
சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும்,
சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் நம்முடைய தலைவர் என்று நீ தேர்வு செய்து கொண்டால், அது உன்னுடைய முட்டாள்தனம்.
நிழல் வேறு, நிஜம் வேறு வாழ்க்கையும் அதுதான். இருட்டுக்குள் சினிமாவை காண்பிப்பார்கள். அந்த நேரம் வரைக்கும், இளைஞர்களின் மனதில் அவர் ஒரு ஹீரோவாக ஓடிக் கொண்டிருப்பார். இவர்களும் அதே கற்பனையில் மிதந்து கொண்டிருப்பார்கள். வெளிவந்தவுடன் அந்த கற்பனை தளத்திலே அந்த ஹீரோவை தலைவன் ஆக்கி விடுவார்கள்.

அவர் கட்சி ஆரம்பித்தால் தலைவா, என்று தலைவனை தேர்வு செய்து கொள்கிறார்கள். ஆனால், அரசியல் தெரியாமல் ஒரு தலைவனை தேர்வு செய்வது சரியாக இருக்குமா? அதுவும் சரியாக இருக்காது. போராடுவது வாழ்க்கையாகவே வைத்துக் கொண்டிருக்க முடியாது. போராட்டத்தில் வெற்றியை களத்தில் சந்திக்க கூடிய ஒருவன் தான் தலைவன். அது சாதாரண வேலையும் கிடையாது. சொல்வது சுலபம் செய்வது கடினம்.

மக்களைப் போராட வைத்து அவர்கள் வாழ்க்கையை நாசப்படுத்துவது ஒரு தலைவனின் தகுதி அல்ல.அப்படி நாசப்படுத்தி இவர் ஒருவர் மட்டும் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து கொள்வது இன்றைய அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலமாகிவிட்டது.

எனவே, அப்படி ஏமாந்த ஒரு சமூகம் தான் வன்னியர் சமூகம். ராமதாஸின் ஆரம்ப வாழ்க்கை என்ன? அதேபோல் தலித் சமூகமும் திருமாவளவன் போன்றவரிடம் ஏமாந்த சமூகமாகவே இருக்கிறது. அரசியலை தெரிந்து கொள்ளாமல் இவர்களுடைய பேச்சை நம்பி ஏமாறுகின்ற மக்கள் இன்னும் இவர்கள் பின்னால் சென்று ஏமாறுவார்கள்.

இந்த ஒவ்வொரு கட்சியிலும் யார் வளர்ந்திருக்கிறார்கள்? மக்களா? அல்லது கட்சியினரா? என்பதை இந்த கட்சி தலைவர்கள் வெளிப்படையாக சொல்லுவார்களா? இது அரசியல் தெரிந்த மக்களின் கேள்வி?