தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்று இருந்த நிலையில் திடீரென தமிழ்நாடு – தமிழகம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். மேலும்,
தமிழ்நாடு, தமிழகம் இதில் பொருள் எதுவும் மாறவில்லை. இது இரண்டுமே நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். ஆனால், அதை வாக்கியத்தில் உபயோகப்படுத்தும் போது ,அந்தந்த இடத்திற்கு தகுந்தவாறு அதை பயன்படுத்துகிறோம்.
அதற்கும் பதிலடி கொடுத்து கவர்னர் ஆர்.என். ரவி தன்னுடைய சொந்த கருத்து தான் அது, தமிழக மக்களுக்கு திணிக்கப்பட்ட கருத்து அல்ல. மேலும், அதை மாற்ற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நான் பரிந்துரையும் செய்யவில்லை. இப்படி அவர்கள் தரப்பிலிருந்து, அதற்கு விளக்கமும் கொடுத்து விட்டார். மேலும், எந்த நோக்கத்திற்காக அரசும், அரசாங்கமும் ,ஆட்சியாளர்களும் இருக்க வேண்டுமோ ,அந்த நோக்கத்தில் இருந்து மாறுப்பட்டால் ,சின்ன விஷயத்தை பெரிது படுத்தலாம்.
ஆனால், பெரிய விஷயத்தை அதாவது மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்ன? அந்த திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது? நிர்வாகம் எப்படி தமிழ்நாட்டில் நடக்கிறது? ஆட்சி முறை எப்படி இருக்கிறது? ஊழலற்ற ஆட்சி முறை இருக்கிறதா? இதுதான் தேவையே ஒழிய, ஒன்றுமே இல்லாத வெத்து பேச்சுகளில் அரசியல் நடத்திக் கொண்டு,அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை தமிழக மக்கள் தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டு வருங்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்று தீர்மானிப்பது மிக முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.