ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பதுதான் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர்களும், பொதுமக்களும் கேட்கும்
கேள்வி ….. ?
தவிர, இந்த கம்பெனிகளில் எதனால் தொழிலாளர்கள் இறந்தார்கள்? என்ற விவரம் ஆவது இணை இயக்குனர் சரவணனுக்கு தெரியுமா? அது பற்றி இவரிடம் கேட்டதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டால், கோர்ட்டில் கம்பெனி சார்பாக நஷ்ட ஈடு ஐந்து லட்சம் கட்டி விடுகிறார்கள் என்கிறார். நான் அப்பவே கேட்டேன். ஒரு உயிரின் விலை 5 லட்சம், 10 லட்சமா? அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தொழிலாளர்களுக்கு நன்மை செய்ய வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர் இப்படி சொல்லலாமா?
மேலும், இறந்தவனின் குடும்பம் இந்த ஐந்து லட்சம் வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு அவர்கள் வாழ்க்கை நடத்த முடியும்? ஒருவேளை இறந்தவனுக்கு இரண்டு பிள்ளைகள் சிறுவயதாக இருந்தால், கம்பெனி நிர்வாகம் அவர்களுடைய படிப்பு செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும். இதை நீதிமன்றமும் செய்ய வேண்டும். அதிகாரிகளும் இதை செய்ய வேண்டும். வெறும் ஐந்து லட்சம் ஒரு குடும்பத்தை வாழ வைக்காது.
மேலும், இவர் பொறுப்பேற்றதிலிருந்து இந்த சிப்காட்டில் இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள். இதைப் பற்றி மேலும் அவரிடம் கேட்டதற்கு எல்லா கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து மீட்டிங் போடலாம் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். இந்த வேலையை சிப்காட் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு செய்திருக்கிறார் என்ற தகவலும் அவரே தெரிவித்தார். நான் சொன்னேன் நீங்கள் அவர்களை அழைத்து மீட்டிங் போட்டு எந்த பயனும் இல்லை. எந்தெந்த கம்பெனியில் என்னென்ன பாதுகாப்பு தொழிலாளர்களுக்காக செய்திருக்கிறார்கள்? என்பதை முறையாக ஆய்வு செய்தீர்களா? நான் பார்க்கிறேன் சார். இன்னும் பத்து பேர் உயிர் போன பிறகு பாருங்கள்.
இதைப் பற்றி இவர் மீது தொழிலக பாதுகாப்பு இயக்குனர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிப்காட் தொழிலாளர்களும், கும்மிடிப்பூண்டி பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் பொறுப் பேற்ற பிறகு கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் எவ்வளவு பேர் எந்தெந்த கம்பெனியில் இறந்தார்கள்? என்ற விபரம் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சூரியதேவ் ஸ்டீல் கம்பெனியில் 5 பேர், ஜெயின் ரிசோர்சஸ் சைக்கிளின் கம்பெனியில் ஒன்று, கனிஷ்கா ஸ்டீல் கம்பெனியில் ஒன்று, காமாட்சி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் – ல் ஒன்று, இப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் எப்படி இறந்துள்ளார்கள்? – கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர்கள் கேள்வி ?