இன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள்! கல்வியை வியாபார நோக்கமாகி விட்டதால் !கல்வி சந்தைப் பொருளாகி ஒழுக்கம்! சமூகத்தில் கேள்விக்குறியானதா?

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கல்வி என்பதற்கு அடையாளமே ஒழுக்கம்! ஒழுக்கம் இல்லாத ஒருவன் படித்தவன் என்று பல பட்டங்களை, அவன் பேருக்கு அருகில் போட்டுக் கொள்வதில் பெருமை இல்லை .அதே போல் படிக்காமலே, இன்றைய அரசியல்வாதிகள் போல், போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதைத்தான் திருவள்ளுவர் –

கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று சொல்லி உள்ளார். ஒருவன் கற்றதற்கு அர்த்தமே அதற்கு தகுந்தார் போல் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் அதன் அர்த்தம். ஆனால், இங்கே கல்வியை போதிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கே ஒழுக்கத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் அவர்கள் எப்படி பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும், கல்வியும் போதிப்பார்கள்? கல்வி என்பது இன்றைய பொருளாதாரத்தின் படி கட்டாகிவிட்டது. படித்தவன் பொருளீட்ட முடியும். படிக்காதவன் அந்த கல்வியறிவு இல்லாமல் அவனால் அந்த வேலை செய்ய முடியாது.

இங்கே கல்வி என்பது பொருளீட்டும் வேலைக்கு முக்கியத்துவம் ஆனதாக அமைகிறது. அதில் பொது அறிவு ,வாழ்க்கை அறிவு, சமூகத்தில் பொருள் இருந்தால் தான் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள முடியும் என்ற ஒரு தவறான கருத்து விதைக்கப்பட்டிருப்பதால், அது இன்று ஆலமரமாகி, அது பல விழுதுகளை சமூகத்தில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை, ஆண்டி முதல் அரசன் வரை பணத்திற்கு தான் முக்கியத்துவம் ஆகிவிட்டது.

 தவிர, கல்விக்கான தகுதி, ஒழுக்கம், நேர்மை இவை எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கல்வி தனியாரிடம் என்று அரசாங்கம் நடத்த அனுமதி கொடுத்ததோ ,அப்போதே அந்த கல்வி வியாபாரமயமாகி விட்டது. அதனுடைய விளைவு, இன்று சமூகம் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு சென்றுள்ளது என்பதை டாஸ்மாக் வியாபாரம், கஞ்சா வியாபாரம் ,போதைப் பொருள் வியாபாரம், சமூக குற்றங்கள் ,வழக்குகள், பொருளாதார மோசடி வழக்குகள், இவையெல்லாம் அதிகரித்திருப்பதற்கு மிக முக்கிய காரணம். மேலும் அரசியல் பத்திரிகைதுறை நீதித்துறை நிர்வாகத்துறை காவல்துறை அனைத்துமே தகுதிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. தவிர ,பணம் தான் முக்கிய வாழ்க்கையின் குறிக்கோளாகி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்று சந்தோஷம் எங்கே? என்று கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காத மக்கள் அந்த காலத்தில் பணத்திற்காக அலையவில்லை. போலி வாழ்க்கையில் பந்தா காட்டவில்லை. சொகுசு வாழ்க்கையைத் தேடி யாரையும் ஏமாற்றவில்லை.

பிறரை ஏமாற்றியும், ஊர் சொத்துக்களை கொள்ளை அடித்து வாழ நினைக்கவில்லை. போலியான பொய் கணக்குகளை எழுதி சம்பாதிக்கவில்லை. எக்காலத்திலும் பிறருக்கு தீங்க நினைக்கவில்லை.  சட்டத்துக்கு பயந்து, சமுதாயத்திற்கு பயந்து ,கடவுளுக்கு பயந்து வாழ்ந்தார்கள். இவையெல்லாம் பொய் என்று நினைத்து, எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் .அதுதான் வாழ்க்கையின் உச்சகட்டம். பணம் கொடுத்தால் நம்மிடம் ஆயிரம் பேர் வருவான்.

 இப்படி எல்லாம் ஒரு தவறான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், நம்மை காப்பாற்ற கட்சி இருக்கிறது. அது யெல்லாம் இறைவனுடைய சட்டத்திற்குள் தான் இருக்கிறது. அது இயற்கை என்ற ஒரு சக்தியாக அது இருக்கலாம் அல்லது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியாக இருக்கலாம். செய்த தவறுக்கு அதிலிருந்து, யாரையும் அது தப்ப விடாது. அதனுடைய கணக்கை முடித்துவிட்டு தான், யாராக இருந்தாலும் அது வெளியில் அனுப்பி வைக்கும். இதை நம் முன்னோர்கள் இந்து தர்மப்படி கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். அதனால், அவர்கள் நிம்மதி சந்தோஷம் நிறைவு எல்லாவற்றையும் அனுபவித்தார்கள்.

இப்போது உறவுகள் பணம் ஆகிவிட்டது. நட்பு பணமாகிவிட்டது. வாழ்க்கை என்பது எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும், என்ற நிலைமைக்கு வாழ்க்கை வந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் உழைக்காமல் ஊரை ஏமாற்றி கோடிகளை கொள்ளையடிக்கும் தொழிலாக இன்றைய அரசியல் மாறிவிட்டது.

இந்த பேராசை மனிதனை ஒருபோதும் நிம்மதியாக வாழ வைக்காது. அன்பு, அறிவு, ஒழுக்கம், நேர்மை ,மனித வாழ்க்கையில் சிறந்த மனிதனாக, உயர்ந்த மனிதனாக மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால், கல்வி என்பது கடமை செய்வதற்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் உயர்வுக்கும், சிறப்புக்கும், பெருமைக்கும், போற்றுதலுக்கும், உரிய இடத்தில் கல்வி இருக்க வேண்டும்.

 அப்படி வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு தான், என்றும் காலத்தால் அழியாத அவர்களின் வாழ்க்கை வரலாறு.

ஆனால், இப்பொழுது கல்வி வியாபாரப் பொருளாகி, கடையில் விற்கும் கடை சரக்கு போல்  ஆகி விட்டது. அதனால், ஆசிரியர்களிடமே ஒழுக்கம் இல்லை. அவர்களும் கல்வியாளர்கள் என்ற பெருமையும், கௌரவத்தையும், இழந்து தவறு செய்து அவர்களுடைய தகுதியை இழந்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. அது என்னவென்றால், தேனி மாவட்டத்தின் நகரில் உள்ள மகாராஜா பள்ளி தாளாளர் மற்றும் முத்தையா பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், இரண்டு பள்ளிகளில் பொறுப்பேற்று வேலை செய்வது சட்டப் படி தவறு.

இது பற்றி அப்பகுதி மக்கள் ( C E O )விற்கு பல புகார் மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர். அதை எல்லாம் மாவட்ட கல்வி அதிகாரி (C E O) வருமானத்தை பார்த்துக்கொண்டு, கிடப்பில் போட்டு வந்துள்ளார்கள்.

அதனுடைய விளைவு ,இன்று மகாராஜா பள்ளி தலைமை ஆசிரியர் சென்றய பெருமாள் தான், தாளாளராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுவதை பிடிக்காமல் தன் மீது இவர் தான் புகார் கொடுத்திருப்பார் என்று அவரை அன்பழகன் பள்ளி மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் அடித்து துன்புறுத்தி உள்ளார். அது மட்டுமல்ல, அந்தப் பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, இவர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி செந்தில் வேல் முருகனுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது எந்த அளவிற்கு கீழ்த்தரமான ஒரு வேலை. இதை ஆசிரியர்கள் ,அதுவும் பள்ளியில் செய்யலாமா? இச்சம்பவம் நான் சொன்ன அத்தனை கேள்விகளுக்கும்,கருத்துக்களுக்கும், இச்சம்பவமே எடுத்துக்காட்டான ஒரு விடையாகும்.

MURALI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *