எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாத திருமாவளவன் மக்களை முட்டாளாக்குவதை விட ,தேர்தல் ஆணையத்திடம் உங்களுக்குத் தெரிந்ததை ஏன் நிரூபிக்க கூடாது ?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லும் திருமாவளவன் அதை எங்கு கேட்க வேண்டும் ?தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும். இவர் ஒரு எம் பி இவருக்கு தெரியாதா? தேர்தல் ஆணையம் தான் இந்த ஓட்டு எந்திரத்திற்கு முக்கிய பொறுப்பு. மோடியா? ஓட்டு இயந்திரத்தை தயாரிக்கிறார். இல்லை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? சரி அப்படியே மோடி சொன்னாலும் ,தேர்தல் ஆணைய உயர்மட்ட அதிகாரிகள் அதை செய்வார்களா?

மேலும், அதை தேர்தல் ஆணையத்திடமே கேட்டு, அங்கே என்ன சந்தேகம்? என்பதை அவர்களே திருமாவளூனுக்கு போக்குவார்களே, மேலும் அந்த சந்தேகத்தை மோடி தீர்த்து வைக்க முடியாது. அப்படி இருந்தால் ,உங்களுக்கு யாரோ சொன்னார்கள் ?என்று தெரிவிக்கிறீர்களோ, அவர்களையும் கூட்டிச்சென்று ,தேர்தல் ஆணையர்ராஜீவ் குமாரிடம் இதற்கான விளக்கம் கேட்கலாமே, ஏன் இப்படி மக்களை முட்டாளாக்கும் அரசியல் பேச்சு, பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ?உங்களுடைய சந்தேகத்தை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணையர் நிச்சயம் தீர்த்து வைப்பார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 அப்படி யாராவது இந்த எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காட்ட முடியுமா? என்பதை நீங்கள் டீம்மோடு கூட சென்று அதை ஆய்வு செய்து அல்லது உங்க கட்சிக்காரர்களை கூட்டிச் சென்று ஆய்வு செய்து பார்த்தால், பொதுமக்களுக்கும் இந்த உண்மை தெரியவரும் அல்லவா? நீ சொல்லக்கூடிய பொய்யை போடும் பத்திரிகைகள், இணையதளங்கள் இருக்கிறது என்று நீ பேசியது உண்மையா? பொய்யா? என்பது தெரியாமலே , மக்களுக்கு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கும் அதைப் பற்றிய உண்மை தெரியாது.

 ஒருவேளை உனக்கு உண்மை தெரிந்திருந்தால், அந்த உண்மையை மக்களிடம் ஏன் எடுத்துச் சொல்லக் கூடாது ?அரசியல் பேசும் பேச்சு, எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின்கள் அல்ல .நீ மிகப் பெரிய புத்திசாலியும் அல்ல, அறிவாளியும் அல்ல, அதனால், நீ சொல்வதை எப்படி நம்புவது? மக்களுக்கு புரியும் வகையில், அந்த மிஷின்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையரை வைத்து ,உனக்குத் தெரிந்த அந்த விஷயத்தை அந்த மிஷினில் செய்து காட்டலாமே ,அப்போதாவது உண்மை தெரியாதா?

 மேலும் ,இப்போது .பல இடங்களில் தேர்தல் ஆணையம் இந்த எலக்ட்ரானிக் மெஷின்களை வைத்து டெமோ செய்து கொண்டிருக்கிறது .அங்கேயாவது சென்று அதை செய்து காட்டி இருக்கலாமே ,ஏன் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சந்தேகமே தேவையில்லை .உண்மை இருந்தால் நிறுபியுங்கள் தவறில்லை.

திருமாவளவன் அடிக்கடி டெல்லி செல்பவர் தானே அங்கேயே தேர்தல் ஆணையர் ராஜ்குமார் இடம் இந்தத் தொழில்நுட்பத்தை பற்றி ஏன் விளக்கக் காட்டக்கூடாது? திருமாவளவனுக்கு தெரிந்தது ,இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு தெரியவில்லையா?

இதில் தப்பு என்று தெரிந்தால் ஏன் அதை நிரூபிக்க கூடாது ?வாயில் பேசி அரசியல் செய்வதை தவிர்த்து ,இந்த தொழில்நுட்பத்தை பற்றி விளக்கி காட்டினாள், மக்களும் தெரிந்து கொள்வார்களே என்பதுதான்

இந்திய மக்கள் கேள்வி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *