உலகில் மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்து பயணித்தது வரை மனித வாழ்க்கை சந்தோஷம், மகிழ்ச்சி. ஆனால், தற்போது அதற்கு எதிரான சிந்தனை ,எதிர்மறையாற்றல், மற்றும் இயற்கையை அலட்சியப்படுத்தும் நோக்கத்தில், மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும், அவனை கர்வத்தில், ஆணவத்தில், அகம்பாவத்தில் வாழும்போது, இயற்கை பல்வேறு நாடுகளில் பூகம்பம், நிலச்சரிவு, மழை, வெள்ளம், பசி ,நோய், வறுமை போன்ற கொடுமையான துன்பத்தை அனுபவிக்க வைப்பதற்கு முக்கிய காரணம்.
இதுதான் வாழ்க்கையில்! எது தேவை? எதற்கு தேவை? என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், சுயநலம் பெருகி, அன்பு, ஈவு ,இரக்கம், கருணை எதுவுமே இல்லாமல், மனசாட்சி இல்லாமல், மிருகமாக வாழ்ந்தால், இயற்கையின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
அதுதான் தற்போதைய உலக நாடுகளில் முக்கியமாக பாகிஸ்தான், துருக்கி, சிரியா, இலங்கை போன்ற நாடுகளில் தற்போது அரங்கேறி இருக்கும் முக்கிய பிரச்சனை . இந்த பிரச்சனைக்கு எல்லாம் யார் முக்கிய காரணம்? என்பது இன்னும் அந்த மக்களுக்கு தெரியவில்லை. தீய சக்திகள் ஆட்சியாளும் போது மக்கள் அதற்கான தண்டனையை அவர்களிடம் இருந்து பெறுவார்கள்.மேலும்,
பல அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் கூட்டங்கள் வாயிலாக, வில்லாக வலைப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதில் ஐந்திலிருந்து 10% ஆவது நடத்த தகுதி இருக்குமா? என்பது தெரியாதவர்கள் கூட, பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு கட்சி ,அந்த கட்சிக்கு பின்னால் விசில் அடிக்க, கைத்தட்ட ஒரு கூட்டம், அதற்கும் பணம். இதை பார்த்து ஏமாறுவதற்கு மக்கள், நன்றாக பேசுகிறார். பேசுபவர்கள் எல்லாம் செய்பவர்கள் அல்ல, செய்பவர்கள் எல்லாம் பேசுபவர்கள் அல்ல.
இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியலில் இந்த மக்கள் ஏமாறப் போகிறார்களோ ,அது காலத்திற்கு தான் தெரியும். ஆனால், ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை, இயற்கை என்ற ஒரு இறைவன் நிச்சயம் அதற்குரிய தண்டனை அதனிடமிருந்து பெறுவார்கள் .அதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. மேலும் அரசியலில் தவறானவர்களை மக்கள் அவர்களுக்கு உரிய பதவியை கொடுக்கும்போது, பதவிக்கு வந்து அவர்கள் நல்லது செய்வதை விட கெடுதல்களையும், தீமைகளையும் தான் செய்கிறார்கள். அதாவது தவறான அரசியல், அந்த மக்களை பசிப் பட்டினி, கொடுமை அளவுக்கு ,இன்று பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது .
அதேபோல், எங்கெங்கெல்லாம் மக்களின் தவறான கலாச்சாரம், பழக்க வழக்கம், அரங்கேறி இருக்கிறதோ, அங்கே எல்லாம் இயற்கையின் தண்டனை அதிகரித்திருக்கிறது. இன்று நாம் ஒருவரை ஏமாற்றினால் தான், நாம் பெரியாளாக முடியும் என்ற ஒரு தவறான குறுக்கு வழி, சாதாரண மக்கள் முதல் வெத்து வெட்டு, குடிகாரர்கள், வரை நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் ஒருவனுடைய வறுமை ,கேவலமாக பார்ப்பது, இழிவாக பேசுவது, தவறான ஒன்று. எதுவும் நிரந்தரம் இல்லாத ஒன்று. இன்றைய பணக்காரன், நாளைய ஏழை. இன்றைய ஏழை, நாளை பணக்காரன். இதை ஒவ்வொருவருடைய 30 ஆண்டுகால வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் உண்மை தெரியும். இன்றைய ஆளும் கட்சி, நாளைய எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் போகலாம்.
இது எல்லாம் ஒரு காலத்தின் சுழற்சி . 50 ஆண்டு காலத்திற்கு முன் மக்கள் படித்தவர்கள், பண்பாளர்கள், ஒழுக்கமானவர்கள் ,நேர்மையானவர்கள் இவர்களுக்கு மதிப்பளித்தார்கள். அவர்களை பின்பற்றி முன் உதாரணமாக வாழ்ந்தார்கள். அவர்கள் தனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்ந்தார்கள்.
ஆனால், இப்பொழுது தகுதி இல்லாதவன் ,அந்தப் பதவிக்கு பொருந்தாதவர்கள், அவர்களுக்காக வாழ்ந்து கொண்டு ,தன்னைவிட யாரும் உத்தமரே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் அரசியல், பதவி, அதிகாரம், பணம், இது நிரந்தரமானது அல்ல . மக்கள் எப்போது இதை உணர்ந்து இயற்கையும், இறைவனையும் நம்பி வாழ்கிறார்களோ அப்போதுதான் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். அதுவரை காலம் என்ன பதில் சொல்லுமோ, என்பதை யாருக்கு தெரியும்?
இதனுடைய பலன் இன்று மக்கள் சந்தோஷம் மகிழ்ச்சி, நிம்மதி, இழந்து, இருப்பவன், இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல், இயற்கை எல்லோரையும் வாழ்க்கையில் போராட வைத்திருக்கிறது.ஏழையாக இருந்தாலும் அக்காலத்தில் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்து இருக்கிறான். இப்போது பணக்காரனாக இருந்தாலும் எப்படி நிம்மதியும், சந்தோஷம் இல்லாமல் வாழ்கிறான். இதற்கு யார் காரணம்? மக்களா ?இல்லை அரசியல் கட்சிகளா? இல்லை ஆட்சியாளர்களா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத வரை மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள்.
மேலும், இன்றைய அரசியலில் ரவுடிசம், போலி வாழ்க்கை, பதவி ,கர்வம், ஆர்ப்பாட்டம் இதில் பெரிய அளவில் உயர்த்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள போராடுகிறார்களே ஒழிய ,உண்மை ,நேர்மை, தர்மம், இவையெல்லாம் ஏளனமாக பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் ரவுடி கூட்டமும், வெத்து வெட்டு கூட்டமும், அரசியலில் மக்களை ஏமாற்றும் தொழிலாக கொண்டிருக்கிறார்கள் .இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், சுயநலத்தின் பின்னால் அரசியல் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லோருக்குமே ஒரு தவறான வழிமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
இன்றைய அரசியல் கொள்ளையடிப்பது, சட்டப்படி மோசடி செய்வது ,இவை எல்லாம் நடக்கின்ற ஒரு அரசியல், இந்த அரசியலுக்கு முட்டாள்கள் கூட்டம் தலைமை தாங்கி ,புத்திசாலிகளையும் அடிமையாக்க துடித்துக் கொண்டிருக்கிறது. இதனுடைய பலன் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனாவில் பட்ட வேதனை மறக்க முடியாது. இப்போது விலைவாசி உயர்வு, வாழ்க்கை போராட்டங்கள், நிம்மதி இன்மை, சந்தோஷம் இன்மை, வெளியில் சென்று ,வீட்டுக்கு வருவது வரை நிச்சயம் இல்லாத இன்றையக் வாழ்க்கையின் போராட்டம். இதையெல்லாம் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்விக்குறியில் தான் இருந்து வருகிறது.
அரசியல் என்பது மக்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு ஒரு அஸ்திவாரம். அந்த அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. மனசாட்சி இல்லாத அரசியல் கட்சியினர், தொண்டு உள்ளம் இல்லாத இவர்கள், எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்? ரவுடிசம் செய்து பழக்கப்பட்ட கூட்டம், எப்படி ஒரே நாளில் நல்லவனாக மாறிவிடுகிறது? எம் ஆர் ராதா சொன்னது போல, 365 நாளும் ஒரு வழக்கறிஞர் பொய்யை மட்டுமே சொல்லி, பிழைப்பு நடத்தி வந்தவர், நீதிபதி ஆனால், அவர் எப்படி உண்மையை அல்லது நீதியை சொல்லுவார்?
பிராடு, பித்தலாட்டம் கூட்டம், அந்த காலத்தில் ஒழுக்கமான, நேர்மையான தலைவர்களின் பெயர்களை பேசிக்கொண்டு, அரசியலில்,ஏமாற்றுவது, வாடிக்கையாகிவிட்டது. கொள்கை என்பது ஒருவருக்கும் இல்லை. கொள்ளையடிப்பது தான் கொள்கை. இதற்கு மக்கள் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இயற்கை, அதனுடைய கோபத்தை வெளிக்காட்டி வருகிறது. இதை இன்னும் உணராத மக்கள், எப்போது உணர்ந்து திருந்த போகிறார்கள் ?இதில் படித்தவர், படிக்காதவர் எல்லாரும் ஒரே சமமாக தான் இருக்கிறார்கள். மேலும்,
இந்தியாவில் மகான்கள், சித்தர்கள் அவதரித்து ,இந்த உலக நன்மைக்காகவே வாழ்ந்தவர்கள், அவர்களுடைய இறை சக்தி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மாற்ற நாடுகளில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும்,இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள். அந்த இறையாத்மாக்கள் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய அருள் ஆசியால் தப்பித்து வருகிறார்கள். ஆனால், இயற்கை கோபித்தால் அதற்கான விளைவு ஆபத்தானது என்பதை புரிந்தால் சரி.