நாள் :07 நவம்பர் 2024
நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு வட்டம், ராசிபுரம் செல்லும் சாலையில் வையப்பமலை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று மாலை 6:35 மணிக்கு பள்ளி மாணவிக்கு வீட்டில் இருக்கும் பொழுது தேள் கடித்து விட்டது. உடனே அருகிலுள்ள வையப்பமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவமனையில் ஒரு செவிலியர்கள் கூட இல்லாததால், 25 நிமிடங்களுக்கு மேல்அந்த மாணவி வலியில் துடித்துள்ளார்.
25 நிமிடம் கழித்து ஒரு செவிலியர் மற்றும் ஒரு நபரும் வந்துள்ளனர்.
அப்போது அந்த மாணவியுடன் சென்ற சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் , P. பன்னீர் அவர்கள், மருத்துவமனையில் ஒரு செவிலியர்கள் கூட இல்லை? அவசர சிகிச்சைக்கு பொதுமக்கள் வந்தால் மருத்துவமனையில் ஒருவர் கூட இல்லை என்றால் எப்படி? என்று கேட்டுள்ளார்.
அதற்கு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களும் உடன் இருந்த நபரும் நீங்க எதுக்கு கேக்குறீங்க?
நாங்க அப்படி தான் வருவோம்?
உங்களால் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க?
நீ எங்க புகார் கொடுக்கிறோமோ கொடுத்துக்குங்க? என வாய் தகராறு ஏற்பட்டது.பின்பு அவரை தாக்க முற்பட்டனர். இதனால் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாவட்ட தலைவர் பி.பன்னீர் அவர்கள், நாமக்கல் ஆட்சியர், மருத்துவ கண்காணிப்பாளர்,
உதவி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தனர்.
சமூக ஆர்வலர்கள் :
இது போலத்தான் நிறைய மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும் நடக்கிறது. பொது மக்களுக்காக இது போன்ற செயல்களில் சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.