ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்கள் கோயிலுக்காக சுமார் 2220 ஏக்கர் தனமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை ,அறநிலையத்துறை இடம் இருந்து வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டி, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன் 13. 7 .2023 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன்படி இந்த சொத்துக்கு, இந்து சமய அற நிலையத்துறை எவ்வித செயல்பாடும் அதில் கொண்டு வர முடியாது. அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த சொத்துக்கள் வன்னிய சமூக பொது நல வாரியத்தில் தான் சேர்க்கப்பட வேண்டும். அங்கு போய் அதிகாரம் இருக்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சினிமா ஸ்டுடியோ கட்ட ஐந்து ஏக்கர் நிலம் அபகரிப்பதாக செய்திகள் வெளிவந்தது.
இது எல்லாம் தவறான சட்டங்களின் மூலம், இந்த சொத்தை அபகரிக்க நினைத்தால், இதை சட்டப்படி எதிர்கொள்ள சமூகம் தயங்காது. மேலும் கோயில்கள் போர்வையில், இந்து சமய அறநிலையத்துறை இதில் உள்ளே நுழைவதற்கு ஒரு காலம் சட்டத்தில் இடம் இல்லை.
அதனால் திமுக அரசு தன்னுடைய அதிகாரத்தை தவறான முறையில் செயல்படுத்தும் வேலையில் ஈடுபட்டால், அதை சட்டப்படி எதிர்கொள்ள சமூகம் தயார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் – வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன்.