திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் சவுடு மண் எடுக்க 5000 லோடுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் கொடுக்கப்பட்ட 15 நாட்களிலே அந்த ஏரி மண் அளவில் சுமார் 7 அடி ஆழம் அளவிற்கு, ஏரியில் முக்கால் பாகம் மண் எடுக்கப்பட்டு உள்ளது,. ஒரு நாளைக்கு சுமார் 1000 லோடு மண் எடுக்கப்பட்டு வருகிறது .
தற்போது இந்த ஏரியில் சுமார் ஒரு லட்சம் லோடுக்கு மேல் இந்த மண் எடுக்கப்பட்டுள்ளது .இதற்கு உத்தரவு வழங்கிய மாவட்ட ஆட்சியர்கள் முதல் கனிமவளத்துறை அதிகாரிகள் ,நீர்வளத்துறை பொறியாளர் வரைக்கும் கனிம வளக் கொள்ளை நடத்த உடந்தையாக இருந்து வருகிறார்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
மேலும், இந்த கனிம வள கொள்ளை குறித்து பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். தவிர, இதுகுறித்து ஒரு சில தினங்களில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இப்போதாவது கனிம வள கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், உடனடியாக நிறுத்தி அந்த ஏரியிலிருந்து எவ்வளவு மண் எடுக்கப்பட்டு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்து நிறுத்த வேண்டும். மேலும், பத்திரிகை செய்திகள் ஊழலுக்கு துணை போகின்ற அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இது பற்றி நீதிமன்றம் தான் இதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இந்த செய்தி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கும், தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அனுப்பி வைக்க உள்ளோம். எனவே, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இந்த கனிம வள கொள்ளையை நேரில் ஆய்வு செய்து, இதுவரை எத்தனை லோடு ஒட்டி இருக்கிறார்கள்? எங்கே அளவு கொடுக்கப்பட்டுள்ளது? எத்தனை அடி ஆழம் ?எத்தனை மீட்டர் அகலம்?
எத்தனை மீட்டர் நீளம் ? எங்கே அளவீடு செய்யப்பட்டது? அந்த பவுண்டரிக்குள் இந்த மண் எடுக்கிறார்களா? மேலும், இது பற்றி சேட்டிலைட் கொண்டு எடுக்கப்பட்ட மண்ணை அளவீடு செய்ய, அமலாக்கத்துறை உள்ளே வந்து ஆய்வு செய்யுமா? மேலும், இப் பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா நடவடிக்கை எடுப்பாரா? – கிராம மக்களின் முக்கிய கோரிக்கை .