நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram

தமிழகம் முழுதும் அரசு பள்ளி விடுதிகள் சுமார் 1300 உள்ளன. இந்தப் பள்ளி விடுதிகள் அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைகள் சார்பில் இயங்கி வருகின்றன.

இவற்றில் தற்போது 477 காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது .அதனால், இதற்கு தற்போது பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.