிந்திக்காமல் இருந்தால், வருங்கால இளைய தலைமுறைகள் மிகவும் கஷ்டப்பட்டு வருந்த வேண்டிய சூழ்நிலைக்கு இந்த அரசியல் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *