சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூபாய் 371 கோடி ஊழல் ! விடுவிப்பு பாஜகவின் கூட்டணி அரசியலா? – ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram

ஆந்திர பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் (APSSDC ) ன் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்த ரூபாய் 371 கோடி சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு . 

மேலும், இப் பிரச்சனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும் அமலாக்கத்துறை சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்து செய்தது. இது இவருடைய ஆட்சியில் 2014 – 2017 ல் நடந்த ஊழல் . தவிர, இப் பிரச்சனையில் ஆந்திரா மாநில அரசு இவர் மீது குற்றப் வழக்கு பதிவு செய்து ,இந்த வழக்கில் ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். 

இதில் 50 நாட்கள் சிறை சென்றார் . பிறகு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்து சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பெற்று முதலமைச்சராகவும் பதவி ஏற்றார் . தற்போது 371 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இப் பிரச்சனையில் சந்திரபாபு நாயுடுவை அமலாக்கத்துறை விடுவித்தது பாஜகவின் கூட்டணி அரசியலா? – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *