மே 09, 2025 • Makkal Adhikaram
.jpeg)
நாட்டின் எதிரி என்று வந்த பிறகு அவர்களுக்காக பரிந்து பேசுவது, அவர்களின் செயலை நியாயப்படுத்துவது, அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது, இந்திய நாட்டுக்கு இழைக்கப்படும் தேச துரோக பேச்சு மற்றும் செயல் என்பதை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இது பற்றி பாகிஸ்தானில் இருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு அவர் பாராட்டி பேசி உள்ளார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இங்குள்ள முஸ்லிம்களோ அல்லது திருமாவளவன், சீமான், வைகோ,போன்ற அரசியல் கட்சி கூட்டத்தை வைத்திருப்பவர்களோ, இந்தியாவுக்கு எதிராக பேசினால், அவர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பலாம் என்று சோசியல் மீடியாக்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வாறு பேசுவது இந்திய குடியுரிமையை கேன்சல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு சட்டம் இந்தியாவுக்கு அவசியம் தேவையானது. அதை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றுமா? இதுதான் தற்போது இந்திய நாட்டிற்கு அவசியமான ஒரு சட்டம்.மேலும்,

நம் முன்னோர்களும், சுதந்திர போராட்ட தியாகிகளும், தலைவர்களும் அவர்கள் இந்த மண்ணில் ரத்தம் சிந்தி பெறப்பட்ட சுதந்திரத்தின் அருமையும், தியாகத்தின் துயரங்களும், நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது .தவிர,

இது நாட்டில் உள்ள அனைத்து வகையான பயங்கரவாதத்தையும், எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் நாடு உள்ளது. அதற்கு நாட்டு மக்கள் இச்சட்டத்தை கொண்டு வர ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அது மட்டுமல்ல, நாடு அமைதி மற்றும் திறத்தன்மை, பரந்த அரசியல், மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும். அதுதான் தேசத்தின் வலிமை.