வன்னிய சமுதாயம், வன்னியர் சமுதாயத்தினாராலே ஏமாற்றப்பட்ட சமுதாயமாக ,வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. இது உண்மை. இந்த உண்மை கூட தெரியாதவர்கள், இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதும் தெரியாது. கேட்டதும் தெரியாது. நல்லவனும் தெரியாது. கெட்டவனும் தெரியாது.
இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இதன் நிலைமை அப்போது எப்படி இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்னும் காட்டுவாசியாக வாழ்ந்திருப்பார்கள். படிப்பறிவு இல்லை என்றாலும், மனசாட்சிக்கு, கடவுளுக்கு, சட்டத்திற்கு பயந்து தான், இந்த சமுதாயம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த சமுதாயம். விவசாயத்தை நம்பி வாழ்ந்த சமுதாயம். வேற எதுவுமே தெரியாது.
இப்படி வாழ்ந்த ஒரு சமுதாயத்தை முன்னுக்கு கொண்டு வருவதாக பேசியே கவிழ்த்து 40 ஆண்டு காலம் இட ஒதுக்கீடு பிரச்சனையை கையில் எடுத்து வன்னியர் சங்கமாக இருந்த ஒரு அமைப்பை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக ராமதாஸ் மாற்றி ,இந்த சமுதாயத்திற்காக ராமதாஸ் செய்தது என்ன ?என்று அனைத்து வன்னியர் சமூகங்களின் முக்கிய கேள்வி? குரல் கொடுப்பது வெத்து வெட்டு அரசியல். இந்த வேலையை தான் ராமதாஸ் செய்து கொண்டிருக்கிறார்.
இதுவரையில் ராமதாஸ் இந்த சமூகத்தை நன்றாக பயன்படுத்தி ,அதாவது அந்த காலத்தில் ஜாதி வெறியை தூண்டி, இந்த மக்களை ஜெயிலுக்கு அனுப்பி, இட ஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்து, ஜெயலலிதா, கருணாநிதி இவர்களிடம் அடமானம் வைத்து பல கோடிகளை பார்த்து ,ஒரு பத்து, இருபது தலைமுறைக்கு சொத்துக்களை சம்பாதித்துக் கொண்டதுதான் ராமதாஸின் சமூக மோசடி வேலை. இந்த சமுதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்தார் .
அதையும் திமுக ஆட்சியில், அந்த காலத்தில் கருணாநிதி செய்த சூழ்ச்சி வேலையை விட மு க ஸ்டாலின் அவர்கள் உறவினர்களே வழக்கு தொடர்ந்து, அதையும் இல்லாமல் செய்து விட்டார்கள். இதற்கெல்லாம் நிச்சயம் இந்த சமுதாயம் திமுகவையும், ராமதாசையும் வரும் தேர்தலில் வச்சு செய்ய காத்துக் கொண்டிருக்கிறது. கவலைப்பட வேண்டாம்.இதே வேலையை தான் ராம்தாஸ் பின்னால் இருக்கிற அத்தனை பேரும் செய்கிறார்கள். அதில் ஒன்று, இரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் 99 சதவீதம் இதையே பின்பற்றுகிறார்கள்.
இது தவிர, இன்று ஆயிரக்கணக்கில் ஜாதி அமைப்புகள், சங்கங்கள், இது எல்லாம் ஆரம்பித்து இந்த சமுதாயத்தை ஏமாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேலை. ஒருவர் கூட இதிலே உருபடியானவர்கள் தேர்வார்களா? என்று சந்தேகம். ஏதோ ஒன்று, இரண்டு தேறினால் அதுவே பெரிய விஷயம் தான் .தவிர, இந்த சமுதாயத்தில் நல்லதைப் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் நல்லவர்களை பாராட்டுபவர்கள் மிகவும் குறைவு. மேலும்,
ஒருவன் உழைத்து முன்னேறும் போது கூட அவனை தரை குறைவாக பேசுவதும் ,அவனைப் பற்றி பொறாமையால் வஞ்சிப்பதும் தான் வன்னிய சமுதாயத்தின் பேச்சு. இங்கே படித்தவர்கள் ,படிக்காதவர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான குடும்பங்கள், விதிவிலக்கானவர்கள் இருக்கிறார்கள்.
இதில் என்ன ஒரு முக்கிய சிறப்பு என்றால், அரசியல் கட்சிக்கு அல்லது ஜாதி அமைப்புக்கு தகுதி இல்லாதவர்கள் தான், பதவிக்கு இங்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இந்த சமுதாயம் அவர்களிடம் ஏமாந்து கொண்டிருக்கிறது. தகுதி இருப்பவர்களை பார்த்து இவர்கள் ஏளனம் செய்யும்போது ,தகுதி இல்லாதவர்கள் இவர்களை கடைசிவரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் .இப்படி ஒரு ஏமாந்த சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது வன்னியர் சமுதாயம். இதிலிருந்து எப்போது இவர்கள் உண்மையை திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்?.
உண்மையை தெரிந்து கொள்ளாமல், இந்த ஏமாற்று கூட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. அரசியலை படியுங்கள், நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள், நல்லவர்களை புரிந்து கொள்ளுங்கள், அது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும். நீங்கள் ஊரை ஏமாற்றும் கூட்டத்தின் பின்னால் சென்றால், உங்கள் தலையை சுத்தமாக வழித்து தான் அனுப்புவார்கள். அதுமட்டுமல்ல, ஊர் சொத்துக்களை பங்கு போட்டு சாப்பிடுவது தான் அவர்களுடைய முக்கிய வேலை. அதற்கு தான் வந்திருக்கிறார்கள் சமுதாயத்திற்கு சேவை செய்ய வரவில்லை . இதை இந்த சமுதாயம் எப்போது புரிந்து கொள்ளுமோ! யாருக்கு தெரியும் ?