சித்தர்கள், மகான்கள், மகா புருஷர்கள் எல்லோரும் இந்த உலகத்தில் அவதாரம் எடுப்பது ஏதோ ஒரு காரணகாரியத்திற்காக மட்டுமே பிறவி எடுப்பார்கள் .அந்த பிறவியின் நோக்கம் முடிந்தவுடன், அவர்கள் ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அப்படித்தான் இந்த 18 சித்தர்கள் அல்லாமல், இந்த உலகத்தில் எத்தனையோ சித்தர்கள் அவதரித்து பிச்சைக்காரனாகவும், பைத்தியக்காரனாகவும், கந்தல் துணிகளை அணிந்து கொண்டு, கிழிந்த பைகளையும், மூட்டைகளையும் சுமந்து இந்த கர்ம வினையை மக்களிடமிருந்து வாங்கியவர்கள்.
அப்படி கர்ம வினை இவர்கள் வாங்கும் போது, அதனுடைய தாக்கம் இவர்களை தாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .அப்படி வருகின்ற பக்தர்களின் வினையை இவர்கள் அனுபவிக்கும் போது, எத்தனையோ சித்தர்கள் தன்னுடைய காலில் புழுவை வைத்தது ,அந்தப் புழுவின் வலியுடன் வாழ்ந்தது, எல்லோரும் பார்த்த ஒன்று .இதில் ஒன்று மட்டும் தெரிகிறது அது என்ன என்றால் ,யாருக்கு இவர்கள் கர்ம வினை தீர்க்க வேண்டும்? என்ற விதி உள்ளதோ ,அவர்களுக்கு மட்டும்தான் அந்த மகானிடம் அவர்களுடைய கர்ம வினை தீரும். எல்லா சித்தர்களிடம் சென்று வரலாம் .
ஆனால், கர்ம வினையை தீர்ப்பவர்கள் இவர்களுக்கும் ,அவர்களுக்கும், உள்ள ஒரு ரகசிய சூட்சமம் .அதிலும் அவர்களுடைய தரிசனத்தை பார்ப்பதற்கும், அதன் மூலம் அவர்களுடைய கர்ம வினை தீர்ப்பதற்கும், இந்த பிறவியில் விதி இருந்தால் மட்டும் தான் அதுவும் முடியும் .இப்படிப்பட்ட ஒரு மகா சித்தர்கள் வாழ்ந்த இந்த பூமியில் எவ்வளவோ பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள். எத்தனையோ ஏழைகளை வாழ வைத்திருக்கிறார்கள். நோயிலிருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். கர்ம நோயில் இருந்து தீர்க்க முடியாத வியாதிகளை தீர்த்திருக்கிறார்கள் .இறந்தவனை பிழைக்க வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்களுடைய சித்துக்கள்.
இருப்பினும் அவர்களுடைய எளிமை, அவர்களுடைய அன்பு ,கருணை எந்த சாமி யாருக்கும் வராது. அவர்கள் கோடிகளை ,லட்சங்களை எதிர்பார்ப்பதில்லை . அன்பு மட்டுமே எதிர்பார்ப்பார்கள் .தவிர ,எந்த சித்தரும் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதில்லை. அவர்கள் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பஜனை பாடுவதுமில்லை. அவர்களுடைய நிலையே முற்றிலும் வேறுபட்ட நிலை. நான் கேள்விப்பட்டதில் பழனி பக்கத்தில் கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா மிகப் பெரிய ஒரு மகானாக வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய தரிசனம் கிடைத்தவர்கள் மிகப்பெரிய பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும் .எத்தனையோ பேர் கர்ம வினைகள் தீர்த்து வாழ்க்கையில் நான் நல்லா இருக்கிறேன். அவரிடம் சென்று எனக்கு நோய் குணமாகியது. அவரிடம் சென்று என்னுடைய பிரச்சனைகள் தீர்ந்தது .இப்படி பல பேர் இந்த youtube மூலம் தங்களுடைய கருத்துக்களை, அவரைப் பற்றி தெரிவிக்கிறார்கள்.
கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா இன்று ஜீவசமாதி அடைந்தாலும் ,என்றும் அந்த இடத்தில் அவருடைய ஜாதியை சென்று வழிபட்டு வரும்போது அதற்கான பலன் அந்த கர்ம வினை யாருக்கெல்லாம் தீர்த்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து வருகிறார்கள் என்றும், கணக்கன்பட்டி சுவாமி சாட்சாத் பழனி முருகனாகவும், பாம்பாட்டி சித்தர் அவதாரமாகவும் இருந்தவர் என்று அவரை சுற்றி இருந்த நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. எந்த நிலையிலும் மக்களிடம் அவர்கள் தன் நிலையை காட்டிக் கொள்வதே இல்லை. அவர்கள் சாதாரண மக்களை விட ,எளிமையாக ஏதோ விவசாய கூலி வேலை செய்பவர்கள் போல ,காட்சிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர் ஐயா கணக்கன்பட்டி மூட்டை சாமி பழனிசாமி ஐயா.
அவர்களுக்கு பெரிய பதவியில் இருப்பவர்களும் ஒரே மாதிரி தான் ,பெரிய கோடீஸ்வரனும் ஒரே மாதிரி தான், சாதாரண ஏழை, நடுத்தர மக்களும் ஒரே மாதிரி தான், எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்ப்பவர்கள் இந்த மகான்கள் மட்டுமே, அவர்களிடம் எந்த வேற்றுமையும் இருக்காது .இதற்கு உதாரணம் கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா ஒரு தடவை சசிகலா, அவரைப் பார்க்க சென்றிருந்தபோது, அவ எதுக்கு இங்க வரா, போ சொல்லு அவளை என்று துரத்தியவர் கணக்கன்பட்டி ஐயா. அவர்களுக்கு பிடித்தால்தான் அவர்களை நெருங்க முடியும். அது மட்டுமல்ல
கொடியே செயல்களை ,பாவக்காரியங்களை செய்து கொண்டு சித்தர்களையும் மகான்களையும் ஒருகாலும் தலைகீழாக நின்றாலும் ,அவர்களுடைய தரிசனம் கிடைக்காது .இதில் என்ன மற்றொரு விசேஷம் என்றால், இவர் நான்வெஜ் சாப்பிடுவார். அதாவது சாமி சிக்கன் பிரியாணி வாங்கி வந்து கொடுக்க சொல்லி அதை சாப்பிடுவார். இது என்னடா ,சாமி போய் இப்படி எல்லாம் சாப்பிடுகிறார்களே என்று சில பேர் நினைத்ததுண்டு .
ஆனால், அது சிக்கன் பிரியாணி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும். அவர் கை பட்டதும் அது புனிதமான பிரசாதம் ஆகிவிடுகிறது .அவர்கள் செய்வது யாருக்கும் தெரியாத ஒன்று .அவர்கள் பார்த்தாலே கர்ம நோயை குணப்படுத்தி விடுவார்கள். அது மட்டுமல்ல ,அவர் பேசுவது புரியாத பரிபாஷை. புரிந்தவர்களுக்கு தெரியும் .இப்படி வாழ்ந்த ஒரு தெய்வம், நமக்கு அவர் இருக்கும் போது அந்த தரிசனம், அவருடைய பேச்சு கிடைக்கவில்லையே என்பது மிகப் பெரிய அதங்கம். அங்கே அவரிடம் சரண் அடைந்தவர்களுக்கு இந்தப் பிறவிப் பயன் பூர்த்தியாகி இனி பிறவி தேவையில்லை என்ற நிலைக்கு உயர்த்தி விடுவார் .அதாவது மனிதன் என்று பிறவி எடுத்தவர்கள் அனைவரும் மனிதன் நிலையில் இருக்கிறார்களா ? என்பது சந்தேகம் .
ஏனென்றால் அப்போதே கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே, இந்த மிருகத்தன்மை தான் இப்போது ரவுடி, கிரிமினல் ,கட்சியில் பதவி கொலை, கொள்ளை செய்துக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு, ஜெயிலுக்கு போய்க்கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் மனித நிலையை அடைவதற்கு அவர்கள் செய்த கர்ம வினை பயனே தடை .
முற்பிறவியில் இதே போல பல பஞ்சமா, பாதகங்களை செய்தவர்கள், இப்பிறவியில் மீண்டும் அந்த வினை இவர்களை தொடர்கிறது. இவர்கள் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், நல்ல எண்ணங்களையும், நல்ல கர்மாக்களையும் செய்தால் மட்டும் தான் வெளிவர முடியும் .அது மட்டுமல்ல தெய்வத்தை சரணடைந்து, இது போன்ற மகான்கள் சித்தர்களின் தரிசனம் பெற்று வாழ்க்கையில் மேன்மையான பிறவியை எடுக்க முடியும். மேலும் இவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், இவர்களுடைய கர்மாவை ஓட்டி தான் அவர்களும் இருப்பார்கள் .அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .
மேலும், இப்போது இருக்கின்ற மந்திரிகள், எம்பி ,எம்எல்ஏக்கள் இவர்களெல்லாம் உயர்ந்த பிறவி என்று சொல்ல முடியாது. இவர்கள் பாவத்தை பங்கு போட்டுக் கொள்ள வந்த பாவக்கூட்டம் தான். அதாவது இந்த மக்களுக்கு நன்மை செய்வதை விட ,தீமையும் ,கெட்டதையும் அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் கொடுத்த ஒரு பணி மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டது .ஆனால், இவர்கள் அவர்களை குடிகாரர்கள் ஆக்கி, போதைகளை கொடுத்துபணம் சம்பாதிப்பது தவறான செயல்.
மேலும் ,அவர்களை குறுக்கு வழியில் பணத்திற்காக எதையும் செய்யும் பல தீய எண்ணங்களை, அவர்களுக்கு ஊக்கு வைத்து, மீண்டும் இந்தப் பிறவியை விட கீழான நிலைக்கு செல்வதற்கு வழி காட்டுபவர்கள் தான், இன்றைய திமுக,, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சீமான், திருமாவளவன், ராமதாஸ், வைகோ போன்ற பல கட்சியினர். எல்லோரும் இந்த மக்களை ஏமாளியாக்கி ,முட்டாள்யாக்கி , வைத்து கட்சி நடத்தி, எதைச் சொன்னாலும் கைதட்டும் அடிமைகளாக தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டு, ஒரு கூட்டத்தை காண்பிக்கும் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் நாட்டில் என்ன கட்சிப் பணி? செய்து இந்த மக்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதை எந்தெந்த கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை பட்டியலிட்டால், இவர்களுடைய கட்சிப் பணி உண்மை தெரிந்து விடும் .அதனால், எத்தனையோ பிறவியில் செய்த பாவக் கணக்கு, இப்போது கட்சியில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கணக்கு ஒரு தெரியாத கணக்கு. அது மட்டுமல்ல, பல பட்டங்களை படித்தவர்கள் கூட ,இந்த கணக்கு புரியாத கணக்கு.இது மகான்கள் ,சித்தர்கள் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையின் கணக்கு வழக்குகள், தெரிந்தவர்கள். சாமானியர்கள் அதை தெரிந்து கொள்ள முடியாது .
ஜோதிடர்கள் ஒரு குறிகாட்டி அல்லது ஒரு குறிப்பு தான் சொல்ல முடியும். அதனால் ,இந்த பிறவியில் ஆட்டம் போடுபவர்கள், அந்த ஆட்டத்தின் கணக்கில் வருகின்ற பின் விளைவு தெரியாமல் ஏமாற்றிக் கொண்டிருந்தால், அது அதிகாரியாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் ,நீதிபதியாக இருந்தாலும், சட்ட வல்லுனர்களாக இருந்தாலும், பத்திரிக்கையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், பத்திரிகையை நடத்துபவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், இங்கே கணக்கில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது .