ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram
அரசியலை படித்தவர்கள், படிப்பவர்கள் இதைப்பற்றி ஓரளவாவது புரிந்து இருப்பார்கள் ,அரசியல் என்பது ஒரு கடினமான பாதை .அங்கே நல்லதுக்கு பதிலாக கெடுதல்கள் ,போராட்டங்கள், இழப்புக்கள் தான் அதிகம் இருக்கும் .அதை எல்லாம் மீறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கமாக இருக்க வேண்டும் .இதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் தகுதியானவர்களாக ,ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல் கட்சிகளில் குடிகாரர்களையும், ரவுடிகளையும், அடியாட்களையும், அடாவடிகளையும் கொண்டு ,அரசியலில் சேவை செய்ய முடியுமா? அதற்கு அவர்கள் தகுதியானவர்களா? அதனால்தான் இன்று அரசியல் என்பது சேவை செய்வது போல ,மக்களுக்காக பேசிக் கொண்டு, கொள்ளையடிக்கும் வேலைதான் அரசியலாகிவிட்டது.
அதற்கு துணை போகும் கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக இதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிவிட்டு போவது எல்லாம் படம் பிடித்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .அதனால் மக்களுக்கு என்ன பயன்? அல்லது என்ன நடந்தது ?அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லை .ஓட்டுக்கு ஆயிரமும் ,500 கண்டது தான் மக்கள் .
ஆனால்,இந்த அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் தான் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். இது தவிர, இந்த கார்ப்பரேட் தொலைக்காட்சி, ஊடகங்கள் தான் முன்னேறி இருக்கிறது .இதை வாங்கி படித்து பார்த்து ஏமாந்த மக்கள் தான் இன்று அதிகம் .அதனால் தான் மக்களுடைய வரிப்பணத்தில் ஆண்டுக்கு சுமார் 500 கோடி சலுகை, விளம்பரங்கள் வாங்கிக் கொண்டு, இந்த மக்களை இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும்.
மக்களுக்கான பத்திரிகை எது? என்று தேடிப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்று இரண்டாவது தேருமா? என்பது தெரியவில்லை. அதேபோல் தொலைக்காட்சிகளில் இப்படி தேட வேண்டி இருக்கிறது ?இப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்திரிக்கை என்பது எது உண்மை? எது பொய்? எது நல்லது? எது கெட்டது? இதை சொல்வதற்கு தான் ஊடகங்கள் இருக்க வேண்டும்.அவர்கள் எது சொன்னாலும் நல்லது என்று சொல்வதற்கு பத்திரிக்கை தேவையில்லை. அரசியல் கட்சிகளுக்கு பத்திரிக்கை நடத்திக் கொண்டு, அரசியல்வாதிகளுக்கு பத்திரிக்கை நடத்திக் கொண்டு, ஆட்சியாளர்களின் பொய்களை எல்லாம், ஊழல்களை எல்லாம் மறைத்துக் கொண்டு, அதற்கு மக்களிடம் ஒரு வரவேற்பை காட்டிக்கொண்டு, ஏதோ செய்யாததை செய்து விட்டது போல் பேசிக்கொண்டு, இதை எல்லாம் செய்தியாக்குவது முட்டாள்தனமா? அல்லது திறமையா? என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், திருமாவளவன், ராமதாஸ், சீமான் ,எடப்பாடி பழனிசாமி,வைகோ, அண்ணாமலை, திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்கள், இவர்களெல்லாம் பேசிக் சண்டை போட்டுக் போட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் எல்லாம் அது ஒரு அரசியலா? சமீபத்தில் ஒரு சில தினங்களுக்கு முன் அண்ணாமலையும், எடப்பாடியும் பேசிக் கொண்டது என்று கூட சொல்ல முடியாது, திட்டிக் கொண்டது அதை ஒரு செய்தியாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த கட்சி அண்ணாமலையின் உருவ பொம்மையை சில இடங்களில் எரித்து கூட பார்த்து விட்டார்கள்.
இது எல்லாம் எதற்காக? இது அரசியல் இல்லை. மக்களை ஏமாற்றும் அரசியல். நீ உருவ பொம்மை எரித்தால் என்ன? ஏரிக்காவிட்டால் என்ன? யார் கேட்டது? அதேபோல், அம்பேத்கர் படத்துக்கும், சிலைக்கும் மாலை போட்டு விட்டு, மக்களை ஏமாற்றும் அரசியல் தான் திருமாவளவன், ஜெகன்மூர்த்தி போன்றவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கரின் கொள்கையை கடைபிடித்து, அவரவர் அவர்களுடைய கட்சியினருக்கு, அந்த கொள்கையை கடைபிடிக்க சொல்லி இவர்கள் ஒன்றும் கட்சி நடத்தவில்லை. கொள்கையை பற்றியும், சனாதனத்தை பற்றியும், திருமாவளவனுக்கு பேச தகுதி கிடையாது. ஏனென்றால் அம்பேத்கர் எப்படி வாழ்ந்தார்? என்பதற்கு அது சரித்திரம். எப்படி வாழக்கூடாது என்பதற்கு சரித்திரம் திருமாவளவன்.
ஒருவன் பேசிவிட்டு போவதற்கு சரித்திரம் இல்லை. வாழ்ந்து விட்டு போவதற்கு தான் சரித்திரம். அதனால், தமிழ்நாட்டில் இங்கே பேசுவதற்கெல்லாம் சரித்திரம் என்று இந்த கார்ப்பரேட் தொலைக்காட்சி பத்திரிகை வகையறாக்கள் எழுதிக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் இன்றைய திமுக ,அதிமுக முதல் தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் காட்சிகள் அத்தனையும் மக்களிடம் நல்லவர்கள் வேஷத்தை காட்டிக் கொண்டிருக்க, அந்த நல்லவர்கள் வேஷம் இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க, இதைப் படித்து இதுதான் உண்மை என்று மக்கள் ஏமாந்து கொண்டிருக்க, இதுதான் உண்மையான, நேர்மையான அரசியல் என்று அதையும் பேசிக் கொண்டிருக்க, உழைப்பவன் முட்டாளாகவும், ஊரை ஏமாற்றுபவன் திறமைசாலியாகவும், அரசியல் கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்று அரசியலை படிப்பவர்கள், அரசியலைப் புரிந்தவர்கள், பேசுகிறார்கள் .
அரசியலில் பேசியவர்கள் பேச்சாளர்களாக இருந்து விட்டு போக வேண்டியது தான். இதுவரையில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை பட்டியல் போட்டு சொல்லுங்கள் பார்ப்போம்? மேலும், ஜாதிகளையும், மதங்களையும் அரசியலில் பேசிவிட்டு போவதில் எந்த பயனும் இல்லை. அதனால் எந்த மதமும், எந்த ஜாதியும் பயனடையவில்லை. பயனடைந்தவர்கள் ஜாதி கட்சியினர் தான் பயன் அடைந்து இருக்கிறார்கள். அந்த ஜாதி மக்கள் பயனடையவில்லை. தொடர்ந்து இந்த குரல் கொடுக்கும் வேலை .அதை விளம்பரப்படுத்தும் வேலை. இது எல்லாம் ஏமாற்று வேலை. ரோட்ல போறவன் கூட பேச சொன்னா பேசுவான். என்ன அவனுக்கு மிகப்பெரிய யோக்கியன் மாதிரி பேச தெரியாது. இந்த அரசியல் ஏமாற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள் .
மேலும், இந்த மாற்றத்தை தமிழக வெற்றிக்கழகம் கொண்டு வருமா? நான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .அதில் விஜய்யிடம் ஒரு வித்தியாசம் தெரிகிறது. அது என்ன என்றால்? அதிகம் பேசியவன் செயல்பட்டது கிடையாது .செயல்படுபவன் அதிகம் பேசுவது கிடையாது .அந்த வகையில் தமிழ்நாட்டில் விஜயின் அரசியல் என்ரி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நினைக்கிறேன். அந்த மாற்றத்தை கொண்டுவர, அதற்கு அவருடைய கட்சியினர் தகுதியாக இருப்பார்களா? என்பது தான் இங்கே மிகப் பெரிய கேள்வி ? ஏனென்றால், அரசியலில் திருடர்களையும், கொள்ளையடிப்பவர்களையும், அடியாட்களையும் வைத்துக் கொண்டு சமூக சேவை செய்ய முடியாது. இங்கே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த கட்சி தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்றால் தனக்கு பேரும், பதவியும், புகழும் கிடைக்க வேண்டும். நூறு நூறு தலைமுறைக்கு சொத்துக்களை, பல்லாயிரம் கோடிகளை சம்பாதிக்க வேண்டும். இதுதான் அவர்கள் நோக்கம்.வாழ்க்கை என்பது ஆண்டவன் கொடுத்தது. எல்லோருக்கும் குறுகிய பயணம் .நோய் நொடி இல்லாமல், சந்தோஷமாக நல்லதை நினைத்து, நல்லதை செய்து வாழ்பவனே மிகப்பெரிய சொத்துக்கு சொந்தக்காரன் .இதில் அவர்களுடைய நோக்கத்திற்கு தகுந்தார் போல், அந்தந்த கட்சிகளில் அவரவர் தகுதிக்கு தகுந்தார் போல், சொத்துக்களை எப்படி சம்பாதிப்பது? கோடிகளை எப்படி சம்பாதிப்பது? மக்களிடம் எப்படி நல்லவர்களாக வேஷம் காட்டுவது? எப்படி பேசுவது? இதுதான் இந்த அரசியல்.
இதை விளம்பரப்படுத்தி ,மக்களை முட்டாளாக்கி, பணம் சம்பாதிப்பது, அரசாங்கத்தின் சலுகை, விளம்பரங்கள் பெறுவது, இது எல்லாம் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் திறமையா? இவர்கள் எப்படி ஏமாற்றுவது திறமை என்று அரசியல் கட்சியினர் நினைக்கிறார்களோ, அதே போல் தான் பொய்யை சொன்னாலும், அது திறமை என்று இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கிறதா?
சமீபத்தில் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் அவர்களை சந்தித்தேன். என்ன என்று கேட்டார்? ஐயா எங்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றேன். அது பாலிசி என்றார். அதை தான் மாற்ற வேண்டும் என்றேன். சர்குலேஷன் என்று சொல்லி 50 ஆண்டு காலமாக ,இந்த பத்திரிக்கை துறையில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அந்த சர்குலேஷனும் இல்லாமல், பொய்யான கணக்குகளை காட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால், எங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகைகளுக்கு கூட இந்த சலுகைகள், விளம்பரங்கள் கொடுக்க மறுக்கிறார்கள். தகுதியான பத்திரிகைகள் எது? எது? என்பதை பட்டியல் போட்டு, அதற்கு மக்களின் வரிப்பணத்தில் அதன் வளர்ச்சிக்கு, சமூகத்திற்கும் கொடுக்க வேண்டிய ஒரு நிதியை தேவையற்ற பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு கொடுத்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை என்பது சமூகத்திற்கானது. அதில் ஆட்சியாளர்களின் பொய்களையும், அரசியல் கட்சியினரின் பொய்களையும் சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றுவது பத்திரிகை அல்ல. அதற்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் கொடுத்து வீண் .இதனால் ,எந்த மக்களுக்கும் பயனில்லை. உண்மை எது? என்று தெரியாமல் மக்களுக்கு தான் குழப்பம். மற்றொரு பக்கம் அரசியல் ஏமாற்றம். இதை தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள். மேலும்,
அரசியலில் பேசி விட்டுப் போவது ,பத்திரிக்கையில் அதை எழுதி விட்டுப் போவது, எப்படி அரசியலாகும்? என்பதை நீதிமன்றம் தான் இதை சிந்திக்க வேண்டும். ஏனென்றால், நீதித்துறை இதையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது ?என்பதுதான் எங்களை போன்றவருக்கு புரியவில்லை. அதைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, இப் பிரச்சனையை தாமாக முன்வந்து வழக்காக இதை எடுக்க வேண்டும் என்று பலமுறை எழுதியிருக்கிறேன். உச்சநீதிமன்றம் இல்லை என்றாலும், உயர் நீதிமன்றமாவது இதை எடுக்க வேண்டும் .
ஒரு பத்திரிக்கையில் 90 செய்தியில் ஆட்சியாளர்களுக்காகவும் ,அரசியல் கட்சிகளுக்காகவும் இருக்குமே தவிர, ஒரு பத்து சதவீதம் அல்லது இரண்டு மூன்று சதவீதம் அதற்குள் தான் இந்த மக்களுக்கான செய்திகள் இருக்கும். இதையெல்லாம் மாற்ற பத்திரிகையின் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு, 50 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் வேறு, இன்று வாழுகின்ற மக்கள் வேறு, அந்த சட்டம் அந்த மக்களுக்கு! அது இக்காலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பொருந்தாது.
அதனால், காலத்திற்கு ஏற்ப ,மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் குற்றங்கள், ஊழல்கள், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள், இதற்கெல்லாம் ஒரு தீர்வு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று நீதித்துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.