இந்தியாவிற்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! ஆபத்தா?எதிர்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம்  உண்மையா?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் ஒரு பக்கம் ஊடகத்தின் மூலமும் மறுபக்கம் தன்னுடைய அரசியலையும், ஜாதி ,மத உணர்வுகளையும் வைத்து மோடிக்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதுவரையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், இந்தியாவிற்காக செய்த செயல் திட்டங்கள், நன்மைகள் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன? நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு ,செய்த செயல்பாடுகள் என்னென்ன?

 தவிர, மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் நிலைமை என்ன? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறது? காங்கிரஸ் கட்சி வெளிநாடுகளில் இந்தியாவை அந்நிய ஆதிக்க சக்திகளிடம் அடிமையாக வைத்திருந்ததை மீட்டு, இந்தியாவின் வலிமையை, பெருமையை அவர்களாலே பேச வைத்தவர் மோடி. மேலும், தமிழ்நாட்டில் திமுக நாடக அரசியலை நடத்திக் கொண்டு ,சினிமா வசனங்களை பேசிக்கொண்டு, இருப்பது தான் அரசியல் என்று! அரசியல் தெரியாத மக்களிடம் பேசுகிறார்கள். அதுதான் பெரும்பாலான ஊடகங்களில் வெளி வருகிறது. நாட்டில்,

எதிர்க்கட்சிகளும் ,மோடி எதிர்ப்பு பிரச்சாரவாதிகளும், பிஜேபியை மதத்தை வைத்து மட்டுமே பார்க்கிறார்கள். அதே முஸ்லிம் மதவாதிகள் இந்த நாட்டுக்கு செய்த துரோகங்கள் எவ்வளவு? அதைப் பட்டியலிட்டால் இவர்களுடைய பிரச்சாரங்கள் பற்றி தெரியும். எத்தனை இடத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள்? போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள்? சமூக விரோத சக்திகளின் கும்பல்கள்? NIA விசாரணை எந்தெந்த மாநிலங்களில் நடந்து வருகிறது தெரியுமா?

 இவையெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று, இன்று ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவிக்க, நல்லவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நல்லவர்கள் வேஷம், எப்படி மக்களிடம் எடுபடும்? நாட்டில் திருடனும் உத்தமன் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறான். கொள்ளையடிப்பவனும், சமூகவிரோதியும் என்னைவிட அரிச்சந்திரன் இல்லை என்று தான் பேசிக் கொண்டிருக்கிறான். இதுதான் இன்றைய அரசியல் நிலைமை. இதையெல்லாம் எப்படி பொதுமக்கள் உணரப் போகிறார்கள்? என்பதுதான் தெரியவில்லை .

மோடி சொன்னது போல், என்னை விட இந்த தேசத்தை அதிகமாக நேசிப்பவர்களாக இருந்தால், நீங்கள் ஆட்சிக்கு வரலாம் தவறில்லை .ஆனால், உங்கள் சுயலாபங்களுக்காக அரசியல் செய்து, மக்களிடம் என்னை வீழ்த்த முடியாது. மக்கள் இதை நன்கு புரிந்து இருக்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை வைத்து இங்கே அரசியல் செய்கிறார்கள். மணிப்பூரில் என்ன நடந்தது? ஒரு பெண்ணை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் .அது சமூகங்களுடைய ஏற்பட்டுள்ள மத வெறியோ அல்லது ஜாதி வெறியோ அல்லது இனவெறியோ இருக்கலாம்.

 இதற்கும் மோடிக்கும், பிஜேபி அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ?மோடியா இவர்களை செய்ய சொன்னார்? ஒரு அரசியல் பேசுவதற்கும் தகுதி வேண்டும். அந்த தகுதி நடுநிலையாக இருக்க வேண்டும். நீங்கள் மோடி மீது குறை சொல்லி விட்டு உத்தமர்களாக ஆகிவிட முடியாது. உங்களுடைய ஊழல் கணக்குகள் எவ்வளவு? என்று சிபிஐக்கு ,அமலாக்கத்துறைக்கு, ஊழல் கண்காணிப்பு துறைக்கு மட்டுமே தெரிந்த உண்மை .இன்னும் மக்கள் அதை அதிக அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  மேலும்,

மற்றொரு பக்கம் மோடி இவர்களுடைய ஊழலை வெளிப்படுத்துகிறார். இது தான் அவர்களுக்கு மிகப்பெரிய குற்றமாகவும், அரசியல் எதிரியாகவும் பார்க்கிறார்கள். அதனால், ஒரு நாட்டின் அரசியலை, அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை எப்படி பார்க்க வேண்டும்? எல்லோராலும் 100% மக்களின் எதிர்பார்ப்புக்கு செய்ய முடியாது. அதில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், தவறு அரசியலாக இருந்து கொண்டு ,மோடியை பற்றி தர குறைவாக பேசிக் கொண்டிருக்கும் இவர்களுடைய அரசியல், அரசியல் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் ஆளுக்கு ஒரு கொள்கை, ஆளுக்கு ஒரு கட்சி, ஆளுக்கு ஒரு பேச்சு, இது எல்லாம் நாட்டை தூண்டாட வைத்து விடும். அதனால், இந்த மேடைப்பேச்சுகளும், மீடியா பேச்சுகளும்,சோசியல் மீடியா பேச்சுக்களும், மக்களுக்கு கொரோனாவை விட மிக, மிகக் கொடியது.

 இந்த கொடிய நச்சு பேச்சுக்களை மக்கள் புரிந்து கொண்டால், இந்த தேசத்தின் மீது வைத்துள்ள மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும், அன்பும் கொண்ட தேசபக்தனின் தலைமையை நாட்டு மக்கள் ஒருபோதும் இழந்து விடமாட்டார்கள். அரசியலால் தனக்கு என்ன லாபம் என்பதைவிட, இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், என்ன நன்மை? என்பதுதான் அரசியல். இதை தான் மக்கள் சிந்திக்க வேண்டும். அதுதான் இந்த தேசத்தின் வளர்ச்சி. அதுதான் இந்த தேசத்தின் ஒற்றுமை. மேலும்,

 முடிந்தவரை இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார் என்பதை மறுக்க முடியாது .எப்படியும் பேசுவது அரசியல் அல்ல. உண்மையை பேசுவது தான் அரசியல். ஆனால், பொய்யே அரசியல் ஆகிவிட்டது என்பது மக்களுக்கு தெரியாதது. எத்தனை நாளைக்கு இந்த பொய்யை மெய்யாக அரசியலில் நிரூபித்துக் கொண்டிருப்பார்கள்? அதனால், அவர்களுடைய செயல்பாட்டை ,செய்ததை பட்டியல் போடுங்கள். எதிர்க்கட்சிகள் செய்ததை பட்டியல் போடுங்கள். அப்போது உண்மை மக்களுக்கு தெரியும்.மேலும்,

தமிழ்நாட்டில் பிஜேபி கட்சியினர் எப்படி மக்களிடம் செயல்படுகிறார்கள்?என்பது இரண்டாவது பட்சம் தான் .ஆனால், மோடி இந்த நாட்டுக்காக, இந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே தேசபக்தன், அரசியல் தலைவன் மோடி தான், என்பதை மறுக்க முடியாது. இதை நான் சொன்னால் கூட ,எதிர்க்கட்சியினர், மோடியின் எதிர்ப்பு பிரச்சார வாதிகள், அரசியல் பேசலாம். ஆனால், அமெரிக்க பத்திரிக்கை ஃபாரின் பாலிசி மோடியை பாராட்டி ,செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *