காஷ்மீருக்கும் ,சீனாவுக்கும் என்ன சம்பந்தம் ? காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி. இதில் பேச்சுவார்த்தை என்பது சீனா வம்பு இழுக்கும் வேலை பார்க்கிறதா ? அல்லது இந்தியாவின் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக ஒரு சில அரசியல் கட்சிகள், என் ஜி ஓ அமைப்புகள்,
இது தவிர, சீனாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் சோனியா காந்தி 1500 கோடி ,அதே போல் பா சிதம்பரம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த வரலாறு இந்திய மக்களுக்கு தெரியாமல் இல்லை. அதனால் ,இங்கு இருப்பவர்கள் தான் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ளடி அரசியல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .காங்கிரஸ் கட்சியின் அரசியல் இந்த தேசத்திற்கு எதிரானது.
ஏனென்றால் இந்த நாட்டை அப்போதே அடிமையாகத்தான் பல நாடுகளுக்கு இவர்களுடைய ஆட்சி இருந்து வந்துள்ளது. அது பிரதமர் மோடிக்கு பிறகு தான் இந்தியாவின் வலிமை உலக நாடுகளில் பேசப்பட்டது. உச்சநீதிமன்றம் ஒரு சரியான தீர்ப்பு காஷ்மீர் விவகாரத்தில் கொடுத்திருக்கிறது. அதை வைத்து இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒருபுறம், மற்றொருபுறம் அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் எல்லை பாதுகாப்பு பிரச்சனையை உருவாக்குகிறது. இது எந்த அளவுக்கு இந்த தேசத்திற்கு எதிரான சக்திகள் என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும்.
மேலும், இங்குள்ள மதப் பிரிவினைவாதிகள், ஜாதிப் பிரிவினைவாதிகள் இவர்கள் எல்லாம் அரசியல் செய்வது, நாட்டு மக்களின் தேசப்பற்று இல்லாமல் இருப்பதை புரிந்து கொண்டவர்கள். அதனால், மக்களுக்கு தேச நலன், தேசப்பற்று மிகவும் முக்கியமானது. அரசியல் கட்சிகளின் சுயநலம், இந்த தேசத்திற்கு எதிரான பேச்சுகளை பேசுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அதுபோன்ற தேசவிரோத சக்திகள் அதிக அளவில் உள்ளது. இவர்களுக்கெல்லாம் எப்படி பணம் வருகிறது? என்பதை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.
இந்த தேச விரோத சக்திகளுக்கு அந்நிய நாட்டில் இருந்து பணம் வருவதால், இது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதை உடனடியாக மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். நம் இந்திய மக்களில் 60 சதவீதத்திற்கு மேல் அரசியல் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இதை வெளிப்படுத்தக்கூடிய ஊடகங்கள் அதைவிட மிகவும் குறைவு. பல ஊடகங்கள் தேச விரோத சக்திகளோடு, மறைமுகமாக கைகோர்த்துள்ளது. இதையெல்லாம் உளவுத்துறை, NIA கண்காணிக்க வேண்டும்.
மேலும், பா சிதம்பரம் பேட்டி கொடுப்பதற்கு அல்லது இந்த தேசத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஒரு நபர். ஏனென்றால், இந்தியாவின் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்றவர். ஒரு முட்டாள் கூட எதிரி நாட்டுக்கு தன்னுடைய நாட்டின் பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தை விற்க மாட்டான். அதன் பிறகு தான், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுப் புழக்கம் தீவிரவாத இயக்கங்கள் மூலம் தாராளமானது. இதையெல்லாம் அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் தெரியும்.
மேலும், மோடியைப் பற்றி குறை கூற இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தகுதி கிடையாது .அப்படி பேசுபவர்கள், இவர்கள் தகுதி என்ன? இதுவரை இந்த நாட்டுக்காக செய்தது என்ன? இவர்களுடைய அரசியல் கட்சியில் மக்களுக்காக செய்தது என்ன ? எல்லாவற்றையும் மக்களிடம் சொல்லட்டும். அதன் பிறகு, மோடியைப் பற்றி குறை சொல்வதை எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்களே ஏற்றுக் கொள்கிறோம் .
இப்படி அரசியல் தெரியாத வெத்து வெட்டுகள் இடம், அரசியல் செய்து கொண்டு படித்தவர்களையும் ,சிந்திப்பவர்களையும் முட்டாளாக்கிக் கொண்டு, மற்றொரு பக்கம் அடியாள் அரசியலை செய்து கொண்டு, இதையெல்லாம் சில ஊடகங்கள் பெருமையாக இவர்களுடைய பேச்சை போட்டுக் கொண்டு, மக்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் .உண்மையை சொல்வதற்கு தான் ஊடகங்கள் வேண்டுமே தவிர, பொய்யை பரப்புவதற்கு ஊடகங்கள் தேவையில்லை. ஊடகங்கள் என்ற பெயரில் நானும் பத்திரிக்கையாளன், நானும் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில் வெட்கக்கேடு.
எனவே, அர்த்தமற்ற அரசியல் கட்சி நடத்திக் கொண்டு, அர்த்தமற்ற பேச்சுக்களையும், செயல்களையும் செய்து கொண்டு ,அதற்கு அர்த்தமற்ற முட்டாள்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்து கொண்டிருப்பதை வருங்கால இளைய சமுதாயம் உண்மையைத் தெரிந்து விழித்துக் கொள்ள வேண்டும். நாடு இப்படிப்பட்டவர்களால் ஏழை, எளிய நடுத்தர மக்கள், உழைப்பவர்கள், நேர்மையானவர்கள் அவர்களின் வளர்ச்சி இந்த நாட்டில் கேள்விக்குறியாகவே இதுவரை இருந்து வருகிறது.
இதையெல்லாம் நம்முடைய ஒற்றுமை, அரசியல் விழிப்புணர்வு, தேச நலன் இதிலிருந்து நம் ஒவ்வொரு இந்திய மக்களும் ,இந்த தேசத்திற்கு எதிராக செயல்படும் மறைமுக அந்நிய சக்திகளை அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்த தேசத்தில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எப்போது இடம் கிடைக்கும்? என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி .