சின்ன சின்ன விஷயங்களை மீடியாக்களில் பெரிது படுத்தும் அரசியல் கட்சிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்டுவதில்லை ?

Uncategorized

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை விட, அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது. இதனால், நாட்டில் அரசியல் கட்சிகள் அதிகமாகி, மக்களிடம் பேச்சுப் போட்டி ,சோசியல் மீடியா போட்டி, மீடியாக்களில் போட்டி இப்படி போட்டிகள் தான் அதிகமாக இருக்கிறது.மேலும், 

ஒருவருக்கொருவர் வசை பாடி கொள்வது, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வது, இதுதான் அதிகமாக இருக்கிறதே ஒழிய மீடியாக்களில், மீடியாக்களும் அதை மக்களிடம் வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றுமே இல்லாத பாஜகவை சார்ந்த மத்திய பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் புதிய கல்லூரியின் திறப்பு விழா ஒன்றில் பேசியதை, அதாவது பட்டத்தை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்? சைக்கிள் கடை வைத்தாவது பிழைக்கலாம் . அவர் ஒரு மனித அபிமான எண்ணத்தில் கூட இதை பேசி இருக்கலாம். ஏனென்றால், இன்று எத்தனையோ படித்த இளைஞர்கள் பட்டம் பெற்றவர்கள் ,வேலையில்லாமல் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நாட்டில் வேலை வாய்ப்பு என்பது போட்டியாகி விட்டது.

 இதை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. இப்படி எல்லாம் பேசி நாட்டைக் எடுப்பதை விட, மக்களுக்கு ஒரு அரசியல்வாதியாவது நாம் என்ன செய்தோம்? என்ன செய்து இருக்கிறோம்? என்பதை ஒருவர் கூட சிந்திக்கவில்லை .அதைப்பற்றி எந்த ஊடகத்திலும், அவர்கள் செய்ததைப் பற்றி பேசுவதில்லை. அப்படி என்றால்! இவர்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு  பதிலாக, தங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகத்தான், அரசியலுக்கு வந்திருக்கிறார்களா? என்பதை அரசியல் ஆய்வாளர்களின் முக்கிய கருத்து.

 மேலும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் இரண்டும் இணைந்து நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு, தேர்தல் சட்டங்களை கடுமையாக்கப்பட வேண்டும். தேர்தல் என்றால்! மக்களை பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கும் தேர்தல் ஆக தேர்தல் நடத்துவது மற்றும் அதை ஜனநாயகத்தின் தேர்தல் என்று அரசியல் கட்சிகள் பேசுவது கேலிக் கூத்தான ஒன்று. 

அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல், சட்டத்தை மதிக்காமல், பல ஆயிரம் கோடிகளை வாக்காளர்களுக்கு செலவு செய்து வெற்றி பெற்றால், நாட்டில் ஊழலும், ரவுடிசமும் ஒழிக்க முடியாது . மேலும் இப்படி வெற்றி பெறுபவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை விட, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை தான் பூர்த்தி செய்து கொள்வார்கள். அதனால், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும். 

மேலும், மக்களுக்கும் ,தேர்தல் பற்றிய விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது சோசியல் மீடியாவாக இருந்தாலும் அல்லது நேரடி விழிப்புணர்வாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களிடம் ஒரு வலுவான நல்லாட்சி நாட்டுக்கு தேவையானது. அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *