நாட்டில் மத மோதல்கள், பிரிவினைவாதம், ஜாதி மோதல்கள், இதையெல்லாம் அரசியலுக்காக தூண்டப்படும் சக்திகளாக இன்று நாட்டில் இருந்து வருகிறது. இவையெல்லாம் அரசியல் பின்னணியிலே நடைபெறுகிறது. தவிர, இதற்கு முக்கிய காரணம் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கும் முட்டாள்கள், மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . அதுதான் கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர் பந்த் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும்,
ஒரு பக்கம் தமிழ்நாட்டில், மற்றொரு பக்கம் கர்நாடகாவில், இவையெல்லாம் அந்தந்த மாநிலத்தில் நாங்கள் தான் முதலாளி, எங்களை மீறி மற்ற மாநிலங்களுக்கு எதுவும் போகக்கூடாது. அப்படி என்றால் இந்தியா இருக்காது. ஒவ்வொரு மாநிலமும், தனி நாடாகிவிடும். இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் சட்டம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு, மாநிலம் இதையெல்லாம் சரி செய்து கொள்ள முடியவில்லை என்றால், எதற்கு இந்தியா ?என்ற நாடு ஜனநாயகம் என்பது எதற்கு ?கூட்டாட்சி தத்துவம் எதற்கு? உச்சநீதிமன்றம் எதற்கு ? எதுவுமே தேவையில்லை.
அதனால், இந்த பிரச்சனை தூண்டும் பிரிவினைவாத சக்திகளாக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபங்களுக்காக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தெரியாத முட்டாள்கள் இன்று ரவுடிகளாக அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலம் வருவது கோடிகளை கொள்ளடிக்க ,அதற்கு அரசியல் தெரியாத கூட்டம், எப்படியும் பேசி எப்படி வாழும் கூட்டம், பணம் வாங்கிக் கொண்டு வாக்குகளை போட்டுக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரச்சனைகள் நாட்டில் தொடர்கிறது.
தேர்தல் ஆணையம் அரசியல் தெரியாத மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கூட ஏற்படுத்த தகுதி இல்லாத தேர்தல் ஆணையமாக இருக்கிறது. மேலும், பிரிவினைவாத சக்திகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் .இதையெல்லாம் சரி செய்யாமல் போனால், இப்ப பிரச்சனைகள் தொடரும் என்பது உறுதி. மேலும்,
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் ,திமுக கூட்டணி வைத்துள்ளது .மற்றொரு பக்கம், தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீரை தர மறுக்கிறது. இதில் எல்லாம் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தண்ணீர் என்பது மக்களுக்கு அவசியமான ஒன்று .இது பொதுவானதாக இந்தியா முழுவதும் மாற்றப்பட வேண்டும். ஒரு மாநிலத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கக் கூடாது.
அப்படி பார்த்தால் இங்கு இருக்கக்கூடிய விலை பொருட்கள் அங்கே செல்கிறது. அங்கு இருக்கக்கூடிய விளைபொருட்கள் இங்கு வருகிறது. இவை எல்லாம் மக்களின் அத்தியாவசிய தேவைகள். இதில் அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்றனர்.
அதனால், இப்படிப்பட்ட தேவையற்ற பந்த், போராட்டம் இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை .