ஒடிசாவில் ஏற்பட்டுள்ள கோரமண்டல் விரைவு ரயில் விபத்து மிகவும் கோரமான சம்பவம் .இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உச்சகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான என்னென்ன உதவிகள்?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி கை, கால்களை இழந்தவர்களுக்கு நிதி உதவி போன்ற பலவகை நிவாரணங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.
இருப்பினும் இந்த சம்பவம் எலக்ட்ரானிக் பிரச்சனையால் ஏற்பட்ட சம்பவம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நடவடிக்கை பற்றி எந்த பிரச்சனை இல்லை என்றாலும் இதை எதிர் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவது கேவலமான அரசியல்.
மேலும் இது போன்ற ஒரு சம்பவம் தொடருமானால் மக்களுக்கு ரயில் பயணம் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதனால் இனி ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை மற்றும் ஆய்வு மேற்கொண்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது தான் மிகவும் சரியானது. தவிர,
இனி ஒவ்வொரு வாரமும் எலக்ட்ரானிக் கருவிகளை, அந்தந்த பகுதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது, ரயில்வே நிர்வாகத்தில் மிகவும் அவசியம் என்பதை பொதுமக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை வலியுறுத்துகிறது.