ஆன்மீக சாமியார் பங்காரு அடிகளாருக்கு  பல ஆயிரம் கோடிகள் யார் கொடுத்தது ? எப்படி வந்தது ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆன்மீகத்தில் பல நிலைகள் உண்டு .அதில், உண்மையான நிலை மனிதன் தெய்வமாகலாம். இதுதான் உண்மையான சாமியார்களின் நிலை. அவர்கள் சித்தர்களாகவும் ,மகான்களாகவும் மக்களுக்காக பிறவி எடுத்தவர்கள். .அவர்கள் தான் உண்மையான சாமியார்கள், சாதுக்கள் எளிமையாக ஒருவேளை உண்டும், உண்ணாமலும் தெய்வமே கதி என்று இருப்பார்கள். அவர்கள் தான் இருக்கும் இடத்தை கூட, இந்த மக்களுக்கு காட்ட மாட்டார்கள். அவர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டும்?  யாருக்கு உதவி செய்யக்கூடாது?

 என்பதை அறிந்தவர்கள் .அவர்கள் கருணையே வடிவானவர்கள். தெய்வத்திற்கு நிகரானவர்கள். தெய்வத்தை பார்க்க கூடியவர்கள். அவர்களுடைய சொல்லுக்கு பஞ்சபூதங்களும் கட்டுப்படும். அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. அவர்கள் எது தேவை என்று நினைக்கிறார்களோ, அது அவர்களுக்கு தானாகவே கிடைக்கும். அவர்கள் நிலை வேறு.

 ஆனால், போலி சாமியார்களுக்கு தான் பணம் தேவை .அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் தேவை .மக்கள் கூட்டம் தேவை. இவர்களை துதிப்பதற்கு போலி பக்தர்கள் தேவை.  இந்த போலி சாமியார்கள், போலியான பக்தர்கள் , இது மூடநம்பிக்கையா? அல்லது உண்மையான பக்தியா? என்பது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒன்று. அதில் உண்மையும் இருக்கலாம். சில போலியும் இருக்கலாம். ஆனால், வழிபாடு என்பது ஒன்று இருக்கிறது. அதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், இந்த அம்மனை போற்றி துதித்து வணங்குபவர்கள், அதில் பக்தியோடு இறைவனை வணங்கியவர்களும் உண்டு. அதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது.

 நம்பிக்கைதான் கடவுள். அந்த விஷயத்தில் பங்காரு அடிகளார் கடவுளா? அல்லது மனிதனா? அல்லது சாமியார? என்பதை விட, ஒரு அடித்தட்டு மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சென்றார். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அவர் ஆன்மீகத்தில் வெற்றி பெறவில்லை. ஒருவர் ஆன்மீக நிலையில் வாழும்போது, என்னென்ன கடைப்பிடித்து ,எப்படி வாழ வேண்டுமோ, அப்படி வாழ்ந்திருந்தால் தான் ,அவருக்கு அந்த நிலை கிடைக்கும். இவர் வாழவில்லை .

அதனால், தான் மாரடைப்பால் இறந்தார். எத்தனையோ சாமியார்கள் ,சித்த புருஷர்களாக வாழ்ந்தவர்களுக்கு குறைந்தபட்ச முத்தி நிலையாவது அவர்களுக்கு கிடைக்கும் .அது கூட இவருக்கு கிடைக்குமா? ஏனென்றால் , மோட்சத்திற்கு செல்லும் ஆத்மாக்கள், இங்கு பிறப்பது கர்மாவின் கணக்கை கழித்துவிட்டு, மீண்டும் பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். மேலும்,இந்த பிறவியின் முக்கிய நோக்கமும் அதுதான் .

ஆனால், பிறந்த பிறகு பதவிக்காகவும், பணத்திற்காகவும், வேறு சில ஆசைகளுக்காகவும், துன்பப்படுகிறோம், துயர படுகிறோம், கவலைப்படுகிறோம். இந்த நிலையை அடைந்தவர்கள் கவலை என்பது கிடையாது. அப்படிப்பட்ட சாமியார்கள் உண்மையான சித்தர்கள் .முகத்தைப் பார்த்தால், தேஜஸ் அவ்வளவு ஒளி வீசும். அந்த ஒளி பங்கார அடிகளார் முகத்தில் இல்லை.

 இவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் .அதனால் தான், மத்திய மாநில மந்திரிகள் வரை இவர் காலில் விழுந்து சென்றிருக்கிறார்கள். இந்த அரசியல், ஆன்மீகம் இரண்டுமே, மக்களுடைய ஓட்டுக்காக இவரை அரசியல் கட்சிகள் நெருக்கமாக இவரிடம் இருந்தது. ஏனென்றால், ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயம், பட்டியலின சமுதாயம் ,வன்னியர் சமுதாயம், தேவர் சமூகம் எல்லாமே அதிகமாக இந்த பங்கார அடிகளார் ஆதிபராசக்தி மன்றத்தில் ஐக்கியம்.

குறிப்பாக பெண்கள் அதிகமாக இந்த கோயிலுக்கு வந்து செல்வார்கள். பெண்களின் ஓட்டு, நமக்கு மிக முக்கியம். இது ஒரு அரசியல் ஆன்மீக மன்றமாக தான் இருந்தது. இங்கே ஏமாந்த மக்களை, ஏமாறும் மக்களை, சாமியார்கள் ஆன்மீக போர்வையில் ஏமாற்றுகிறார்கள். அரசியல்வாதிகள் அரசியல் போர்வையில் ஏமாற்றுகிறார்கள். அவ்வளவுதான் இரண்டிற்கும் வித்தியாசம். இதில் இருவருமே மக்களை ஏமாறச் சொல்வது கிடையாது.

ஏமாந்தது மக்களின் குற்றமா?  அல்லது இவர்களுடைய அதிர்ஷ்டத்தின் மக்களின் துரதிஷ்டமா?  அல்லது இது கடவுள் குற்றமா?  அல்லது மனிதன் குற்றமா?  யாருடைய குற்றம்?  என்று இதற்கு பதில் சொல்ல முடியாது. சவுக்கு சங்கர் சொன்னது, ஒரு மேலோட்டமான அரசியல்.

இதில் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்தவருக்கு எப்படி 5000 கோடிக்கு மேல் சொத்து வந்தது ? இவர் எந்த அரசியல் பதவியிலும் இல்லை. அந்தப் பதவியை வைத்து கொள்ளையடிக்கவும் இல்லை. மக்களிடம் சென்று காணிக்கையும் கேட்கவில்லை .இந்த பணம் எப்படி?  இவ்வளவு சொத்து?  வந்தது. இந்த கேள்விக்கு இறைவன் தான் பதில் சொல்ல முடியும்.

 மக்களின் நம்பிக்கை கல்லையும் கடவுளாக பார்த்தார்கள்.மரத்தையும் கடவுளாக பார்த்தார்கள். மக்களின் நம்பிக்கை இவரை கடவுள் ரூபத்தில் வழிபட்டார்கள் .ஆனால் அது தவறு என்றும் சொல்ல முடியாது. கல்லைக் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளை கண்டால் கல்லு தெரியாது. இதுதான் கடவுள் .இங்கே பங்காரு அடிகளாருக்கு கடவுள் அருள் இருந்தது. அந்த அருளின் மூலம் பணமும், சொத்தும் சேர்ந்தது. அதை முறையாக தான தர்மம் செய்து, ஒரு பெரிய புண்ணிய நிலை அடைந்திருக்க வேண்டும்.

 கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்தும், ஆன்மிக நிலையில் அவர் வெற்றி பெற முடியவில்லை. கடவுளின் நிலை ஏழைக்கும் கடவுள், பணக்காரனுக்கும் கடவுள், ஏமாற்றுபவனுக்கும் கடவுள், நல்லவனுக்கும் கடவுள், கெட்டவனுக்கும் கடவுள், ஆனால், கொடுக்கும்போது கொடுப்பார், எடுக்கும்போது எடுத்துக் கொள்வார். அதுதான் கடவுள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *