ஊராட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் கிராம மக்களின் நலனுக்காகவா ? அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களின் நலனுக்காகவா?

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்கள் ,தற்போது மக்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல், அது ஊராட்சி மன்ற தலைவர்களின் சொந்த நலனுக்காக மாறிவிட்டது. இதனால் நூற்றுக்கு 90 சதவீத கிராமங்கள், தமிழ்நாட்டில் ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதிருப்த்தியும் போராட்டங்களும், வழக்குகளும் காவல்துறை புகார்களுமாக சென்று கொண்டிருக்கிறது.

அதனால், மத்திய அரசு இவர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமே அதிகமானது. அதை மேலும் குறைத்து ஒரு கௌரவ தலைவராக மட்டும் ஊராட்சிகளுக்கு இருக்க வேண்டும்.

ஆனால், இவர்கள் ஊராட்சிகளில் உள்ள பொது சொத்துக்களை அதாவது ஏரி மண் எடுத்து சாப்பிடலாமா? அல்லது ஆற்றுமண் எடுத்து சாப்பிடலாமா? ஏரி மரங்களை வெட்டி சாப்பிடலாமா? இப்படிப்பட்ட கணக்குகளை போட்டு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவர்களிடம் வீடு கட்ட அனுமதி வழங்கும், அதிகாரம் கொடுத்தால் வீடு கட்டுபவர்கள். ஏற்கனவே, செத்துவிட்டர்கள்.. (இங்கு நான் சொல்வது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலைமை) கட்டிட வேலை செய்யும் மேஸ்திரி, சித்தாள் இவர்களின் கூலி ஒருபுறம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் ஒருபுறம், இதைவிட ரியல் எஸ்டேட் துறையின் டி டி சி பி அலுவலகம், சிஎம்டிஏ போன்ற அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்குவதற்கு பொதுமக்கள் படாத பாடுபடுகிறார்கள்.

இந்த லட்சணத்தில் கிராமங்களில் வீடு கட்ட இனி தலைவர்களின் வரை பட அனுமதி வேண்டுமென்றால், இந்த செலவு கணக்கில் பாதையை செலவுகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு கட்டுபவர்களிடம் எதிர்பார்ப்பார்கள், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்குள் அவர்கள் வீடு வேண்டாம் என்று நிலைக்கு வந்து விடுவார்கள் .அந்த அளவிற்கு அவர்களை டார்ச்சர் செய்வார்கள். அதாவது கிராம ஊராட்சிப் பகுதிகளில் கட்டட வரைபட அனுமதி வழங்குதல் சம்பந்தமாக,

கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒருவர், புதிதாக கட்டடம் கட்டவோ, ஏற்கனவே உள்ள கட்டடத்தில் மாற்றம் செய்யவோ கருதினால் பணிகள் தொடங்கும் முன் கிராம ஊராட்சித் தலைவரிடம் உரிய படிவத்தில் முழு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பிட வேண்டும்.

கட்டடத்திற்கான வரைபடம், கட்டுமானம் அமையப்போகும் இடத்தின் தன்மை மற்றும் கட்ட உபயோகிக்கும் பொருட்களின் விவரங்களை மூன்று பிரதிகளில் அளிக்க வேண்டும்.கூடுதலாகக் கட்டவோ, மாற்றம் செய்யவோ வேண்டின் அதன் காரணத்தினை அளிக்க வேண்டும்.விண்ணப்பம், வரைபடம், இணைப்புகள் மற்றும் தேவையான இதர ஆவணங்கள் ஆகியவற்றில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நில உரிமையாளராக இல்லையெனில், உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று இணைக்க வேண்டும்.வழிபாடு, மதசார்புள்ள கட்டடம் கட்ட வேண்டும் எனில், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற வேண்டும்.

சுடுகாடு, இடுகாடு போன்றவற்றின் எல்லையிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் குடியிருப்பு / கட்டடத்தினைக் கட்ட வேண்டுமெனில், அந்த சுடுகாடு/இடுகாடு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அனுமதி வழங்கப்படும்.கட்டடங்களில் அணுகக் கூடிய இடங்களிலிருந்து குறைந்த அழுத்த மின்சக்தி கம்பிக்கும் 1.50மீ இடைவெளி பக்கவாட்டிலும், உயர் அழுத்த மின்சக்தி கம்பிகளுக்கு 1.75 மீ  இடைவெளி பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.

அணுக முடியாத இடங்களில் குறைந்தது 2.5 மீ  இடைவெளி மின்கம்பிகளிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும். அணுகக்கூடிய இடங்களில் குறைந்த 4.5 மீ இடைவெளி மின்கம்பியிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும்.கட்டட விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பின் அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் கிராம ஊராட்சிக்கு உண்டு.

கிராம ஊராட்சிக்கு மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ கிராம ஊராட்சியால் அனுமதிக்கப்படமாட்டாது.குடியிருப்புகளுக்கு 4,000 சதுர அடிகளுக்கு மேலும், வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுர அடிகளுக்கு மேலும் கட்டட அனுமதி கோரும் நிகழ்வுகளில் கிராம ஊராட்சியின் வழியாக நகர் ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனரது ஒப்புதல் பெறப்படவேண்டும்.

எனவே, தமிழக அரசு இந்த நிலையை மாற்றி, இந்த அதிகாரத்தை கொடுத்தால் நிச்சயமாக அது மக்கள் நலனுக்கு எதிராக தான் இருக்கும் .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் கொடுத்துவிட்டு சபித்துக் கொண்டிருப்பார்கள். அதனால், தமிழக அரசு இதுபோன்ற அதிகாரங்களை கொடுப்பது, திமுக அரசு விரைவில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வதோடு , மேலும்,

கிராமங்களில் முறைகேடாக மண் அள்ளுவது, முறைகேடாக ஏரி மரங்கள் ஏலம் விட்டு கொள்ளையடிப்பது, பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பது, கிராமங்களுக்கு வரக்கூடிய நிதிகளை மக்களுக்கு சென்றடையாமல், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பங்கு போட்டுக் கொள்வது, போன்ற செயல்பாடுகளில் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களால் திமுக அரசின் மீது பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இது வரும் தேர்தலில் திமுகவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் சட்டமன்றத்திலே நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, பட்டா நிலங்களில் மண் எடுத்துக் கொள்ளலாம். (விவசாயத்திற்கு மற்றும் மண் பாண்டம் செய்வதற்கு,) இது எல்லாம் நடைமுறையில் வேறு மாதிரியாக இருக்கும். பாட்டா நிலத்தில் ஓட்ட பர்மிட் வாங்கி விட்டு, ஏரி, குளம், குட்டைகளில் இவர்களுடைய ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மண் எடுப்பார்கள். இது அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியவில்லை.

மேலும், ஏரிகளை தூர்வாருகிறோம் என்று, ஏரி மண்ணை கொள்ளை அடிப்பார்கள் .இதுவும் அவருக்கு தெரியுமா? தெரியாதா? தெரியவில்லை. அதனால், இவை அனைத்தும் திமுகவிற்கு நிச்சயம் எதிராகத்தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்தில் கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *