நாட்டில் ஊழல் என்பது கரையான் போன்று அரித்துக் கொண்டிருப்பது. அதற்கு ஆதரவாக எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்புலமும், சமூகத்தின் பாதுகாப்பும் இருக்கக் கூடாது. ஊழல்வாதிகள் நாட்டு மக்களின் உழைப்பை திருடும் குற்றவாளிகள்.
மேலும், நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அதனை திருப்பி அளிக்கும் சூழலை உருவாக்குவது நமது நோக்கம். இது பற்றி ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்தார் .
தவிர, வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் ஆனால், ஊழலுக்கு சிறிதளவும் இடம் கொடுக்காத நிர்வாக கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்புகள், தற்காப்பு பணியில் ஈடுபட வேண்டியதில்லை என்று தெரிவித்ததை குறிப்பிட்டார். மேலும், ஊழல் செய்பவர்கள், எந்த அளவுக்கு சக்தி படைத்தவர்களாக இருந்தாலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் பாதுகாக்கப்படக்கூடாது.
இது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளின் பொறுப்பு எந்த ஒரு ஊழல் செய்யும் தனி நபருக்கும், அரசியல் மற்றும் சமூக ஆதரவு கிடைக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தவிர ,ஊழல் செய்யும் ஒவ்வொரு நபரையும் சிறையில் அடைக்க வேண்டும். மேலும் 2014க்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் மீது மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கும்போது, கிராமங்களுக்கு 15 பைசா மட்டுமே கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.
ஆனால் நாட்டில் உள்ள தற்போதைய தலைமை, ஊழலுக்கு எதிராக உறுதியாக போராட அழைப்பு விடுப்பதுடன், ஒதுக்கப்படும் 100 பைசாவும் ஏழை மக்களுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக சென்று சேர்வதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழல் தடுப்பு சட்டம் 2088 பிரதமர் நரேந்திர மோடி அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு புதிய வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று மாற்றப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்களில் ஊழலை தடுப்பதற்கான வழி முறைகள் செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து லோக்பால் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படுத்தல் பலனாக மதிய அளவில் எந்த ஒரு ஊழலும் ஏற்படவில்லை. புதுடில்லியில் நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி ,மக்களின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துவதற்கு ஊழல் முக்கிய காரணங்களாக உள்ளன.
மேலும், ஊழல் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தவிர, நிர்வாகத்தில் வெளிப்படுத்த தன்மை கொண்டு வரும்போது ஊழல்கள் உருவாகாது.அது மட்டுமல்ல, தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் , திட்டங்கள் சென்றடைவதன் மூலம் சமூகத்தில் பாகுபாட்டையும் ,ஊழலையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்.
மேலும் தகுதியானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது என்பது, ஊழலுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால், ஊழலுக்கு எதிராகன போராட்டத்தையும், ஊழல் இல்லாத இந்தியா என்ற கட்டமைப்பை உருவாக்குவது தான் ,மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முக்கிய கடமை.