
தமிழ்நாட்டில் திமுக அரசியல்!அரசியல் கட்சிகளின் சினிமா, டாரமாவா?தினம், தினம் தொடரும் சமூகப் பிரச்சனைகள்,

கிண்டி அண்ணாமலை பொறியியல் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் திமுகவுக்கு ஒரு பக்கம் காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி, உள் துறை செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் போன்றவருக்கு நீதிமன்றம் ஒரு பக்கம் சட்ட நெருக்கடிகள்
மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அரசியல் நெருக்கடிகள் மேலும்,பொதுமக்களின் அதிருப்தியும்,வேதனையும் சோசியல் மீடியாக்களில் தெரிவிப்பது, அதற்கு திமுகவை சார்ந்த ஐ.டி.சோசியல் மீடியாக்கள் அண்ணாமலையை விமர்சனம் செய்வது, மற்றொரு பக்கம் பிஜேபி பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவங்களை வீடியோக்களாக வெளியிடுவது,,

இப்படி மாற்றி,மாற்றி ஒருவரை, ஒருவர் தரக் குறைவாக பேசிக்கொள்வது, விமர்சித்துக் கொள்வது,நாகரீக மற்ற அரசியலின் உச்சகட்டம். மேலும், தமிழ்நாட்டில் நடப்பது சினிமா,ட்ராமா அரசியல் கூத்தா?அல்லது இது அரசியல் ஏமாற்று வேலையா?
நடித்தும், பேசியும் பொதுமக்களை ஏமாற்றும் அரசியலா? இதுதான் கலிகால அரசியலா? கேவலம் பதவிக்காக,எப்படியும் பேசுவது, எப்படியும் வாழ்வது,மனித ஜன்மத்திற்கே ஒரு கேவலம்.
ஒரு காலத்தில் அரசியல் என்றால், ஒரு கௌரவம் இருந்தது. கௌரமானவர்கள் அதற்கு வந்தார்கள். இப்போது தகுதியற்றவர்கள்,கௌரவத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள், எப்படியும் பேசி,எப்படியும் நடிக்கும் ஜால வித்தைக்காரர்களின் கூட்டம் தான் அரசியல் கட்சிகளா?
ஜெயலலிதா இருந்தவரை, எம்ஜிஆர் இருந்தவரை,கருணாநிதி இருந்தவரை,திராவிட கட்சிகளாக இருந்தாலும்,அரசியலில் ஒரு கௌரவம் இருந்தது. கொள்ளையடிப்பது தான் அரசியல் ஆகிவிட்டது.

அதுக்கு சோசியல் மீடியா ஒரு பக்கம் மற்றொரு பக்கம் கார்ப்பரேட் மீடியாகள், இவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் அதை நியாயப்படுத்துகிறது.இந்த சுயநல அரசியலை மக்கள் எத்தனை காலம் தான் இலவசத்திற்கும், பணத்திற்கும் உங்கள் வாக்குகளை விற்க போகிறீர்கள் ?

இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை,அமைச்சர்களின் ஊழல் பட்டியல், கொடுத்துள்ளார் என தகவல். இப்படி தமிழ்நாட்டின் திமுக அரசியல் ஒரு சீரியஸான நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.