ஏப்ரல் 14, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என்.ரவி திமுக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் கடத்தி வந்துள்ளார். மேலும், அந்த மசோதாகளை ஜனாதிபதிக்கும், அனுப்பி வைத்து விட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மசோதாக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகளான பர்த்தி வாலா மற்றும் மகாதேவன் அதற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்க அவர்களுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இங்கே இந்த மசோதாக்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த ஒரு மசோதா.!குறிப்பாக சொல்லப் போனால், அது ஏழை, எளிய நடுத்தர மக்களின் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். இதை இதுவரை கவர்னர் தான் துணைவேந்தர்களை நியமனம் செய்து வந்தனர்.மேலும்,

இப்போது தமிழக முதல்வருக்கு அந்த அதிகாரம் இந்த நீதிபதிகள் கொடுத்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் அரசியல் வாதிகளாக செயல்பட்டர்களா? அல்லது மனசாட்சிப்படி செயல்பட்டார்களா? அல்லது நீதிபதிகளாக செயல்பட்டார்களா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? துணைவேந்தர்கள் நியமனம், அரசியல்வாதிகளின் கையில் இருக்கக் கூடாது என்பதுதான் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தின் சாராம்சம்.

ஆனால், இது சட்டத்தையே மீறி இவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்கி கொடுக்கப்பட்டுள்ளது என்றால் ,சட்டம் நீதிமன்றத்தில் ஆட்சியாளர்களுக்காக வளைக்கப்படுகிறதா? அடுத்தது, ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படுவதாகவும், மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதாகவும், தெரிவித்திருக்கிறார்கள்.இதுவும் ஒரு நீதிபதி தெரிவிக்கும் சரியான கருத்தல்ல .அரசியல்வாதிகள் சொல்லும் கருத்து போல் இருக்கிறது .ஏனென்றால், அவர்கள் சட்டத்தின் மாண்பிலிருந்து இறங்கக்கூடாது. இவர்கள் இருவரும் இறங்கி இருக்கிறார்கள் என்பது தான் நன்றாக தெரிகிறது.மேலும்,

அதற்காக தான் இப்போது தமிழ்நாட்டில் உள்ள கார்ப்பரேட் பத்திரிகைகள் இதை புகழ்கிறது. குறிப்பாக தலையங்கமே எழுதுகிறார்கள். கூட்டாட்சி தத்துவத்திற்கு என்ன அர்த்தம்? இனிமேல் கவர்னருக்கு சட்ட மசோதாகளை அனுப்பாமல், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி,தமிழக சட்டமன்றம் சட்டமாக்குமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி? மேலும், இது தான் கூட்டாட்சி தத்துவமா?
தவிர,இனிமேல் ஆளுநர்களையும், ஜனாதிபதியும் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று ஆக்கி விடலாமா? அல்லது அப்படி ஒரு பதவியே தேவையில்லை என்று எடுத்து விடலாமா? இதற்கெல்லாம் நீதித்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும். தவிர,

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய கல்வித்துறையை அரசியல்வாதிகளின் கையில் போனதால், கல்வி இப்போது வியாபாரமாக இருக்கிறது .துணைவேந்தர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் கையில் போனால் கல்வி !அப்போது கடையில் விற்கும் கடை சரக்கு பொருளாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த சட்ட மசோதா தான் கூட்டாட்சி தத்துவமா? இதுதான் தலையங்கத்தின் சிறப்பு அம்சமா?மேலும்,

இங்கே கவர்னர் செய்தது தவறா? நீதிபதிகள் செய்தது தவறா? எந்த சட்டம் வேண்டுமானாலும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் கட்சியினருக்கும் அது சாதகமாக அல்லது அதனால் லாபம் வரக்கூடிய மசோதாக்களை இவர்கள் சட்டம் ஆக்கினால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா?தவிர,இவர்கள் கொடுக்கின்ற அத்தனை சட்டங்களும், சட்டமாக்கப்பட்டால், மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும்,
இதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு இந்த சட்ட மசோதா விஷயம் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், இதற்கான முக்கிய முடிவுகளை நாடாளுமன்றமும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இதற்கான முக்கிய தீர்வை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு.