திமுக அரசு சட்டமன்றத்தில் மரபு மீறியதைப் பற்றி பேசாமல் ,சட்டமன்ற பிரச்சனையுடன் ,ஆளுநர் பேசிய அவருடைய சொந்த கருத்து ஆன, தமிழ்நாடு, ,தமிழகம் இதையும் திரிக்கும் நமது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதம், ஆளுநர் மரபை மீறி விட்டார். ஆனால், திமுக எந்த மரபையும் மீறவில்லை.
மேலும், அம்பேத்கர், அண்ணா இவர்களுடைய புகழை சட்டமன்றத்தில் வாசிக்காமல் விட்டுவிட்டார். அப்படி வாசிப்பதால் பொதுமக்களுக்கு என்ன பயன்? இவர்கள் கொடுத்ததை அப்படியே வாசிக்க வேண்டும் என்ற மரபு சட்டமன்றத்தில் இருந்தாலும், உண்மைக்கு மாறான பிரச்சனைகளை மட்டும் சட்டமன்றத்தில் பேசுவது மரபா? மேலும்,
சட்டமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல், அந்தப் புகழை எல்லாம் மக்களிடம் எங்கு வேண்டுமானாலும் ,எப்பொழுது வேண்டுமானாலும் பரப்புங்கள் தவறில்லை.
ஆனால் பொது மக்களின் பிரச்சனையை விடுத்து,மற்ற பிரச்சனைகளுக்கு கொண்டு போக தான் சட்டமன்றமா? சட்டமன்றம் மக்களுக்கான மன்றமாக மட்டும் இருந்தால், இந்த விவாதம் எல்லாம் தேவையா? அதுதான் மக்களுக்கு முதுகெலும்பா? அல்லது முதல்வருக்கு முதுகெலும்பா?
இது என்ன மரபு?பத்திரிகையாளர் லட்சுமணனின் கருத்துக்களில் இருந்து ……?