சர்வதேச அளவில் சமூக பிரச்சினைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி கட்டுரைகள் போட்டியில் வெற்றி பெற்றார். முனைவர் சுபத்ரா செல்லத்துரை .

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி

குமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் சுபத்ரா செல்லத்துரை மதுரையில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் 3 மணி நேரத்தில் 1800 ஆராய்ச்சி கட்டுரைகள் ஜும் மற்றும் கூகுள் மீட் வழியாக அதிக பட்சமாக ஆராய்ச்சி கட்டுரைகள் கொடுத்து வெற்றியாளராக சாதனை படைத்துள்ளார். 

அதனால் , இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துரை இவருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும், இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, இந்தோனேசியா, ஸீலங்கா துபாய், கனடா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா போன்ற நாடுகளில் மற்றும் மாநிலங்களில் 200 பேராசிரியர்களும், 250 ஆராய்ச்சி கட்டுரையாளர்களும், 1000 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.

 இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழி காட்டியாக ஆய்வு கட்டுரைகள் விளங்கும் என்பது இதன் முக்கிய சிறப்பு. அதனால், இன்றைய மாணவ மாணவிகள் கல்வியாளராக தங்களை நிறுத்திக் கொள்ளாமல், சமூக வளர்ச்சிக்காக ஆராய்ச்சி செய்வது, உங்களுடைய பங்களிப்பு சமூகத்திற்கு மிகவும் அவசியம் என விளக்கியுள்ளார்.மேலும்,

சமூக பிரச்சினைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி கட்டுரைகள் போட்டியில்  சர்வதேச அளவில் கலந்துக் கொண்டவர்களில் முனைவர் சுபத்ரா செல்லத்துரை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெருமை பெற்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *