ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி வீழ்ந்தார்? அது பற்றிய சில அரசியல் தகவல்கள்.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 10, 2024 • Makkal Adhikaram

ஆந்திராவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தார் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் வெளிவந்தது.

 மகளிருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15,000 50 லட்சம் பெண்களுக்கு கொடுத்து வந்துள்ளார். அது மட்டுமல்ல, ஆட்டோ வாங்க கடன்கள், முதியோர் உதவித்தொகை ரூபாய் 3000 ,இப்படி ஏகப்பட்ட பல திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு செய்துள்ளார் .இருப்பினும் ஏன் இவர் வீழ்த்தப்பட்டார்? என்பதுதான் இங்கே மிகப் பெரிய கேள்வி? 

அதாவது தமிழ்நாட்டில் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு,தண்ணீர் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி எல்லாவற்றையும் உயர்த்தி, இங்கே கிள்ளி கொடுப்பது போல் அல்லாமல், அங்கே அள்ளியே ஆந்திர மக்களுக்கு கொடுத்துள்ளார்.அது மட்டுமல்ல,

வீதிக்கு வீதி, கஞ்சா உயரக போதைப்பொருட்கள் விற்பனை, இது சாமானிய மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.இதனால், ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் அரசை பற்றியோ, அமைச்சர்களை பற்றியோ, முதல்வரைப் பற்றியோ, விமர்சனம் செய்தால் அல்லது பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டால், உடனடியாக அவதூறு வழக்கில் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறை .அதுமட்டுமல்ல,

 எதிர்க்கட்சியை தலைவரான சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்கில் கைது செய்து, 50 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த சந்திரபாபு நாயுடு கண்கலங்கி ,இனி நான் சட்டமன்றத்திற்கு தான் செல்வேனே தவிர, வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்பதை மக்களிடம் சபதம் செய்துவிட்டு வந்துள்ளார். அது மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடுவை வயசு ஆயிருச்சு, புத்தி இருக்கா? போன்ற ஏளன பேச்சுக்கள்,சந்திரபாபு நாயுடுவின் மனைவியைப் பற்றி ஆபாசமான பேச்சு, அருவருக்கத் தக்க பேச்சு, என சீப்பஸ்ட் அரசியலை செய்து வந்துள்ளார். இது ஆந்திர மக்களுக்கு ஒரு அருவருப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்ல, அவரது கட்சிக்காரர்கள் இணையதளத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை, அவரது குடும்பப் பெண்களை ஆபாசமாக விமர்சிப்பதற்கு அளவே இல்லை .மேலும், தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் நடக்கின்ற எல்லா கூத்துகளும், அங்கே அவருடைய அப்பா ஒய் எஸ் ஆர் பேருந்து நிலையம், ஒய் எஸ் ஆர் புத்தக நிலையம், ஒய் எஸ் ஆர் கல்லூரி, ஒய் எஸ் ஆர் தெரு ,ஒய் எஸ் ஆர் கடற்கரை ,இப்படி எல்லாவற்றையும் ஒய் எஸ் ஆர்ஆந்திராவை மட்டும் தான் அவர் மாற்றவில்லை. அதையும் இந்த முறை ஆட்சிக்கு வந்தால் மாற்று இருப்பாரோ என்னவோ தெரியவில்லை .

மேலும், இன்று அதே ஒய் எஸ்ஆர் சிலைகள் உடைத்து எறியப்படுகின்றன. பலகைகள் பெயர்த்து எறியப்படுகின்றன. சந்திரபாபு நாயுடு 164 சட்டமன்ற இடங்களில் வெற்றி பெற்று, எம் பி யில் அதிக இடத்தில் வென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார் .இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் நிலைமை, எனக்கு வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக இருக்கிறது என அறிக்கை வெளியிட்டார்.

கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு 151 இடங்களைத் தந்த ஆந்திரா மக்கள் இந்த முறை 17 இடங்களை தந்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் ஆக்கிவிட்டனர். ஆட்சி அதிகாரம் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று மக்கள் அதிகாரத்தில் ஏற்கனவே பலமுறை எழுதி இருக்கிறேன். இது நிரந்தரம் என்று ஆடியவர்கள் எல்லாம் இப்படி தான் வீழ்த்தப்படுவார்கள். அவர்கள் அப்போதுதான் உணர்வார்கள் .ஒய் எஸ் ஆர் சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுத்த அன்றைய காவல்துறை இன்று சிலைகளை உடைப்பதை பார்த்து கண்டு கொள்ளாமல் நிற்கிறார்கள்.

 அவர்கள் யார் ?என்று தெரியவில்லை என்று கைவிரிக்கும் நிலையில் இருக்கிறார்கள் .சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் வியூகம் ஏற்படுத்திக் கொடுத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் ஜான் ஆரோக்கியசாமி, அவர் தலைமையில் 50 ஆயிரத்திற்கும் மேலான ஆந்திர மாநில ஐடி ஊழியர்கள் தேர்தல் பணி செய்துள்ளனர் என்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையும், வெற்றியும் என்பதை அவருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து ,அரசியல் உலகம் இந்த உண்மைகளை அறிந்து இனியாவது தங்களை திருத்திக் கொள்வார்களா ? –    செய்தியாளர் லீமா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *