இந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

டிசம்பர் 14, 2024 • Makkal Adhikaram

இந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா? இந்த ஊழல்களை தாங்கி பிடிப்பது நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? அல்லது அதிகாரிகளா? அல்லது ஆட்சியாளர்களா? இதற்கு பின்னணியில் பணமா? அல்லது அரசியல் செல்வாக்கா? இவர்களை எதிர்த்து சாமானிய மக்கள்  போராட முடியுமா? நிச்சயம் முடியாது. 

அதற்காக அவதாரப் பிறவிகளால், மட்டுமே அது சாத்தியம். அப்படி போராடுபவர்களில் தமிழகத்தில் கே எஸ் ஹரிஹரன், முன்னாள் ஐ ஜி பொன் மாணிக்கவேல் மீதி பேர் எல்லாம் வாட்ஸ் அப் குழுக்களில் செய்தி போட்டுக்கொண்டு, குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அதைத்தான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் பார்க்க முடிகிறது. மேலும்,

நாட்டில் தங்களை யோக்கியவான்களாக காட்டிக் கொள்ளும் தினமலர் பத்திரிகை நிர்வாகிகள் முதல் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், தொழிலதிபர்கள்,அரசியல் கட்சியினர்கள் வரை கோயில் சொத்துக்களை ஆக்கிரமிக்காத ஆட்களே இல்லை என்ற நிலைமை தமிழ்நாட்டுத் தவிர, வேறு எங்கும் இருக்க முடியாது.மேலும்,

இதில் என்ன ஒரு பெரிய முக்கிய விஷயம் என்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் அக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி  பொதுமக்களுக்கு தெரிந்தால் எவ்வளவு கோபமும், ஆத்திரமும் படுவார்கள்? கோயில் சொத்துக்களை கொள்ளையடித்த குடும்பங்கள் கண்டிப்பாக நிச்சயம்  சட்டத்தை ஏமாற்றினாலும், தெய்வத்தை ஏமாற்ற முடியாது. அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொள்ளும். இது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் இதை அனுபவிப்பார்கள்.மேலும்,

இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு துறை இருந்து அதை முறையாக கண்காணிப்பதில்லை. நடவடிக்கை எடுப்பதில்லை. பாரபட்சம் ஏன்? தனக்கு வேண்டியவர்கள், கட்சிக்காரர்கள்,காங்கிரஸ், அதிமுக ,திமுக காலத்தில் இருந்து இந்த கோயில் சொத்துக்கள் பங்கு போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இவர்களுக்கெல்லாம் எப்போது தண்டனை கொடுப்பார்? என்பதுதான் தெரியவில்லை. ஏனென்றால் சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். மேலும்,இவர்கள் யாரும் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை. கடவுள் இவர்களுக்கு நிறைய சொத்துக்களை கொடுத்து இருக்கிறார்.பல லட்சம் கோடி, மதிப்புள்ள சொத்துக்களை கொள்ளை அடித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு என்ன தோஷம் ஜாதகத்தில் ஜோதிடர்கள் சொல்வார்கள்? 

மேலும், ராஜாக்கள் காலத்திலும்,ஜமீன்தாரர்கள் காலத்திலும் தானமாக கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கள், மேலும் பக்தர்கள் கடவுளிடம் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் இறைவனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். இந்த காணிக்கை ஏழை முதல் பணக்காரன் வரை செலுத்துகிறார்கள். அந்த பணமும், இவர்கள் கணக்கெழுதி சாப்பிடுகிறார்கள். ஆகக் கூடிய அரசியல்வாதியாக இருக்கட்டும் அல்லது கோயில் அதிகாரிகளாக இருக்கட்டும், அந்தப் பணத்தை நீங்கள் பங்கு போட்டு கொள்ளையடித்தால், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அதில் பாவ கணக்கு கண்டிப்பாக உண்டு.மேலும்,  

யாரெல்லாம் அவனுடைய கர்ம வினை தீர்ப்பதற்காக உண்டியலில் போட்டுவிட்டு, போனானோ நிச்சயம் அவனுடைய பாவத்தை நீங்கள் பங்கு போட்டு கொண்டு, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போயிருக்கிறீர்கள்.அது,  நோயாகவோ ,வழக்காகவோ அல்லது சொத்து பிரச்சனையாகவோ இல்லை விபத்து பிரச்சனையாகவோ எப்படியோ ஒரு காலகட்டத்தில் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ, அதை நிச்சயம் அனுபவிக்க நேரிடும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மேலும்,

 தெய்வத்தை நிந்திப்பது பாவம். பாவ பிறவிகள் ,ஈனப்பிறவிகள் தான் தெய்வத்தை நிந்திக்கும். ஏனென்றால், அவனுக்கு இன்னும் இந்த உலகத்தில் பிறந்து, பிறந்து, துன்பத்தை அது உருவாக்கி விடும். இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன்.  இறைவன் இருக்கின்றான் கண்ணுக்குத் தெரிகிறதா? காற்றில் தவழுகிறான், கண்ணுக்குத் தெரிகிறதா? எவ்வளவு அர்த்தமுள்ள பாட்டு. எவ்வளவு சிந்திக்க வைக்கின்ற கருத்துக்கள், கண்ணதாசன் சொல்லிவிட்டு போனது. 

அதுவும் ஒரு நாத்திகவாதியாக இருந்து,கடவுள் இருப்பதை உணர்ந்தவர். அவர் எல்லாம் ஒரு தெய்வீக கவிஞன். மறைந்து எத்தனையோ ஆண்டுகளானாலும் அந்தப் பாடல்கள் என்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கண்ணதாசனின் பெயர் இருக்கிறது. ஆனால், நீங்கள் கொள்ளையடித்து சொத்துக்கள் இருக்குமா? உங்களிடமே அது இருக்காது. உழைத்து கஷ்டப்பட்ட சொத்துக்களே! ஒரு காலகட்டத்தில் மொத்தமாக அழிவில்லை என்றாலும், அதில் பாதியாவது அழிகிறது. 

அதனால், கடவுள் இதை அழிப்பதற்கு சட்டத்தினால் நீண்ட காலம் ஆகும் என்று படித்த முட்டாள்கள் கனவு காணக்கூடாது. எல்லாமே தலைகீழாக மாற்றக்கூடிய சக்தி உள்ளவர். உன் அரசியல் செல்வாக்கு, பத்திரிக்கை செல்வாக்கு, எதுவும் பெரிதில்லை. இவையெல்லாம் கடவுளுக்கு  ஒரு தூசுக்கு சமானம்.காங்கிரஸ்,அதிமுக, திமுக, அதை ஒழுங்காக பராமரிப்பு செய்யாமல், இப்படி எல்லாம் கொள்ளை போக இந்து அறநிலையத்துறை இருப்பது, அதற்கு ஒரு அமைச்சர் சேகர்பாபு இருப்பது பந்தாவாக பேசி விட்டு போவதற்கு தான் இதையெல்லாம் சரி செய்வதற்கு இல்லை. மேலும்,  

இதை சரி செய்ய வேண்டுமென்று முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் எவ்வளவோ  முயன்றும் நடக்கவில்லை. சட்டமும், நீதிமன்றமும் எவ்வளவோ வகையில் இதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது .ஆனால், இது தோண்ட, தோண்ட அரசியல்  பின்புலத்தில் இருக்கக்கூடியவர்கள், கடவுளுக்கு பயப்படாமல் , மனசாட்சிக்கு பயப்படாமல் ,சட்டத்திற்கு பயப்படாமல், இந்த காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இருக்கக்கூடிய கோவில் சொத்துக்களை மீட்கக் கோரி பல ஆண்டுகளாக நான் நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கி வருகிறேன். காவல்துறையில் பல முறை புகார் மனுக்களை ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, வெளி உலகத்திற்கு நல்லவர்களாக வேஷம் போடும் சில முக்கிய புள்ளிகளை இந்து சமூக மக்களுக்கு ஆலய பாதுகாப்பின் தலைவர்,கே.எஸ். ஹரிஹரன், வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். மேலும்,

இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள்?, போராட்டங்கள்? எவ்வளவு என்று சொல்லி எழுத முடியாத ஒன்று. ஏனென்றால், இவர் எதிர்த்து போராடுவது மிகப்பெரிய புள்ளிகளாக இருக்கக்கூடிய நபர்கள் தான், அவர்கள் யார்?யார்? டிவிஎஸ் கம்பெனி, தினமலர் பத்திரிக்கை நிர்வாகிகள், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாடுதுறை ஆதீனம் இவர்கள் மட்டுமே சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்கள் பல லட்சம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை போலி பட்டா, சிட்டாக்கள் மூலம் அபகரித்துக் கொண்டுள்ளனர். அதில் சிலவற்றை விற்றும் இருக்கிறார்கள். மேலும்,

இது நீதிமன்றத்திலும் வழக்காக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் புகார்களாக அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு தான் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் . நில மோசடி விவகாரத்தை கையில் எடுக்கும் இந்து சமய அறநிலையத்துறை நேர்மையான ஐஏஎஸ் ஆணையர்கள் யாராயிருந்தாலும், உடனடியாக மாற்றப்படுகிறார்கள்.அப்படிப்பட்ட நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் முன்னாள் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரனும் ஒருவர். இந்த விஷயத்தில் பல நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் இவர்களுடைய அரசியல் செல்வாக்கால் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் ஆலய பாதுகாப்பு நிறுவனர் ஹரிஹரன். மேலும் ,இவர்கள் !

கோயில் சொத்துக்களை வைத்து தொழிலதிபர்கள் ஆனார்களா?இப்படிப்பட்ட தினமலர் பத்திரிக்கை உண்மையின் உரைகல் என்று போட்டுக் கொள்கிறது? மேலும், அரசியல்வாதிகளின் ஊழல்களை இவர்கள் வெளியிட என்ன தகுதி?

தவிர ,இந்த புள்ளிகள் அனைவரும் காங்கிரஸ், அதிமுக, திமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழகத்தில் எத்தனை இருக்கிறதோ அத்தனை கட்சிகளுக்கும் இவர்கள் பல்லாயிரம் கோடி தேர்தல் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம் .இது தவிர ,இந்த புள்ளிகள் கமிஷன் வித் கரப்சன் துறை சார் அதிகாரிகள் முதற்கொண்டு அலுவலர்கள் வரை பல நூறு கோடிகள் கொடுத்திருக்கலாம்.மேலும்,

இது போன்று தமிழக முழுவதும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இவர்களிடமிருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்களை மீட்பது எப்போது? முஸ்லிம், கிறிஸ்டியன்கள் அபகரித்துள்ள நிலங்களை மீட்பது எப்போது? இனியாவது இந்துக்கள் அரசியல் கட்சியினர், மற்றும் தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், என்று சொல்லிக் கொள்ளும் இந்த போலிகளின் மோசடிகளை தெரிந்து விழித்துக் கொள்வார்களா? – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *