நாட்டில் எந்த மாநிலமானாலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னர் கையெழுத்து போட்டால்தான் அது அரசாணையாக வெளிவரும். அப்படி போடப்படாமல் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கிடப்பில் போடுவதாக தமிழக அரசின் குற்றச்சாட்டு.
இதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என். ரவியிடம் கேட்கப்பட்ட கேள்வியில், தமிழக அரசின் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநரின் கையெழுத்து போட வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதில் பல கேள்விகளை கேட்க தோன்றுகிறது. ஆளுநரின் பதில், தமிழரசு என்ன எதிர்பார்ப்புடன் இருக்கிறது? அடுத்தது அவருடைய அதிகாரத்தில் தலையிடுகிறதா ?
மேலும், அவர் பத்து மசோதாக்களில் கையெழுத்திடுவது குறித்து சட்ட நிபுணர்களிடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். இவையெல்லாம் தமிழக அரசுக்கு மரியாதை, மதிப்பு அவர்களாகவே குறைத்துக் கொள்வது போல் தெரிகிறது. மக்கள் அதிகாரத்தில் பலமுறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
ஆளுநர் விஷயம் தெரிந்தவர். ஏற்கனவே உளவுத்துறையில் பணியாற்றியவர். அப்போதாவது தமிழக முதல்வருக்கு அரசியல் ஆலோசனை வழங்குபவர் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து, குட்டுபடும் போது அது தமிழக மக்களுக்கும், ஒரு தலைகுனிவு தான் என்பது பொதுமக்கள் தெரிவிக்கின்ற கருத்து.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஆட்சிக்கு நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள ஆளுநரிடம் மோதல் போக்கை கைவிட்டு ,ஆட்சிக்கு நற்பெயரை தக்க வைத்துக் கொள்வது அவருடைய புத்திசாலித்தனம் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டால் சரி.