காவல்துறையில் பொய் வழக்கு என்பது சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களிடம் தான் இந்த பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது .அரசியல் செல்வாக்கு ,அதிகார பலம் ,பணக்காரர்கள் சட்டத்தை வளைக்கும் வேலையை காவல் துறையின் உதவியோடு செய்து வருகிற காவல்துறையின் மறைமுக குற்றங்கள்.
இவர்கள் யார் ஒருவர் மீதும், புகார் கொடுத்தால் புகாரின் பேரில் பணத்திற்காகவோ அல்லது ஆட்சியாளர்கள் ,அதிகார வர்க்கம் சொல்லுகின்ற படி காவல்துறையில், தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இதனால், அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தான். இவர்கள் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டும் .வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களுடைய வருமானம் பாதிக்கப்படும். இதனால் எத்தனையோ பல குடும்பங்கள் இந்த பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
இவர்களை எதிர்த்து போராட ஏழை எளிய நடுத்தர மக்களிடம் பண பலமோ அல்லது அதிகாரம் பலமோ இருக்காது. அதனால் அவர்கள் மீது குற்ற வழக்குகள் போடப்படுவதும், குற்றவாளியாக மாற்றப்படுவதும் காவல்துறையில் செய்கின்ற ஒரு அதிகார துஷ்பிரயோகம். இது பற்றி பாதிக்கப்பட்ட மதுரை அண்ணா நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, அவர் மனுவில் தெரிவித்திருப்பது ,லாட்டரி விற்பனை குறித்து என் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 7 ல் மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் என் அலுவலகத்திற்கு வந்து நாலு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு, என்னையும் அழைத்துச் சென்றனர். மேலும் 2019 ல் போலீசாருக்கு எதிராக நான் அளித்த புகாரை திரும்ப பெறுமாறு என்னை கட்டாயப்படுத்தினர். அதற்கு நான் மறுத்ததால் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக என் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தை நாடி யுள்ளார். நீதிமன்றம் காவல்துறையில் இவர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து சிறப்பு விசாரணை செய்ய உத்தரவிட்டது. அந்த விசாரணையில் இவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு தான் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
இனியாவது பொய் வழக்கு போடும் வழக்கத்தை காவல் துறையில் பணியாற்றுபவர்கள் மாற்றிக் கொள்வார்களா?- மேலும், சமூக நலனுக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு எல்லாம்
இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக இருக்குமா? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
காவல்துறையில் பொய் வழக்குகள் போடும் காவல் ஆய்வாளர் , உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.