நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எத்தனையோ நீதிபதிகள் வந்தார்கள், போனார்கள். ஆனால், ஆனந்த் வெங்கடேஷ் இந்த நீதிபதி இப்படித்தான் என்று வழக்கறிஞர் முதல் சாதாரண பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வரை பேசத் தொடங்கி விட்டார்கள்.
அதுமட்டுமல்ல, நாட்டில் நடக்கின்ற ஊழல் பிரச்சனையை வழக்கறிஞர்களே இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தால், கதை கந்தலாகிவிடும். அவர் ஏ டூ இசட் தோண்டி எடுத்து விடுவார் என்றெல்லாம் இவரைப் பற்றிய பேச்சு. ஒரு நீதிபதிக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், இன்று பெருமையுடன் பேசி வருகின்றனர்.
ஆனால், அதிர்ச்சியில் ஊழல்வாதிகளும் ,ஊழல் அமைச்சர்களும், உள்ளாட்சித் துறை நிர்வாகிகளும், உறைந்து கிடக்கிறார்கள் . நீதிமன்றத்தை விலைக்கு வாங்கிவிடலாம் .சட்டத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம். என்று தான் இந்த அமைச்சர் பதவி அதிகார போதையில் நினைத்திருக்கிறார்கள் .கால தேவன் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகளை நியமிப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. மேலும்,
இதுதான் இவரால் நீதித்துறைக்கு சேர்க்கப்பட்ட பெருமை. நீதித்துறையில் எத்தனையோ வழக்கறிஞர்கள், எத்தனையோ நீதிபதிகள் இருக்கலாம் .ஆனால், நீதித்துறைக்கு பெருமை சேர்த்தவர்கள் எத்தனை பேர்? என்பது தான் முக்கிய கருத்து. அதே போல் நாட்டில் எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருக்கலாம் .பத்திரிகைகள் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனுக்காக உண்மையை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகள் எத்தனை? பத்திரிகையாளர்கள் எத்தனை? அதுதான் மக்களால் பேசப்படும் முக்கிய கருத்து.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆறு அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் என்ற பாகுபாடு இல்லாமல் கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து அந்த வழக்குகளை விசாரித்து வருவது நீதித்துறைக்கு பெருமை சேர்க்கின்ற செயல். தவிர,
நீதி நிலைநாட்டப்படுவது நீதி தேவனுக்கே பெரும் மகிழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நடக்கின்ற நீதி விசாரணை, நீதி தேவதை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதை நினைத்து நீதிபதிகள், நீதி விசாரணை செய்ய வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு ஆத்மாவுக்கள் தேடப்படும் உண்மை நிலை .
அதை நீதிபதிகள் அலட்சியம் பார்க்காமல், பதவி, அதிகாரம் பார்க்காமல், ஏழை, பணக்காரன் பார்க்காமல், நீதியை மக்களிடம் சேர்க்க வேண்டிய முக்கிய கடமை நீதிபதிகளுக்கு உண்டு.
மேலும், அமைச்சர் பொன்முடி மீது இரண்டு சொத்து குவிப்பு வழக்குகள் 2026 -2011 ஆட்சி காலத்தில் அவர் மீதும் ,அவர் மனைவி விசாலாட்சி மீதும் போடப்பட்டுள்ளது .மேலும், 2026 இல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மீது போடப்பட்ட வழக்கு அதுவும், 2012ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த வழக்கையும் தானாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
அதேபோல், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ,அமைச்சர் ஐ பெரியசாமி, அமைச்சர் வளர்மதி ( அதிமுக) இவர்ளுடைய ஆறு பேர் வழக்கும், இனி இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி ஐந்து முதல் நாள்தோறும் நடைபெறும் என்றும், பிற வழக்கு விசாரணைகள் பாதிக்காத வகையில் மாலை 3மணி க்கு மேல் இவ் வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளின் இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது என நீதிமன்ற தகவல் .