காசி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ரவியின் பேச்சு சர்ச்சையானதா?

ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு ரிசன்ட் போஸ்ட்

காசி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாடு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள், இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது? உண்மைதான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

 ஏனென்றால், உண்மையின் மீது, நேர்மையான அரசியல் மீது, நம்பிக்கை உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ,அரசியல் என்பது ஏமாற்று வேலையாகவும், மோசடி வேலையாகவும் இருக்கின்ற போது ,இதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

 தவிர, அவர் சொன்ன மற்றொரு கருத்து, இந்தியா என்பது ஒரே நாடு, அது யாராலும் மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது சரியாக இருக்கும் என்றார். இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? இரண்டும் ஒரே அர்த்தம் தான். அதாவது தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் கருத்து அல்லது பெயர் மாறுபடவில்லை.

இதில் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை .மேலும் தமிழ்நாடு என்றால், ஒரு தனி நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசியல் முட்டாள்களுக்கு வேண்டுமானால், இந்த கருத்து தவறானது என்று தோன்றலாம். அல்லது இந்த தமிழ்நாட்டில் இருக்கின்ற பிரிவினைவாத சக்திகளுக்கு வேண்டுமானால், இந்த வார்த்தை தவறாக இருக்கலாம் .

உண்மை என்னவென்று, இன்னும் நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் புரியும். அதாவது நாம் வேறு மாநிலத்திற்கு சென்று சென்றிருக்கிறோம். அங்கே ஒருவர் கேள்வி கேட்கிறார், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? நான் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறேன், அப்படித்தான் அந்த வார்த்தை வரும். நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்றும் சிலர் சொல்வார்கள் .ஆனால் அதற்கு அர்த்தம் புரிந்து கொள்பவர் இரண்டும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்வார்.

 அதேபோல், தமிழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. மேலும், தமிழ்நாடு என்பது வேறு அல்ல. தமிழகம் என்பதும் வேறல்ல, எல்லாம் ஒன்றே தான். அதனால் அவர் ஒரு கருத்து தான் சொல்லி இருக்கிறார். அந்த கருத்துக்கு எதிர் தரப்பிலிருந்து வருகின்ற கருத்து, இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனி நாடு போல நினைக்கக் கூடாது, பேசக்கூடாது என்பதுதான் இந்த தேசத்தின் ஒற்றுமையாளர்களின் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *