தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு .
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இதை எப்படி தமிழக அரசு சமாளிக்க போகிறது ? மேலும் ,உயர் நீதிமன்றத்திலும் வாதாடி தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தருவோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அது உடனடியாக நடக்க வாய்ப்பு உள்ளதா ?
மேலும், காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .மேலும், இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? அல்லது விசாரிக்கப்படுமா? இதை நம்பி தமிழக விவசாயிகள் குருவை சாகுபடி காப்பாற்ற முடியுமா? தவிர, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ,இதற்கு இடைக்கால தீர்ப்பை பெற்று தமிழக விவசாயிகளை காப்பாற்றுவது தான் தற்போதைய அரசியல் ராஜதந்திரம் .
மேலும், தொடர்ந்து இப்படி கர்நாடகா ,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுடன் தண்ணீருக்கு போராடிக் கொண்டிருக்க முடியாது. தமிழக விவசாயிகளுக்கு இதற்கான தீர்வு தான் என்ன? என்பதை இதுவரையில் அதிமுக ,திமுக இரண்டு கட்சிகளின் ஆட்சிகளில் ஏன்? இப்ப பிரச்சனைக்கு தீர்வு காண முடியாததா? முடியும். காவேரி நதி நீருக்காக கர்நாடகாவுடன் அரசியல் கட்சிகள், அரசியல் நடத்துவதை கைவிட்டு, தமிழக ஏரிகளின் கறைகளை பலப்படுத்தி ,அணைகள் கட்டும் திட்டத்தை கொண்டு வருமா?
ஆந்திராவில் ஏரிகளை போய் பாருங்கள். எந்த அளவிற்கு ஏரிகள் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு ,பார்ப்பதற்கு ஒரு நீர்த்தேக்கங்கள் போல ஏரிகள் காட்சியளிக்கிறது. அப்படி ஏரிகளை ஆந்திராவில் பாதுகாப்பதால் தான் இன்று ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லை.
ஆனால், தமிழ்நாட்டில் ஏரிகளை பிளாட் விற்பனையாளர்களுக்கு மறைமுகமாக வருவாய் துறை விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இதை இல்லை என்று மறுக்க முடியாது. காரணம் 1953 இல் உள்ள ஏரிகளின் எஃப் எம் பி, வரைபடம் இதையெல்லாம் தற்போது உள்ள எஃப் எம் பி, வரைபடம் இதை வைத்துப் பார்த்தால், உண்மை எந்தெந்த ஏரிகளில் இந்த விற்பனைகள் தொடர்ந்து உள்ளது ? என்பதை நீதிமன்றத்திற்கு தெரிய வரும்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்வளத் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது .இது தவிர ,ஏரிகளுக்கு தண்ணீர் வரக்கூடிய வரவு கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்றாமல் எப்படி ஏரிகளுக்கு தண்ணீர் வரும்? இது தவிர, திமுக அரசு ,அதிமுக அரசு இருவரும் மாறி ,மாறி ஏரி மண்ணை விற்று பல லட்சம் கோடிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆற்று மணலை விற்று பல லட்சம் கோடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகத்தில் இவர்களால் எப்படி விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியும்?
மேலும், இவர்களால் ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, பல இடங்களில் அணைகளை கட்டி ,சிறு நீர் தேக்கங்களை அமைத்தால் ,மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும் .விவசாயத்திற்கு, குடிநீருக்கு தண்ணீர் தேவைக்காக தமிழ்நாடு எந்த மாநிலத்திலும், சென்று கையேந்த வேண்டிய அவசியம் இல்லை .
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இப்ப பிரச்சனையை அரசியல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இப்படி அரசியல் செய்வதால் ,விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், சிந்திப்பார்களா ?
மக்கள் அதிகாரம் – ஆசிரியர்