இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே நடந்து வரும் போர் நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி இருக்கலாம் என உளவுத்துறை தரப்பில் வெளிவரும் தகவல். இருப்பினும், இது முழுமையான என்ஐஏ விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும் என்கின்றனர் காவல்துறை .
மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீடித்து வரும் போரின் வெளிப்பாடு தான், இந்த தீவிரவாத அமைப்பின் செயல் . இதனால், அப்பாவி மக்கள் கிருத்துவ ஆலயத்தில் வழிபாடு நடத்தும்போது வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டிருப்பது ,இந்திய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு நேற்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாத குழுவின் தலைவர் காலித் மஷால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜாமாத் இ இஸ்லாமின் இளைஞர் பிரிவான சாலிடரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
.தவிர, இந்த சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாடு கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நடத்தியுள்ளனர் . அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது பொது மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த கேரள குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்புகள் மற்றும் என்ஐஏ விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால், இனி நாடெங்கிலும் காவல்துறை உஷார் படுத்தப்பட வேண்டும் .மேலும், சிறையில் உள்ள தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை செய்யக்கூடாது. மேலும், இது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எந்த அமைப்பாக இருந்தாலும் ,அதை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கடும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருத்துவ அமைப்புகள், சில முஸ்லிம் அமைப்புகள், இந்து முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பிரணாய் விஜயனுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இது நெஞ்சை பதற வைக்கும் நிகழ்ச்சியாக தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.