திமுக வின் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாவற்றையும் வாயிலே சமாளிக்கும் முரட்டு தைரியம் கொண்டவர்கள். ஆனால் இப்ப பிரச்சனைகள் வாய் சொல் வீரர்களுக்கு கடும் சவால்கள் தான். தவிர, எத்தனை நாளைக்கு இவர்களுடைய பேச்சை நம்பி தமிழக மக்கள் ஏமாறுவார்கள்?
ஒரு பக்கம் ஆட்சி நிர்வாகத்திற்கு நெருக்கடிகள், இன்னொரு பக்கம் அமைச்சர்களின் பேச்சு, தமிழக மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் விட மிகப்பெரிய தலைவலி, சபரீசனின் ஜி ஸ்கொயர் விவகாரம், மகன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் விவகாரம், முதல்வரின் 200 கோடி ஊழல் விவகாரம்,இப்படி ஒட்டுமொத்த குடும்பமே, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறது. இதிலிருந்து எப்படி முதல்வர் சமாளிக்கப் போகிறார்?தவிர,
மந்திரிகள் ஆளாளுக்கு அவரவர் துறைகளில் ஊழல். யாரையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும்,இவர்கள் குடும்பம் மட்டும் ஓட்டு மொத்தமாக சாப்பிடலாமா? என்று கட்சியினரும், மந்திரிகளும் புலம்பல்.
இந்த நிலையில் ஆட்சி நிர்வாகத்தை எப்படி தமிழக முதல்வர் சமாளிக்க போகிறார்? தவிர, மக்கள் பிரச்சனைகள்? பொது சொத்து கொள்ளையடிப்பது எப்படி தடுக்கப் போகிறார்கள்? இதைப் பற்றி எல்லாம் எந்த மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகள் முறைகேடுகள், பஞ்சாயத்து தலைவர்கள் முறைகேடுகள் ,உள்ளாட்சி நிர்வாகிகளின் முறைகேடுகள் ,ஊழல்கள் எதுவும் கண்டு கொள்ளாமல் ,அவர்களுக்கு வர வேண்டிய கமிஷன் மட்டும் பார்த்துக் கொண்டு காலம் தள்ளினால், டோட்டலாக திமுகவின் ஆட்சி முடிந்து விட்டது.மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள் .
மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கிஸ்க்கு கவர்னரிடம் இருந்து வருகின்ற புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பியும் கூட கிடப்பில் போட்டு வருகிறார். அதே போல், ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வருகின்ற புகார்களை கிடப்பில் போட்டு வருகிறார். ஆக கூடி ஊழலுக்கு ஒத்துவதும் மாவட்ட ஆட்சியராக இருப்பதால், இவரை மாவட்ட ஆட்சியராக நியமித்ததை விட அமைச்சர்களுக்கு பிஏ வாக போட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். மேலும், இதுபோல் பல மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் மறைமுகமாக கைகோர்த்து இருக்கிறார்கள். இது திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவப் பெயரை ஏற்படுத்தப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும் கவுன்சிலர்கள், சேர்மேன்கள் இவர்கள் ஒரு பக்கம், அதிகாரிகளை டார்ச்சர் செய்து வசூல் பண்ணி மொத்தமாக கொடுத்து விடுங்கள் என்கிறார்களாம். இது தவிர, தமிழ்நாட்டில் ஊழல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு போவதால் ,அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்தற்கான அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.மேலும்,
பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் திமுக ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. நிலைமை எப்படி இருக்க, சமீபத்தில் டெல்லிக்கு சென்ற எடப்பாடி டீம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணி பற்றிய டீல் 90% முடித்துவிட்டது. இதனால், அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் உறுதியாக விட்ட நிலையில், இரு கட்சிகளின் எதிர்ப்புகளை எதிர்த்து எப்படி அரசியல் செய்யப் போகிறது? ஆட்சி நிர்வாகத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள போகிறது? கடும் நெருக்கடிக்குள் திமுக .
இதற்கு முட்டுக் கொடுக்க திமுக கூட்டணி கட்சிகளின் அறிக்கைகள் போராட்டங்கள் எடுபடுமா? மேலும், திருமாவளவன் ஊழல் பட்டியலும் எடுத்து வைத்துள்ளார்கள். இது தவிர, திமுகவிற்கு முட்டு கொடுத்து ஜால்ரா போடும் அமைப்புகள், கிறிஸ்தவ, முஸ்லிம் ஹவாலா அமைப்புகள் ,எல்லாவற்றையும் தோண்டி துருவி லிஸ்ட் எடுத்து விட்டார்கள்.
அதனால் திமுக இந்த பக்கமும் திரும்ப முடியாது .அந்த பக்கமும் திரும்ப முடியாது. இவ்வளவு நெருக்கடிகுள் திமுக ஆட்சி நிர்வாகத்தை, கட்சி நிர்வாகத்தை, மக்கள் பிரச்சனைகளை, தேர்தல் வாக்குறுதிகளை ,திட்டங்களை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்? வாய்ச்சொல் வீரர்கள் வாயிலேயே எத்தனை நாளைக்கு கதையை ஓட்டப் போகிறார்கள்? என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி ?மேலும்,
ஆட்சி என்பது மக்களின் எதிர்பார்ப்பை விட ,இவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டதா? இனி திமுகவிற்கு சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது என்பது இப் பிரச்சனைகள் மூலம் தெளிவாக தெரிய உண்மை, தமிழக மக்களுக்கு புரிந்தால் சரி.