கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார். 

இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை பொறியியாளர்கள் கவனத்திற்கும் புகாராக தெரிவித்துள்ளனர்.

 பேட்டை மணி .

ஆனால், அது பற்றி அரசு அதிகாரிகள் கவலைப்படாமல், அவர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு இந்த சவுடு மண் மாபியாக்களுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிராமத்தின் நலன், அந்த கிராம மக்களை தவிர, வேறு யாரும் அக்கறை காட்ட முடியாது. ஏனென்றால், அங்கு வசிப்பவர்கள் ஏரி எப்படி இருக்க வேண்டும்? குளம் எப்படி இருக்க வேண்டும்? அது ,அவர்களுடைய வாழ்வாதாரத்தை நோக்கி அது இருப்பதால், அதைப் பற்றி சிந்திக்கும் மக்கள், தெளிவாக இங்கு மண் எடுக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள். 

ஆனால், பணத்திற்காக அதிகாரிகள் விலை போவதால், இது போன்ற உத்தரவுகள் கொடுத்துவிட்டு, அது பிரச்சினையாக வெடிக்கும் போது, போலியான உத்தரவு என்றும் சொல்லிவிடுகிறார்கள். எப்படி ஒரு சில தாசில்தார்கள் பணத்திற்காக பட்டாவை கொடுத்துவிட்டு, அது சட்டத்திற்கு புறம்பானவையாக இருக்கும்போது மாட்டிக்கொண்டால், அவர்களே சொல்லிவிடுவார்கள்.

வட்டாட்சியர் வெங்கடேசன் .

இது போலிப் பட்டா என் கையெழுத்து கிடையாது என்று இப்படி பல நிகழ்ச்சிகள் வருவாய்த் துறையில் நடப்பது சகஜமாக இருந்து வருகிறது. அதனால், இந்த கிராமத்தின் உண்மை நிலவரம் என்ன? என்று மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரடியாக சென்று, கிராம மக்களிடம் ஆய்வு செய்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கஸ்தம்பாடி கிராம மக்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *