ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு பஞ்சாயத்து நடத்த தேவையில்லை. அவர்களே கூட்டுக் கொள்ளை நடத்திக் கொள்ளலாம். இதற்கு எதற்கு ஒரு பஞ்சாயத்து தேர்தல் நடத்த வேண்டும்?
அவர் ஒரு ஆயிரம், 500 கொடுத்து நான் தான் தலைவர் என்று கிராம மக்களை ஏலத்தில் எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவராக வந்திருக்கிறேன். அப்போது அறிவில்லாமல் வாங்கிக் கொண்டு என்னை தேர்ந்தெடுத்து விட்டார்களா? என்பது பஞ்சாயத்து தலைவர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அவர்களுடைய கேள்வி?
ஆனால், சமூக ஆர்வலர்களின் கேள்வி? பஞ்சாயத்து என்றால்! எப்படி இருக்க வேண்டும் ?அதனுடைய கணக்கு வழக்குகள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது இல்லையா? இதெல்லாம் இல்லாமல் கூட்டுக் கொள்ளை நடத்த பஞ்சாயத்து நிர்வாகமா? இந்த சட்டத்தை கொண்டு வந்தது யார்?
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எல்லா சட்டமும் மக்களிடம் எவ்வளவு வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது பார்த்தாயா?மேலும், 100 நாள் வேலை திட்டம் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிட்டது .எதை உருப்படியாக காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த திட்டம் என்ன? எதுவுமே இல்லை.இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக வந்துள்ளவர்.
திமுக கட்சியை சேர்ந்தவர். கணக்கு கேட்டால் எல்லாம் கட்சிக்காரர்கள் செய்கிறார்கள் .எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் என்று தெரிவிக்கிறாராம். கட்சிக்கும் ,கிராம பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் கட்சி வேலை பார்க்க வேண்டியதுதானே! ஏன்? கிராம பஞ்சாயத்து தலைவர் வேலைக்கு வந்தார் ?இந்த பஞ்சாயத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து ,ஜூன் மாதம் வரை உள்ள கணக்கில் சுமார் 6 லட்சம் மேல் வங்கியின் கணக்கிலிருந்து செலவு செய்துள்ளார்.
இந்த ஆறு லட்சம் என்பது சுமார் ஆறு மாத காலத்திற்குள் எழுதப்பட்ட செலவு கணக்கு ,இதில் என்னென்ன வேலை செய்தார்?அந்த பணி முக்கிய தேவையான பணியா? சாக்கடை சுத்தம் செய்தேன் என்று மூன்று லட்சத்திற்கு மேல் செலவு கணக்கு காட்டியுள்ளார். இதை எப்படி ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்து. இதை அப்ரூவல் செய்து இருக்கிறார்கள்? இந்த அப்ருவலை எப்படி மாவட்ட பொறியாளர் சரி என்று அப்ரூவல் தந்திருக்கிறார்?
இந்த கணக்கெல்லாம் சரியானது, உண்மையானது என்று வட்டார வளர்ச்சி அப்ரூவல் செய்து இருக்கிறார்? இவை அனைத்தும் சரி என்று இந்த கணக்குகள் முழுதும் ஆடிட்டிங் செய்யப்பட்டு எப்படி சரியானது? என்று தணிக்கை அதிகாரி தணிக்கை செய்து உள்ளார் ?அப்படி என்றால்! இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து, இது ஒரு கூட்டுக் கொள்ளை திட்டமாகத்தான் பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் சமூக ஆர்வலர்கள் தயவுசெய்து இனி பஞ்சாயத்து தேர்தல் தேவையில்லை என்று நீதிமன்றத்திலே வழக்கு தொடருங்கள் .அப்படி பஞ்சாயத்து தேர்தல் வேண்டும் என்றால்! எங்களுக்கு இந்த சட்டங்களை இந்த அதிகாரிகளும், பஞ்சாயத்து தலைவர்களும் கூட்டுக் கொள்ளை நடத்த முடியாதபடி சட்டத்தை மாற்றி பஞ்சாயத்து தேர்தல் நடத்துங்கள். அதுதான் சரியான தீர்வாக இருக்கும். இல்லை என்றால்! ஒவ்வொரு கிராமமும் தமிழ்நாட்டில் படுகின்ற பாடு கின்ற மக்கள் இந்த வேதனையை அவர்கள் சொல்லி புரிய வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற மிக முக்கிய பிரச்சனை .
இந்த பிரச்சனைக்கு உயர் நீதிமன்றமும் அல்லது உச்ச நீதிமன்றமும் தாமாக முன் வந்து கூட இந்த வழக்கை சுமோட்டாக கூட விசாரிக்கலாம். அந்த அளவிற்கு கிராம மக்கள் படும் வேதனை . நீதிமன்றம் முன் வருமா? .இனியாவது நாட்டுக்கு இந்த சட்டத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? என்று ஏங்குகின்ற கிராம நலன் சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் .